Body

DIALOG-SLESA All-Island Free Fire போட்டித் தொடரின் 1 மில்லியன் ரூபாய் வெற்றிப் பரிசை தட்டிச் சென்ற மொனராகலை.

டிசம்பர் 23, 2022         கொழும்பு

 

All lsland free fire championship trophy

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும சந்தைப்படுத்தல் வர்த்தக மற்றும் ஊடக பிரிவு, உப தலைவர் ஹர்ஷ சமரநாயக்க அவர்களிடமிருந்து SLESA All lsland free fire championship trophy ஐ மொனராகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் nA NEVERSTOP அணியின் தலைவர் லிகிந்து டி சில்வா பெற்றுக்கொண்டார்.
மேலும் படத்தில் (இடமிருந்து வலம்) : டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும சந்தைப்படுத்தல் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பிரிவு தலைவர் முகம்மது கஸ்ஸாலி, இலங்கை ஈ-ஸ்போர்ட்ஸ் சங்கத்தின் தலைவர் ரவீன் விஜயதிலக, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் கேமிங் சேவைகள் தயாரிப்பு முகாமையாளர் அமித் பெரேரா

nA NEVERSTOP celebrating their Victory

கிண்ணத்தை மொனராகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் nA NEVERSTOP அணி பெற்றுக்கொண்டது
nA NEVERSTOP அணியின் தலைவர் - லிகிந்து டி சில்வா மற்றும் குழுவினர் தங்கள் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்.
மேலும் படத்தில் (இடமிருந்து வலம்) : சமூக ஊடக ஆளுமையாளர் - Chanux Bro, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும சந்தைப்படுத்தல் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பிரிவு தலைவர் முகம்மது கஸ்ஸாலி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும சந்தைப்படுத்தல் வர்த்தக மற்றும் ஊடக பிரிவு, உப தலைவர் ஹர்ஷ சமரநாயக்க, இலங்கை ஈ-ஸ்போர்ட்ஸ் சங்கத்தின் தலைவர் ரவீன் விஜயதிலக, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் கேமிங் சேவைகள் தயாரிப்பு முகாமையாளர் அமித் பெரேரா

All-Island Free Fire

அனுராதபுர மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் Wolf Gang's INFINITY ENDGAME அணியின் திலின பெரேரா, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும சந்தைப்படுத்தல் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பிரிவு தலைவர் முகம்மது கஸ்ஸாலி இடமிருந்து பெறுமதிமிக்க வீரருக்கான விருதை பெறுகின்றார்.
மேலும் படத்தில் (இடமிருந்து வலம்) : டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும சந்தைப்படுத்தல் வர்த்தக மற்றும் ஊடக பிரிவு, உப தலைவர் ஹர்ஷ சமரநாயக்க, இலங்கை ஈ-ஸ்போர்ட்ஸ் சங்கத்தின் தலைவர் ரவீன் விஜயதிலக, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் கேமிங் சேவைகள் தயாரிப்பு முகாமையாளர் அமித் பெரேரா

அண்மையில் நடைபெற்ற DIALOG-SLESA All Island Free fire Championship - மாவட்ட ரீதியான தேசிய விளையாட்டுப் போட்டியின் முதலாவது வெற்றியாளர் எனும் பட்டத்தை மொனராகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் Noob Alliance இன் அணி nA Neverstop அணி தன்வசப்படுத்தியது .

இலங்கையின் முதற்தர தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான Dialog Axiataவினால் ஒழுங்கு செய்யப்பட்டு, 1 மில்லியன் ரூபா பெறுமதியான பரிசுத்தொகை எனும் இலக்குடன், சிறந்த Esports திறமையாளர்களை ஒன்றிணைத்து நடாத்தப்பட்ட இலங்கையின் முன்னணி போட்டித்தொடரான இது, நான்கு மாத காலம் தொடர்ந்த தீவிர Online Gaming அமர்வுகளைத் தொடர்ந்து அண்மையில் முடிவடைந்தது.

