eZ Cash, HND பைனான்ஸ் உடன் இணைந்து 25,000 க்கும் அதிகளவான இடங்களில் சௌகரியமாக கடன் மற்றும் குத்தகைகளை மீள் செலுத்துவதற்கு உதவுகின்றது
2019 நவம்பர் 5 கொழும்பு
(இடமிருந்து வலம்) சந்தைப்படுத்தல் பிரிவு தலைவர் உதார குணசிங்ஹ, BSD பிரிவு தலைவர் மஞ்சுல குமார முனசிங்ஹ, AGM ICT/ CIO பிரதீப் டயஸ், முதன்மை இயக்க அலுவலகர் W S P அரங்கல, HNB பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் /தலைமை நிர்வாக அதிகாரி B. M. D. C. பிரபாத், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் தலைமை டிஜிட்டல் சேவைகள் அதிகாரி நு~hட் பெரேரா, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் eZ Cash பிரிவு சிரே~;ட முகாமையாளர் பத்மநாத் முத்துகுமாரன, HNB நிறுவனத்தின் சட்ட பிரிவு தலைமை முகாமையாளர் சாமர தரங்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் டிஜிட்டல் பிரிவு சந்தைப்படுத்தல் பிரிவு முகாமையாளர் சொகான் கொலம்பகே
HNB பைனான்ஸ் வாடிக்கையாளர்கள் இப்போது மேலதிக கட்டணங்கள் எதுவும் இன்றி நாடளாவிய ரீதியில் உள்ள 25,000 க்கும் அதிகளவான eZ Cash விற்பனையாளர்களின் ஊடாக தங்களுடைய கடன் தொகையினை இலகுவாகவும் பாதுகாப்பாகவும் செலுத்த முடியும். eZ Cash உடன் இந்த சமீபத்தில் HNB பைனான்ஸ் இணைந்துள்ளமையினால் வாடிக்கையாளர்கள் தங்களுடைய கடன் தொகையினை மீள் செலுத்த வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியத்தை நீக்குவதுடன் HNB பைனான்ஸ் கடன் கணக்கு இலக்கம் மற்றும் கையடக்க தொலைபேசி இலக்கங்களை கொண்டு எந்தவொரு eZ Cash விற்பனையாளர் நிலையங்களில் கடனினை மீள் செலுத்த முடியும். மேலும் பரிமாற்றமானது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டவுடன் SMS தகவலினையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்வார்கள். செலுத்தப்பட்ட தொகையானது 24 மணித்தியாலத்திற்குள் வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படுவதுடன் அதற்கான SMS தகவலினையும் வாடிக்கையாளர் பெற்றுக்கொள்வார்.
இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன், நாட்டின் முதலாவது மற்றும் மிகப்பெரிய மொபைல் பணம் மற்றும் கட்டண சேவையான eZ Cash கடன்களை இலகுவாக மீள் செலுத்துவதற்கு HNB பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளமையினை அறிவித்துள்ளது.
eZ Cash போன்ற நிரூபிக்கப்பட்ட டிஜிட்டல் தளத்துடன் கூட்டிணைவது இலங்கையின் நிதி சேவை துறையில் விரைவான தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களை இயக்குவதற்கான எங்கள் தொடர்ச்சியான பயணத்தின் குறிப்பிடத்தக்க படியை குறிக்கின்றது. இந்த சமீபத்திய முன்னேற்றம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதியினை வழங்க எமது சேவைகளை மறுசீரமைப்பதுடன் அதே நேரத்தில் எளிமையானதாகவும் காணப்படுகின்றது. இந்த இரண்டு விளைவுகளும் வளர்ந்து வரும் வணிகங்களில் உயர்ந்த வளர்ச்சியை வளர்ப்பதற்கும் பரந்த பொருளில் நாடளாவிய ரீதியில் ஏராளமான சமூகங்களின் முன்னேற்றத்திற்கு உதவுகின்றது என HNB பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சமிந்த பிரபாத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைகள் பிரிவு தலைவர் நு~hட் பெரேரா, இலங்கை வாழ் மக்களின் வாழ்க்கை முறையினையும் நிறுவனங்களையும் மேம்படுத்துவதற்கான எங்களுடைய நிறுவனத்தின் நெறிமுறைகளுக்கு இணங்க HNB பைனான்ஸ் உடன் இணைந்து 25,000 க்கும் அதிகளவான eZ Cash விற்பனையாளர் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் சௌகரியமாகவும் பாதுகாப்பாகவும் கடனினை மீள் செலுத்தும் முறையை எளிதாக்கியுள்ளோம் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம் என தெரிவித்தார்.