கிரிக்கெட் திறமைகளையும் சாதனையாளர்களையும் கௌரவிக்கும் 'Dialog Sri Lanka Cricket Awards 2025'
முதன்மை அனுசரணையாளராக டயலொக் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடிப்பு
2026 ஆகஸ்ட் 04 கொழும்பு
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழும முதன்மை நிறைவேற்று அதிகாரி திரு. சுபுன் வீரசிங்க (இடமிருந்து 3ஆவது) 'Dialog Sri Lanka Cricket Awards' விழாவிற்கான அனுசரணைக் காசோலையை, இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவின் தவிசாளர் திரு. எரான் விக்கிரமரத்னவிடம் (இடமிருந்து 4ஆவது) வழங்கி வைக்கிறார்
படத்தில் (இடமிருந்து வலமாக): திரு. ஹர்ஷ சமரநாயக்க (துணைத் தலைவர் - குழும சந்தைப்படுத்தல், டயலொக் ஆசிஆட்டா), திரு. ஆஷ்லி டி சில்வா (முதன்மை நிறைவேற்று அதிகாரி, இலங்கை கிரிக்கெட்), திரு. சுபுன் வீரசிங்க (குழும முதன்மை நிறைவேற்று அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா), திரு. எரான் விக்கிரமரத்ன (தவிசாளர், இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு), திரு. லசந்த தெவரப்பெரும (குழும முதன்மை சந்தைப்படுத்தல் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா) மற்றும் திரு. உபுல் நவரத்ன பண்டார (சந்தைப்படுத்தல் பிரதானி, இலங்கை கிரிக்கெட்).
இலங்கையின் முதன்மைத் தொடர்புச் சேவை வழங்கி நிறுவனமும் விளையாட்டுத் துறையின் தீவிர ஆதரவாளருமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் அனுசரணையுடன் நடைபெறும் '2025 Sri Lanka Cricket Awards' விழா, வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி Cinnamon Life ஹோட்டலில் நடைபெறவுள்ளது. மேலும், இந்த வருடாந்த விருது விழாவின் முதன்மை அனுசரணையாளராக டயலொக் நிறுவனம் தனது பங்களிப்பை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது. 13 ஆண்டுகளுக்கும் மேலாக டயலொக் மற்றும் இலங்கை கிரிக்கெட் இடையே நிலவி வரும் இக்கூட்டாண்மையானது, இளையோர் அபிவிருத்தி முதல் தேசிய அணிகள் வரை அனைத்து மட்டங்களிலும் நாட்டின் கிரிக்கெட் விளையாட்டிற்கு டயலொக் வழங்கி வரும் ஆதரவைத் தொடர்ந்து உறுதிப்படுத்துகிறது.
இந்த வருடாந்த விருது வழங்கும் விழா, சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய இலங்கையின் முன்னணி ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளின் சாதனைகளைக் கௌரவிக்கவுள்ளது. நாட்டின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் வளர்ந்து வரும் வீரர்களைக் கௌரவிக்கும் வகையில், நாட்டின் மிக எதிர்பார்க்கப்படும் கிரிக்கெட் நிகழ்வுகளில் ஒன்றாக இது மாறியுள்ளது.
இந்நிகழ்வின் பிரதான கௌரவங்களாக ஆண்டின் சிறந்த ஆண் கிரிக்கெட் வீரர் (Men's Cricketer of the Year) மற்றும் ஆண்டின் சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை (Women's Cricketer of the Year) ஆகிய விருதுகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் (Emerging Cricketer of the Year) விருதானது நாட்டின் இளம் திறமையாளர்களைக் கௌரவிக்கவுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டுக்காக பல சர்வதேசப் பிரிவுகளின் கீழும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. மேலும், 23 வயதுக்குட்பட்டோர் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் உட்பட Premier League Tournament, Premier League Limited Over Tournament மற்றும் கிளப் டி20 போட்டிகளில் சிறந்த திறமையை வெளிப்படுத்திய உள்நாட்டு வீரர்களும் கௌரவிக்கப்படுவர். இலங்கை கிரிக்கெட் விருதுகளுக்கு டயலொக் தொடர்ந்து வழங்கி வரும் இந்த ஆதரவானது, வளர்ந்து வரும் திறமைகளை ஊக்குவிப்பது முதல் உயர்மட்டச் சாதனைகளைக் கொண்டாடுவது வரை இலங்கை கிரிக்கெட்டிற்கான அதன் நீண்டகால அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது.
