டயலொக் - ஸ்டார் பொய்ண்ட்ஸ் இணைந்து வாழ்த்து அட்டைகளை AI (செயற்கை நுண்ணறிவு) மூலம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது
2024 ஜூன் 03 கொழும்பு
இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, Star Points உடன் இணைந்து, இலங்கையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் தனிப்பட்ட ரீதியில் வடிவமைக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளை அறிமுகப்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) யுகத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையிலான உங்கள் உறவை இன்னும் நெருக்கமாக்கிட செயற்கை நுண்ணறிவின் அபார சக்தியைப் பயன்படுத்தும் இந்த முன்னெடுப்பு, அன்றாட வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை எடுத்துக்காட்டும் ஒரு படியாகும்.
செயற்கை நுண்ணறிவு துரிதமாக வளர்ந்து வரும் துறையாக இருப்பதுடன், பயனர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை மாற்றியமைக்கும் திறனைக் கொண்டுள்ளது. இந்த அறிமுகம், தொடர்ந்து புத்தாக்கப்பாதையில் முன்னே செல்வதற்கு டயலொக் காட்டும் அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. புதிய தனிப்பயனாக்கப்பட்ட வாழ்த்து அட்டை சேவை, எதிர்காலத்தில் நாம் காணவிருக்கும் பல உற்சாகமூட்டும் விடயங்களின் ஒரு துளி மாத்திரமே, இது படைப்பாற்றல், தனிப்பயனாக்கம் மற்றும் அர்த்தமுள்ள இணைப்புகளை வளர்க்கும் செயற்கை நுண்ணறிவின் நிஜ உலக பயன்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் பிரதம மென்பொருள் கட்டமைவு வடிவமைப்பாளர் மற்றும் குழும பிரதம புத்தாக்க அதிகாரி அந்தோனி றொட்றிகோ அவர்கள் கருத்து தெரிவிக்கையில், "டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தில், எமது வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டுவதற்கும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் தொழில்நுட்பத்தின் புதிய எல்லைகளை தொடர்ந்து கண்டறிந்து வருகிறோம். இலங்கையில் முதன் முதலாக செயற்கை நுண்ணறிவு வடிவமைக்கும் வாழ்த்து அட்டைகளை அறிமுகப்படுத்துவது, எமது செயற்கை நுண்ணறிவு பயணத்தில் ஒரு மைல் கல்லாகும். இந்த புதுமையான சேவை, பயனர்கள் தனித்துவமான மற்றும் புத்தாக்கமான முறையில் தம் அன்பை வெளிப்படுத்தவும், அன்புக்குரியவர்களுடன் வலுவான உறவுகளை வளர்த்துக் கொள்ளவும் உதவுகிறது. இலங்கையில் செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னோடியாக இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகின்றோம், மேலும் இந்த தொழில்நுட்பம் நமது தினசரி அனுபவங்களின் பல அம்சங்களை மாற்றியமைக்கும் திறன் கொண்டது என நம்புகிறோம்" என்றார்.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம வாடிக்கையாளர் அதிகாரி சாண்ட்ரா டீ ஸொய்சா “நாட்டின் முதன்மையான loyalty திட்டமாக, Dialog Star Points எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு இலங்கையின் முதல் செயற்கை நுண்ணறிவு வடிவமைக்கும் தனிப்பயனாக்கப்பட்ட வாழ்த்து அட்டை முன்னெடுப்பை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகின்றது. இப்போது வாடிக்கையாளர்கள் தமது points ஐப் பயன்படுத்தி தங்கள் அன்புக்குரியவர்களுக்கு தாம் விரும்பியவாறு வாழ்த்து அட்டைகளை வடிவமைத்து அன்பை ஆத்மார்த்தமாக பரிமாறிக்கொள்ளலாம். இது வாடிக்கையாளர் அனுபவத்தையும் விசுவாச ஈடுபாட்டையும் மேம்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். மேலும் இத்தகைய கண்டுபிடிப்புகள் இலங்கையில் loyalty திட்டப் பரப்பின் எதிர்காலத்தை மாற்றியெழுதும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்று மேலும் கூறினார்.
வாடிக்கையாளர்கள் செயற்கை நுண்ணறிவின் எண்ணிலடங்கா சாத்தியங்களை தமதாக்கி வருடம் முழுவதும் அன்புக்குரியவர்களுடன் தனிப்பட்ட ரீதியில் வடிவமைத்த வாழ்த்துக்களை உருவாக்கி பகிர்ந்து கொள்வதற்கான இந்த புதுமையான வளத்தை அனுபவித்திட டயலொக் தனது வாடிக்கையாளர்களை அழைக்கிறது. வாடிக்கையாளர்கள்
aicards.ideamart.io என்ற இணையத்தளத்திற்குச் சென்று தங்கள் அட்டையை உருவாக்கலாம். செயன்முறை மிகவும் எளிமையானது. கிடைக்கக்கூடிய இலவச டெம்ப்லேட்களில் இருந்து தேர்ந்தெடுப்பது அல்லது Star Pointsஐ Platform Creditகளாக மாற்றுவதன் மூலம் செயற்கை நுண்ணறிவு வடிவமைப்பாளர் அம்சத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட விருப்பிற்கேற்ப வடிவமைத்த படத்தை உருவாக்குவது ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். பின்னர் தனிப்பட்ட ரீதியில் வடிவமைத்த செய்யப்பட்ட அட்டைகளை பதிவிறக்கம் செய்து, சக ஊழியர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது சமூக ஊடகங்களில் பதிவிடலாம்.