Body

டயலொக், ACCA விருதுகள் 2023இல் உன்னதமான பேண்தகுநிலை அறிக்கையிடலுக்கான அங்கீகாரத்தை பெற்றது

April 2nd, 2024         Colombo

 

Dr. Hans Wijayasuriya Receives GSMA Chairman's Award

இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ACCA Sustainability Reporting Awards 2023 இல் ‘பொது சேவைகள் பிரிவில்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. டயலொக் பேண்தகுநிலை மீது காட்டும் தீவிர அர்ப்பணிப்புக்கும் வெளிப்படையான அறிக்கையிடல் நடைமுறைகளுக்கும் இந்த அங்கீகாரம் ஒரு சான்று.

ACCA Sustainability Reporting Awards, பேண்தகுநிலையான வணிக நடைமுறைகளை போற்றும் வகையில் நிறுவப்பட்டது. பல்வேறு துறைகளிலிருந்தும் ஏராளமான புதுவரவுகள் வந்தவண்ணமிருக்க போட்டிமிகுந்த இத்துறையில் டயலொக் ஆசிஆட்டா அபரிமிதமான முறையில் பேண்தகுநிலை அறிக்கையிடலை மேற்கொண்டு தன்னிலையை நிரூபித்துக்காட்டியுள்ளது. டயலொக்கின் பேண்தகுநிலை அறிக்கையிடல், பரந்தளவில் கட்டமைக்கப்பட்ட அதன் அமைப்புக்கு பெயர்பெற்றது. நிறுவனத்தின் பேண்தகுநிலை செயற்பாடு பற்றிய விரிவான வெளிப்படையான வெளிப்படுத்தல் இதனை தனித்து காட்டியதுடன் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காக பாராட்டையும் பெற்றது.

டயலொக் பேண்தகுநிலை அறிக்கையிடலை அதன் தெளிவான விரிவான பொருளடக்கத்துக்காக ACCA நடுவர்கள் பாராட்டினர். முக்கியமாக அதன் நன்கு கட்டமைக்கப்பட்ட வடிவம், தயார்படுத்தல் குறித்த தெளிவான அடிப்படை, அணுக்கக்கூடிய தரவு காட்சிப்படுத்தல், பங்குதாரர் ஈடுபாட்டின் சுருக்கம் முதலிய குறிப்பிடத்தக்க சாதனைகளையும் அவர்கள் அடிக்கோடிட்டு காட்டினர். இதன் நிரூபிக்கப்பட்ட சுற்றுச்சூழல் முன்னேற்றங்கள், சமூகங்களுக்கு நல்ல தாக்கத்தை விளைவிக்கும் முதலீடுகள், எதிர்காலம் குறித்த அறிவுப்பூர்வமான பார்வை, இவற்றுடன் அவையில் 20% மகளிர் பிரதிநிதித்துவத்தை ஊக்குவிக்கும் பல்வகைமை மற்றும் பாகுபாடற்ற கொள்கைகளுக்காக பாராட்டப்பட்டது. மேலும், பேண்தகுநிலை கணக்கீட்டு தரநிலைகள் சபை அட்டவணையை உள்ளடக்கியமை அதன் முக்கியத்துவத்துக்காக கவனத்திற்கொள்ளப்பட்டது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் “ACCA Sustainability Reporting Awards இனால் நாம் அங்கீகரிக்கப்பட்டமை குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம்” என்றார். மேலும் தொடர்ந்த அவர் “பேண்தகுநிலையான அபிவிருத்தி மீது நாம் காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் எமது பங்குதாரர்களுடனான வெளிப்படையான தொடர்பாடல் ஆகியவற்றை சான்று பகர்வதே இந்த விருது. இந்த அங்கீகாரம் எமது மூல வணிக வியூகத்தில் பேண்தகுநிலையை ஒருங்கிணைப்பதில் நாம் காட்டும் அயராத உழைப்பை வலியுறுத்துகிறது. அத்துடன் எம் அனைவருக்கும் பேண்தகுநிலைமிக்க எதிர்காலத்தை உருவாக்குவதில் முன்னுதாரணமாக முன்னிற்கும் வகையில் பேண்தகுநிலை நடைமுறைகளை எமது தொழிற்பாடுகள் மற்றும் அறிக்கையிடலில் ஒருங்கிணைப்பதன் மூலம் இதற்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தை அறிந்திட முடியும்.

டயலொக் ஆசிஆட்டாவை பொருத்தமட்டில் இந்த விருது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். பேண்தகுநிலை அறிக்கையிடலில் தன்னை முன்னோடியாக நிலைநிறுத்த இது வழிவகுத்துள்ளது. மேலும், ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா மேற்கொண்ட கூட்டுத்தாபன அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மை (TRAC) மதிப்பீட்டில் டயலொக் முதலிடம் பிடித்தது. நிறுவனத்தின் ஆதார மதிப்புகளான சற்றும் விட்டுக்கொடுக்காத நாணயம் மற்றும் அபரிமிதமான செயற்பாடு ஆகியவற்றை இது எடுத்துக்காட்டுகிறது. தொலைபேசி தொடர்பாடலுக்கான பூகோள அமைப்பின் சங்கம் (GSMA) மற்றும் பேண்தகுநிலை கணக்கிடல் தரநிலைகள் சபை (SASB) ஆகியவற்றின் தரநிலைகளுக்கு இணங்கிய தெற்காசியாவின் முதல் தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனர் டயலொக் ஆகும். இலங்கையில் தொடர்ந்தும் வெளிப்படைத்தன்மை மற்றும் பேண்தகுநிலை நடைமுறைகளில் உயர் வரையறைகளை நிறுவனம் வகுத்துவருகிறது. கூட்டுத்தாபன பொறுப்புணர்வு குறித்த உரையாடலுக்கும் சுற்றுச்சூழல் பராமரிப்பிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துவருகிறது.