Body

Dialog's Innovation Challenge இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு அனைத்து புத்தாக்குனர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது

2023 ஒக்டோபர 19         (கொழும்பு)

 

Dialog's Innovation Challenge

இலங்கையின் முதன்மை தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, Dialog Innovation Challenge (டயலொக் புத்தாக்க சவால்) இல் இணையுமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது, இது டிஜிட்டல் மாற்றம் மூலம் நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கும் தேசத்தின் டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்குவதற்குமான ஒரு தேசிய முன்னெடுப்பாகும்.

மேற்படி தேசிய முன்னெடுப்பானது, தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மூலம் இலங்கையின் தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் சமூகங்களின் வாழ்வை வளப்படுத்துவதற்கான பொதுவான இலக்கை நோக்கி அவர்களின் புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றலை வழிநடத்துவதற்கு நாட்டின் சிறந்த சிந்தனையாளர்களையும் தொலைநோக்குப் பார்வையாளர்களையும் அழைக்கின்றது. முன்மொழியப்படும் தீர்வுகள் புதுமையின் கலங்கரை விளக்கமாக அமைவதுடன், சந்தையை மறுவடிவமைக்கின்ற அல்லது ஏற்கனவே உள்ள செயல்முறைகளை உயர்த்தும் திறன் கொண்டதாக இருத்தல் வேண்டும். பங்கேற்பாளர்கள் முடிவின் எந்த நிலையிலும் உள்ள தீர்வுகளை சமர்ப்பிக்கலாம், அது ஒரு முன்மாதிரி, குறைந்தபட்ச சாத்தியமான தயாரிப்பு அல்லது முழுமைபெற்ற தீர்வாக அமையலாம். AI, machine learning, IoT, computer vision, blockchain, data analytics, robotics மற்றும் cloud computing போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் மாற்றும் சக்தியை பங்கேற்பாளர்கள் மாற்றத்திற்கான வினையூக்கிகளாகப் பயன்படுத்துவதால், இந்தத் தீர்வுகளின் நோக்கத்தை எந்த வரம்புகளும் கட்டுப்படுத்தாது. 16 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களும் dialog.lk/ic ஐப் பார்வையிடுவதன் மூலம் தனிநபர்களாகவோ அல்லது மாறும் ஆற்றல் சார்ந்த அணிகளாகவோ பங்கேற்கலாம்.

இந்த தேசிய முன்னெடுப்பின் வெற்றியாளர்களுக்கு ஆச்சரியமான வெகுமதிகள் காத்திருக்கின்றன, அதற்கமைய விலைமதிப்பற்ற வழிகாட்டல் மற்றும் டயலொக்கின் விரிவான புத்தாக்க சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் வளங்களுக்கான அணுகலுடன் ரூ. 5 மில்லியன் பணப் பரிசு வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும். மேலும், திறமையின் வெளிப்பாடுகளை தீப்பொறியென .தூண்டும் வகையில், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்துறை வழிகாட்டுனர்கள் மற்றும் தொலைநோக்கு புத்தாக்குனர்களால் திட்டத்தின் பங்காளிகளான இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பு (ICTA), இலங்கை பொறியியலாளர்கள் நிறுவகம் (IESL), தேசிய விஞ்ஞான மன்றம் (NSF), இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு (SLIC), இலங்கை சந்தைப்படுத்தல் கற்கை நிலையம் (SLIM), இலங்கை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சங்கம் (DMASL), டயலொக் புத்தாக்குனர் நிதியம், இனோவேஷன் ஃபவுன்ட்ரி மற்றும் Ideamart ஆகியோரால் வழிகாட்டப்படும் வாய்ப்பை பங்கேற்பாளர்கள் பெறுவார்கள். அத்துடன், ஒன்றாக அவர்கள் தங்கள் தீர்வுகளை மையமாக கொண்டு, முக்கிய பங்குதாரர்கள், சாத்தியமான முதலீட்டாளர்கள் மற்றும் மூலோபாய பங்காளிகளுடன் இணைந்து, ஒரு மாற்றமுறும் பயணத்தை மேற்கொள்வார்கள்.

இம்முயற்சி குறித்து உரையாற்றிய தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், "தொழில்நுட்ப அமைச்சு என்ற வகையில், Dialog Innovation Challenge ஆனது டிஜிட்டல் ரீதியில் செயல்படுவதில் வலுவூட்டப்பட்ட இலங்கையை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன், இதனூடே புத்தாக்க முன்னேற்றம் உட்பட வாழ்க்கையில் மாற்றங்களும் நிகழ்கின்றது என நம்புகின்றேன். படைப்பாற்றலை வளர்ப்பதற்கும், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்கும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவத்தினர் காட்டுகின்ற அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக அவர்களை நான் பாராட்டுகின்றேன். DigiEcon Sri Lanka 2023 – 2030 தேசிய டிஜிட்டல் பொருளாதார முன்முயற்சியுடன் நாடு முன்னேறி வரும் நிலையில், அனைத்து இலங்கையர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி Dialog Innovation Challenge க்கு விண்ணப்பிக்குமாறு நான் ஊக்குவிக்கின்றேன்” என்றார்.

இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, “Dialog ஆகிய நாம், தொழில்நுட்ப அறிவின் கலங்கரை விளக்கமாக புதுமைகளின் டிஜிட்டல் தேசமாக உயர்ந்து நிற்கும் இலங்கையை கற்பனை செய்கின்றோம். Dialog Innovation Challenge என்பதானது ஒவ்வொரு இலங்கையரையும் ஒன்றிணைத்து, மாற்றமடையக்கூடிய டிஜிட்டல் தீர்வுகள் மூலம் எமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு தேசிய முன்னெடுப்பாகும். இலங்கையர்களின் வாழ்வை வலுப்படுத்தி வளப்படுத்தவும், தொழில்துறையில் புரட்சியை ஏற்படுத்தவும், முன்னெப்போதுமில்லாத முன்னேற்றத்திற்கு வழி வகுக்கவும், இலங்கையை எல்லையற்ற சாத்தியக்கூறுகளின் சகாப்தத்தில் செலுத்தி, புதுமை மற்றும் செழுமையின் துடிப்பான சுற்றுச்சூழல் அமைப்பை கொண்டதான நாடாக வளர்ச்சி காணச் செய்வதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்றார்.

Dialog Innovation Challenge பற்றிய கூடுதல் விபரங்களை www.dialog.lk/ic ஊடாக அணுகலாம்.