Body

Chatbot கொடுப்பனவு அம்சத்தைத் தொடங்கும் நோக்கத்தில் Rakuten Viber உடன் இணையும் eZ Cash.

Viber இல் தடையற்ற பணம் செலுத்தும் பொறிமுறையை வழங்கும் இலங்கையின் முதல் மொபைல் கொடுப்பனவுத் தளம் இதுவாகும்.

December 03, 2021         Colombo

 

Rakuten Viber, eZCash

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி வழங்கும் இலங்கையின் மிகப்பெரிய மொபைல் கொடுப்பனவுத் தளமான eZ Cash, இலங்கையில் முதன்முறையாக Viber App மூலம் chatbot கொடுப்பனவுகளை அறிமுகப்படுத்த Rakuten Viber உடனான தனது கூட்டாண்மையை அண்மையில் அறிவித்தது. eZ Cash Viber Bot இலங்கையில் மொபைல் பணத் தளம் ஒன்றினால் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் chatbot கொடுப்பனவு அம்சமாக அதன் அறிமுகத்தைக் குறிப்பத்துடன், பாதுகாப்பான பரிவர்த்தனைகள் அதி இலகுவாக நடைபெறுவதை உறுதி செய்யும்.

eZ Cash Bot ஆனது Viber பயனர்கள் தங்கள் eZ Cash பணப்பைகளை Viber App மூலம் பதிவுசெய்து பயன்படுத்த உதவுகிறது. இதன் மூலம் பயனர்கள் பணத்தை அனுப்பவும், ரீலோட் செய்யவும், அவர்களின் பட்டியல் கொடுப்பனவுகளைச் செலுத்தவும், வீட்டு மற்றும் பிற நிறுவனக் கொடுப்பனவுகளை அதி சௌகரியத்துடன் மேற்கொள்ளவும் உதவுகிறது. தங்களை eZ Cash Viber Bot இல் பதிவுசெய்து ஒரு பரிவர்த்தனையேனும் மேற்கொள்ளும் முதல் 500 Dialog வாடிக்கையாளர்கள் தங்கள் Dialog தொலைபேசிகளில் 2 GB Anytime Data வெகுமதியைப் பெற்றுக்கொள்வர்.

"eZ Cash BOT அறிமுகத்தின் மூலம் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலம் நுகர்வோர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்" என்று Rakuten Viber இன் APACயும், மூத்த இயக்குனருமான டேவிட் ட்சே கருத்துத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “பல ஆண்டுகளாக நாங்கள் எங்கள் பயனர்களுக்கு துரிதமாக பல செயல்பாடுகளை செய்ய வலுவூட்டி வருகிறோம். செய்தியிடல் தளத்திற்கு வெளியே எங்கள் நிறுவனத்தை விரிவுபடுத்துவதில் இது ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. Viber இல் eZ Cash BOT அம்சத்தைப் பயன்படுத்துவதன் மூலம், பயனர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளும் அதே வேளையில், தங்கள் மொபைல் ரீலோட்கள் மற்றும் பட்டியல் கட்டண செலுத்துதல்களையும் மேற்கொள்ள முடியும், மேலும் ஒரே ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் நேரடியாக செய்தியிடல் தளத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்த முடியும். மேலும், வெளிநாடுகளில் இருந்தும் eZ Cash பணப்பைக்கு பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.”

இதன்போது உரையாற்றிய டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ தெரிவிக்கையில். "எமது வாடிக்கையாளரின் தேவைகளுக்கு ஏற்ப தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு வரும் ஒரு சக்தி வாய்ந்த வர்த்தகநாமமான eZ Cash ஆனது, Rakuten Viber உடன் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறது. இதனால் Viber App மூலம் வாடிக்கையாளர்களுக்கு நவீன கட்டணச் சேவையை வழங்கும் இலங்கையின் முதல் மொபைல் பணத் தளமாக eZ Cash திகழ்கிறது. இனிமேல் eZ Cash Viber Bot ஐப் பயன்படுத்தி எளிதாக எங்களின் வாடிக்கையாளர்கள் பணத்தை அனுப்பவும், ரீலோட் செய்யவும், கட்டணங்களை செலுத்தவும், பொருள் கொள்வனவுக்கு பணம் செலுத்தவும் முடியும். இது பயனர்களுக்கு அதிக வசதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பரிவர்தனைகளின் பாதுகாப்பானது இரு தளங்களினாலும் உறுதி செய்யப்படுவதனால், அதி சிறந்த உத்தரவாதத்தையும் வழங்குகிறது.” எனத் தெரிவித்தார்.