Body

Elephant House SuperHeroes Academy க்கு டயலொக் அனுசரணை வழங்கி இளைஞர்களை வலுவூட்டுகின்றது.

ஜுலை 19, 2022         கொழும்பு

 

Elephant House SuperHeroes Academy Powered by Dialog Empowers Youth

இலங்கையர்களின் மிகவும் பிரியமான மற்றும் நம்பிக்கைக்குரிய ஐஸ்கிரீம் வர்த்தக நாமமான Elephant House Ice Cream மற்றும் இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி ஆகியவை அண்மையில் பத்தரமுல்லை, Waters Edge இல் இலங்கையின் எதிர்கால சந்ததியினரின் திறமைகள் மற்றும் திறன்களுக்கான ‘Elephant House SuperHeroes Academy Powered by Dialog’ எனும் பயிற்சி பட்டறையினை அறிமுகப்படுத்தியது. இதற்கு டயலொக் அனுசரணை வழங்கியது.

டயலொக் அனுசரணை வழங்கும் Elephant House SuperHeroes நடுவர் குழுவில் அங்கம் வகிக்கும் சிந்தனையாளரும் தொழிலதிபருமான யசஸ் ஹேவகே, மொரட்டுவ பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி லீலாங்க செனவிரத்ன மற்றும் அசேகா விஜேவர்தன ஆகியோர் இந்த செயலமர்வை வழிநடத்தினர். மற்றும் போட்டியாளர்களின் பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் திறமைகள் மற்றும் திறன்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த ஆலோசனைகளையும் வழங்கினார்கள். ‘Super Talent’, ‘Super Innovator’ மற்றும் ‘Super Responsible’ ஆகிய மூன்று பிரிவுகளையும் உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய இந்த பயிலரங்கில் பிள்ளைகள் தங்கள் தனித்திறமைகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்வது மற்றும் அவர்களின் சிறந்த பலனைப் பெறுவது எப்படி என்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

டயலொக் அனுசரணை வழங்கும் Elephant House SuperHeroes போட்டியானது, புதுமையான திறன்கள், திறமைகள் மற்றும் நிலையான வாழ்க்கைக்கான முயற்சிகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்ட நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் போட்டியாகும். டயலொக் அனுசரணை வழங்கும் Elephant House SuperHeroes போட்டியானது இலங்கையில் உள்ள பிள்ளைகளின் கல்வி மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றதுடன் அவர்களின் கல்விக் கனவுகளை நனவாக்க உதவும் பல சலுகைகளையும் வழங்குகிறது. டயலொக் அனுசரணை வழங்கும் Elephant House SuperHeroes போட்டியானது இலங்கையில் உள்ள பிள்ளைகளின் கல்வி மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றதுடன் அவர்களின் கல்விக் கனவுகளை நனவாக்க உதவும் பல சலுகைகளையும் வழங்குகிறது. இறுதிப் போட்டியில் மூன்று பிரிவுகளில் இருந்தும் மூன்று வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

இலங்கை சிறார்களின் திறன்களை விருத்தி செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கும் டயலொக் அனுசரணை வழங்கும் Elephant House SuperHeroes போட்டியானது ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் TV தெரணவில் மாலை 4.25 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.