சாம்பியன்ஷிப்பில் 2,000 க்கும் மேற்பட்ட இலங்கை free fire வீரர்கள் குழு நிலை, அரையிறுதி மற்றும் மாவட்ட இறுதிப் போட்டியின் மூலம் தங்கள் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெற, கடினமான தகுதிகாண் சுற்றில் பங்கேற்றனர். மாவட்ட இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணிகள் பின்னர் அகில இலங்கை ரீதியிலான அரையிறுதிச் சுற்றில் பங்கேற்றன, அதன்பின் முதல் 12 அணிகள் மிக முக்கியமான 2-நாள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. தகுதி பெற்ற 12 அணிகள்; அம்பாறை (Ae-S SLR GHOST), மொனராகலை (nA NEVERSTOP), மட்டக்களப்பு (nA Archangels A), அனுராதபுரம் (WG INFINITY ENDGAME), கண்டி (nA NEGU SL), களுத்துறை (FAKE HAWK), நுவரெலியா (RK TRIPLE) , யாழ்ப்பாணம் (Me-S MOSTWANTED ELLITE), காலி (Me-S Brtherhood), திருகோணமலை (Me-S BRAIN DEADZ), கொழும்பு (4 கேள்விகள்) மற்றும் கிளிநொச்சி (JUSTICE X) ஆகியவை ஆகும்.

மொனராகலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய nA Neverstop அணியானது போட்டி முழுவதிலும் மேலாதிக்கம் செலுத்தியதுடன் இறுதிச் சுற்றில் 181 புள்ளிகளைப் பெற்றிருந்த அனுராதபுரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Wolf Gang இன் INFINITY ENDGAME ஐ இரண்டாம் இடத்துக்குத் தள்ளி, அவர்களை விட 44 புள்ளிகள் முன்னிலையுடன் சாம்பியன்ஷிப்பைப் பெற்றது. அம்பாறையைச் சேர்ந்த Ae-S SLR GHOST அணி 156 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைத் தக்கவைத்தது.

2-நாட்கள் நடைபெற்ற Grand Finals இல் 40 eliminationsகளுடன், Wolf Gang இன் INFINITY ENDGAME (அனுராதபுரம்) இலிருந்து திலின ‘ஜெஸ்டர்’ பெரேரா தனது அபார திறமையால் தனித்து நின்று இறுதிப் போட்டியின் MVP ஆனார். போட்டி நெடுகிலும் பல சிறந்த திறமையாளர்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும், Me-S BROTHERHOOD (காலி) அணியைச் சேர்ந்த செமின் ‘BOH xDREAM’ தமாஷ் 114 eliminationsகளுடன் தன்னை சிறந்த வீரர் என நிலைநாட்டினார்.

“இந்த மாவட்ட அளவிலான நிகழ்வின் மூலம் இலங்கையின் ஒவ்வொரு மூலைக்கும் Esports ஐ கொண்டு செல்ல நாங்கள் முயற்சிக்கிறோம், அதற்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 2,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இப்போது சர்வதேச விளையாட்டுகளின் மிக உயர்ந்த மட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ள இந்த கட்டமைக்கப்பட்ட Esports இல் பங்கேற்றனர். எதிர்காலத்தில் இலங்கையின் Esports விளையாட்டு வீரர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று வருவார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

SLESA ஆனது 2012 இல் Gamer.LK ஆல் 4 ஸ்தாபக உறுப்பினர்களுடன் இணைந்து நிறுவப்பட்டது, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரமுறையில் நாட்டில் விளையாட்டுத் துறை வளர்ச்சியடைய தொடர்ந்து இந்நிறுவனம் வழிவகுத்து வருகிறது . கேம் வெளியீட்டாளரான Garenaவின் ஒப்புதலுடன் SLESA இன் மூலோபாய கூட்டாளியான Gamer.LK மூலம் இந்த சாம்பியன்ஷிப் தொடர் ஆதரிக்கப்பட்டது.

Dialog Axiata இலங்கை தேசிய கிரிக்கெட், கைப்பந்து, வலைப்பந்து அணிகள் மற்றும் Esports ஆகியவற்றின் அனுசரணையாளர் என்பதில் பெருமை கொள்கிறது. President’s Gold Cup Volleyball, தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி மற்றும் பிரீமியர் கால்பந்து போன்றவற்றுடன் இந்நிறுவனம் நெருங்கிய தொடர்பை பேணிவருவதுடன், இராணுவ பரா விளையாட்டுகள், தேசிய பரா விளையாட்டுக்கள் மற்றும் உலக பராலிம்பிக்கிற்கான இலங்கைக் குழு என்பவற்றை வலுவூட்டுவதனூடாக பராலிம்பிக் விளையாட்டுகளுடனும் தன்னை தொடர்புபடுத்திக் கொள்கிறது