In line with Dialog's commitment to Powering the Champions of Tomorrow, the company is proud to present the Emerging Cricketer of the Year Award. Through initiatives such as the Dialog Big Match Season, Dialog has consistently invested in school cricket, providing young talent with opportunities to develop and showcase their potential. The Emerging Cricketer of the Year Award reflects the next step in that journey, recognising outstanding young players as they progress to the national stage. By celebrating tomorrow's stars today, Dialog continues to Connect the Future, Power the Present, while reinforcing its commitment to the sustainable growth of Sri Lankan cricket.
நாளை வெல்லும் சாம்பியன்களுக்கு வலுவூட்டுதல்" (Powering the Champions of Tomorrow) என்ற தனது அர்ப்பணிப்பிற்கு அமைவாக, 'ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்' விருதை வழங்குவதில் டயலொக் பெருமிதம் கொள்கிறது. 'Dialog Big Match Season' போன்ற முன்னெடுப்புகள் ஊடாக, பாடசாலைக் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக முதலீடு செய்து வரும் டயலொக், இளம் திறமையாளர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் அதை வெளிப்படுத்தவும் நல்வாய்ப்புகளை வழங்கி வருகிறது. 'ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்' விருதானது, அவ்வாறு படிப்படியாக முன்னேறி தேசிய மட்டத்திற்கு வரும் சிறந்த இளம் வீரர்களைக் கௌரவிக்கும் வகையில் அந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாக அமைகிறது. இவ்வாறு நாளைய நட்சத்திரங்களை இன்றே கொண்டாடுவதன் மூலம், "எதிர்காலத்தை இணைத்து, நிகழ்காலத்திற்கு வலுவூட்டும்" டயலொக், இலங்கை கிரிக்கெட்டின் நிலையான வளர்ச்சிக்குமான தனது அர்ப்பணிப்பையும் மேலும் உறுதிப்படுத்துகிறது.
இக்கூட்டாண்மை குறித்து கருத்துத் தெரிவித்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும முதன்மை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்க, "கிரிக்கெட் விளையாட்டுக்கு, பகிரப்பட்ட பேரார்வத்தின் மூலம் தலைமுறைகள் மற்றும் சமூகங்களைக் கடந்து இலங்கையர்களை ஒன்றுபடுத்தும் ஒரு அசாதாரண ஆற்றல் உள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எம்மோடு தொடர்ச்சியாகக் கொண்டிருக்கும் இக்கூட்டாண்மைக்கு நன்றி தெரிவிப்பதுடன், எமது கிரிக்கெட் வீரர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதில் பெருமையடைகிறோம்," எனக் குறிப்பிட்டார்.
டயலொக் நிறுவனம் தேசிய கிரிக்கெட், கைப்பந்து மற்றும் ஈஸ்போர்ட்ஸ் (Esports) அணிகளின் பெருமைமிக்க அனுசரணையாளராக விளங்கி வருகிறது. அத்துடன் Sri Lanka Golf Open போட்டியின் முதன்மை அனுசரணையாளராகவும், தேசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் (National Para Games) மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கான இலங்கை அணிக்கு ஆதரவளிப்பதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுக்களையும் பலப்படுத்தி வருகிறது. மேலும், நாளை வெல்லும் சாம்பியன்களுக்கு வலுவூட்டும் நோக்கத்தின் அடிப்படையில், ஜனாதிபதி தங்கக் கோப்பைக் கைப்பந்து சாம்பியன்ஷிப், தேசிய இளையோர் மற்றும் சிரேஷ்ட நெட்போல் போட்டிகள், பாடசாலைகள் ரக்பி ஆகியவற்றுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. அத்துடன் இலங்கை தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்புப் பங்காளராக, ' Los Angeles 2028' ஒலிம்பிக் போட்டிகளை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கும் டயலொக் வலுவூட்டி வருகின்றது.