Body

‘Sew Desatama Dialog’ முயற்சியில் அனுராதபுரம், கோனபத்திராவ பகுதியில் புதிய கோபுரம் நிர்மாணிக்கப்பட்டது

2023 மார்ச் 21         கொழும்பு

 

Sew Desatama Dialog

அநுராதபுரம் கோனபத்திராவ பிரதேசத்தில் ‘Sew Desatama Dialog’ முயற்சியின் கீழ் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கோபுரம் டயலொக் பிரதிநிதிகளால் திறந்துவைக்கப்பட்டது

இலங்கையின் முதற்தர வலையமைப்பான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தனது "Sew Desatama Dialog" செயற்றிட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள கிராமங்கள் மற்றும் நாட்டுப்புற சமூகங்களுக்கு, தொடர்பிணைப்பை விரிவுபடுத்தித் தரும் வாக்குறுதிக்கமைய அண்மையில் அனுராதபுரம் மாவட்டத்தில் கோனபத்திராவ பகுதியில் கோபுரம் ஒன்றை நிறுவி ஆரம்பித்து வைத்தது.

Sew Desatama Dialog செயற்றிட்டத்தின் கீழ் கோபுரங்களை இயக்குவது நாட்டின் ஒட்டுமொத்த தொடர்பிணைப்பை மிகைப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக சிறந்த தகவல்தொடர்புடன் கல்வி வளங்களுக்கான எளிதான அணுகுமுறை மூலம் இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தியுள்ளது. கோனபத்திராவ கோபுரத்திற்கு மேலதிகமாக, அனுராதபுர மாவட்டத்தில் சங்கத்தேவ மற்றும் லபுனொறுவ ஆகிய இடங்களிலும் பொலன்னறுவை மாவட்டம் ஹபரன கெலிஓயா, ஹபரண மின்னேரியா மற்றும் மகுல்பொக்குன ஆகிய இடங்களிலும் கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்த நிச்சயமற்ற காலங்களில் பரவெல்லையை விரிவுபடுத்துவதற்கும் வாடிக்கையாளர்களை ஆதரவளிப்பதற்கும் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக, 2022 ஆம் ஆண்டு நிறைவடையும் போது டயலொக் நிறுவனமானது 4700 மொபைல் 4G தளங்களை தனது வலையமைப்பின் மூலம் அடையப் பெற்றுள்ளது. Green field கோபுரங்களை பயன்படுத்தி, உள்ளார்ந்த கிராமப்புற சமூகங்களுக்கு தன் பரவெல்லையை விரைவாக விரிவுபடுத்தியுள்ளதுடன் அடர்த்தியான பகுதிகளில் அவசரத் திறன் தேவைகளைப் பூர்த்தி செய்யயும் பொருட்டு Lamp Pole தீர்வுகளையும் வழங்கியுள்ளதன் மூலம் 95% 4G டேட்டா பரவெல்லையை பயன்படுத்தும் மக்கள்தொகையை Dialog தன்னகப்படுத்தியுள்ளது.

டயலொக்கின் பரவெல்லை தடத்தை விரிவுபடுத்துவதற்கான அர்ப்பணிப்பு உலகளாவிய வலையமைப்புகள் சோதனையாளர்களால் அடையாளங் காணப்பட்டு, திறந்தவெளித் தொடர்பில் 'சிறந்த 4G பரவெல்லை அனுபவம்' மற்றும் 'விரைவான பதிவேற்ற, பதிவிறக்க வேக அனுபவம்' போன்ற அடைமொழித் தலைப்புகள் அளிக்கப்பட்டு அங்கீகரிக்கப் பெற்றுள்ளது.