தெற்காசியாவின் முதலாவது 5G Ultra eSIM MiFi சாதனத்தை டயலொக் அறிமுகம் செய்கிறது: எங்கு சென்றாலும் அதிவேக இணைப்புச் சேவை
2026 செப்டம்பர் 10 கொழும்பு
இலங்கையின் முதன்மை இணைப்புச் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தெற்காசியாவின் முதலாவது eSIM ஆற்றல் மற்றும் Wi-Fi 6 தொழில்நுட்பத்தைக் கொண்ட 5G Ultra MiFi சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணத்தின் போது அதிவேக மற்றும் நம்பகமான இணைப்புச் சேவையைப் பெறுவதற்கு இது ஒரு சக்திவாய்ந்த, எடுத்துச்செல்லக்கூடிய (portable) இணையத் தீர்வாக அமைகிறது. அனைத்து 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய 1,000 க்கும் மேற்பட்ட நேரடி 5G தளங்களைக் கொண்டு, இலங்கையின் மிகப்பெரிய மற்றும் அதிவேகமாக வளர்ந்து வரும் 5G வலையமைப்பின் மூலம், அடுத்த தலைமுறை இணைப்புச் சேவையில் தனது முன்னணியை டயலொக் இதன் மூலம் மேலும் வலுப்படுத்துகிறது.
தொழில்முறை நிபுணர்கள், வணிகங்கள், மாணவர்கள், பயணிகள் மற்றும் குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்ட 'Dialog 5G Ultra MiFi', பயனர்கள் வசிக்கும், பணிபுரியும் அல்லது பயணிக்கும் இடங்களில் வேகமான மற்றும் நம்பகமான இணையத்தை வழங்குகிறது. சிறிய வடிவிலான இந்த plug-and-play சாதனம், தொலைதூரப் பணி (remote work), வணிகப் பயணம், தற்காலிகப் பணிவிடங்கள் மற்றும் பேக்அப் (backup) இணையத் தேவைகளுக்கு மிகவும் ஏற்றதாகும். மேலும், நிலையான பிராட்பேண்ட் (fixed broadband) வசதி இல்லாத இடங்களுக்கும் அதிவேக இணைய இணைப்பை இது விரிவாக்குகிறது.
தெற்காசியாவின் முதலாவது eSIM ஆற்றல் கொண்ட 5G Ultra eSIM MiFi சாதனமான இது, டயலொக்கின் 5G Ultra மற்றும் 4G ஆகிய இரு வலையமைப்புகளையும் ஆதரிக்கிறது. நவீன Wi-Fi 6 தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள இச்சாதனம், ஒரே நேரத்தில் 16 இணைக்கப்பட்ட சாதனங்கள் வரை ஆதரிப்பதுடன், இதன் 5000mAh பேட்டரி 16 மணிநேரம் வரை தொடர்ச்சியாகப் பயன்படுத்தக்கூடிய ஆற்றலை வழங்குகிறது. Type-C USB இணைப்பு வசதியானது லேப்டாப்கள், டேப்லெட்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஏனைய Wi-Fi வசதி கொண்ட சாதனங்களில் இணையத்தை எளிதாகப் பயன்படுத்த மேலதிக நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது.
இந்த அறிமுகமானது, இலங்கையின் முன்னணி eSIM புத்தாக்க நிறுவனம் என்ற டயலொக்கின் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது. 'eSIM One Number' மற்றும் 'eSIM Quick Transfer' போன்ற முன்னோடிச் சேவைகளைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் இணைப்பு அனுபவங்களை மிகவும் எளிமையானதாகவும், புத்திசாலித்தனமானதாகவும், தடையற்றதாகவும் டயலொக் தொடர்ந்து மாற்றி வருகிறது.
இது குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழுமத் தலைமை செயல்பாட்டு அதிகாரி லிம் லி சான் கருத்து தெரிவிக்கையில், "இன்றைய காலத்தில் இணைப்புச் சேவையானது மனிதர்களின் நகர்வுகளுக்கு ஏற்ப அமைய வேண்டும். தொலைதூரப் பணியில் ஈடுபட்டாலும், பயணம் செய்தாலும் அல்லது பல சாதனங்களை இணைத்துப் பயன்படுத்தினாலும், வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்திலேயே வேகமான மற்றும் நம்பகமான இணையத்தை எதிர்பார்க்கிறார்கள். இலங்கையின் மிகப்பெரிய 5G வலையமைப்பை நாங்கள் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வரும் அதே வேளையில், அதன் முழு திறனையும் வெளிப்படுத்தும் சாதனங்களின் சூழமைப்பையும் (ecosystem) வளர்த்து வருகிறோம். தெற்காசியாவின் முதலாவது 5G Ultra eSIM MiFi அறிமுகமானது, அனைத்து இலங்கையர்களுக்கும் அடுத்த தலைமுறை இணைப்புச் சேவையை மிகவும் அணுகக்கூடியதாகவும், நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும், வசதியானதாகவும் மாற்றுவதற்கான மற்றொரு அடியாகும்" என்று கூறினார்.
Dialog 5G Ultra MiFi சாதனமானது, Dialog Ultra 1495, 1895, 2595, 2995 மற்றும் 3999 உள்ளிட்ட Dialog Ultra திட்டங்களுடன் தடையின்றி இயங்குகிறது. இத்திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு 5G வசதி உள்ள இடங்களில் Dialog 5G Ultra இணைப்பையும், ஏனைய இடங்களில் 4G மூலமான தொடர்ச்சியான இணைப்பையும் அனுபவிக்க உதவுகின்றன.
eSIM வசதியுடன்கூடிய Dialog 5G Ultra MiFi சாதனத்தின் விலை LKR 39,990 ஆகும். இச்சாதனத்தை https://dialog.lk/ இணையதளம் மூலமாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட டயலொக் விற்பனை நிலையங்கள் மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும். credit card பங்காளிகள் மூலம் 60 மாதங்கள் வரையிலான இலகு தவணை செலுத்தும் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட டயலொக் விற்பனை நிலையங்களில் இச்சாதனத்தைக் கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்கள், உரிய Club Vision தள்ளுபடிகளையும் பெற்றுக்கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு https://dialog.lk/accessories/dialog-5g-ultra-mifi-mf511 இற்கு செல்லவும்.