நாடளாவிய ரீதியில் அணுகக்கூடிய கால்நடை சேவைகளை விரிவுபடுத்த Doc990 மற்றும் MyDoctor, SLVA உடன் பங்காளராக இணைந்துள்ளது.
2021 செப்டெம்பர் 21 (கொழும்பு)
படத்தில் இடமிருந்து வலம்: SLVA இன் பொருளாளர் டாக்டர் நுவன் விக்கிரமசிங்ஹ, SLVA இன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் டாக்டர் சுசந்த மல்லவராச்சி, SLVA இன் செயலாளர் சுகத் பிரேமச்சந்திர, SLVA இன் தலைவர் டாக்டர் எரண்டிக குணவர்தன, டிஜிட்டல் ஹெல்த் பிரைவேட் லிமிட்டட்டின் தலைமை இயக்க அதிகாரி சோமஸ்ரீ சுப்பிரமணியம், டிஜிட்டல் ஹெல்த் பிரைவேட் லிமிட்டட்டின் வணிக மேம்பாடு பிரிவு முகமையாளர் தமரா ராஜவர்தன, டிஜிட்டல் ஹெல்த் பிரைவேட் லிமிட்டட்டின் வணிக மேம்பாட்டு பிரிவு நிர்வாக அதிகாரி நவோதா ரத்நாயக்க, டிஜிட்டல் ஹெல்த் பிரைவேட் லிமிட்டட்டின் வணிக மேம்பாட்டு பிரிவு உதவி முகாமையாளர் சரித் பெர்னாண்டோ.
இலங்கையின் முன்னணி டிஜிட்டல் சுகாதார தீர்வுகள் சேவை வழங்குனர்களான Doc990 மற்றும் MyDoctor ஆகியவை இப்போது இலங்கை கால்நடை சங்கத்துடன் இணைந்து நாடளாவிய ரீதியில் ஆன்லைனில் கால்நடை சேவைகளை அணுக வாடிக்கையாளர்களுக்கு உதவுகின்றன.
நாட்டில் கால்நடைத் தொழிலின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய தொழில்முறை அமைப்பு, இலங்கை கால்நடை மருத்துவ சங்கம் (SLVA) விலங்குகளுக்கான மருத்துவத் தொழில் தொடர்ந்து சிறந்து விளங்குவதற்கும், அனைத்து விலங்குகளுக்கும் சிறப்பான பராமரிப்பை வழங்குவதற்கும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. நாடளாவிய ரீதியில் கால்நடை மருத்துவர்களின் பங்களிப்பு குறித்த பொது விழிப்புணர்வையும் எற்படுத்துகின்றது.
செல்லப்பிராணி உரிமையாளர்கள், பண்ணை விலங்குகளின் உரிமையாளர்கள் மற்றும் மூன்றாம் நபரின் நலனுக்காக தன்னார்வ தொண்டு செய்பவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை ஒரு கால்நடை மையம் அல்லது மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான அவசியமின்றி மேலும் வீடியோ அடிப்படையில் மருத்துவர்களுடன் கலந்துறையாடுவதற்கான வசதியினையும் வழங்குகின்றது. இத்தகைய முயற்சி செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் ஒரு உலகளாவிய தொற்றுநோயின் விளைவாக பயண கட்டுப்பாடுகளின் பின்னணியில் ஒரு நிவாரணமாக இருக்கும்.
Google Play Store அல்லது Apple Store இல் Doc990 mobile app ஐ டவுன்லோட் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த கால்நடை மருத்துவருடன் வீடியோ ஆலோசனைகளில் ஈடுபடலாம். மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவைகளின் விரிவாக்க வலையமைப்பு மூலம், Doc990 அனைத்து இலங்கையர்களும் சுகாதார சேவையை அணுகக்கூடியதாகவும் வசதிபடைத்ததாகவும் மாற்ற முயற்சிக்கிறது.