Body

*தனியார் துறை மற்றும் பெருநிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் 'மனிதநேய ஒன்றிணைவு' நிவாரணத் திட்டத்துடன் London Stock Exchange குழுமம் கைகோர்க்கிறது

*பாதிக்கப்பட்ட 200,000 ற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

2022 நவம்பர் 01         கொழும்பு

 

LSEG Foundation Joins ‘Manudam Mehewara’

புகைப்படத்தில் இடமிருந்து வலமாக: LSEG இன் இலங்கைக்கான தயாரிப்பு முகாமைத்துவ மற்றும் வணிகப் பகுப்பாய்வுத் தலைவர் ஹிரான் ஜயரத்ன, சர்வோதய சிரமதான இயக்கத்தின் தலைவர் டொக்டர் வின்ய ஆரியரத்ன, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழும தலைமை நிதி அதிகாரி ஹாங் சோ வோங், LSEG தொழில்நுட்ப மூலதனச் சந்தைகள், லண்டன் பங்குச் சந்தையின் இலங்கை குழுமத்தின் மனிதவளத் தலைவர் புலஸ்திகா வீரசிங்க, CSR மற்றும் நிலைபெறுதகு இணை முகாமையாளர் சாரா சடூன்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, MAS Holdings, Hemas Holdings PLC, சர்வோதய சிரமதான சங்கம் மற்றும் PwC ஸ்ரீ லங்கா ஆகியன கூட்டாக ஆரம்பித்த 'மனிதநேய ஒன்றிணைவு' நிவாரண திட்டத்தில் இணைந்து கொண்ட CBL குழுமம் Citi Bank, Sunshine Holdings PLC, Huawei Technologies Lanka Co மற்றும் Unilever ஆகிய பெருநிறுவன கூட்டுறவாளர்கள் வரிசையில் London Stock Exchange (லண்டன் பங்குச் சந்தை) குழுமமும் முழு சமுதாயத்திற்கும் தம் சார்பாகவும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் நோக்கில் இந்நிவாரணப்பணியில் கைகோர்த்துள்ளது.

தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக, நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த 200,000 இற்கும் அதிகமான குடும்பங்களுக்கு அவசர நிவாரணம் வழங்கும் நோக்கில் 'மனிதநேய ஒன்றிணைவு' திட்டத்தின் மூலம் 25 மாவட்டங்களிலும் அவசரகால நிவாரணங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதுடன் இதுவரை 115,000 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. பயனுள்ள பொருளாதார முன்மாதிரி திட்டத்தினூடாக நிலையான நலன் பரிமாற்ற முறையொன்று நாட்டில் நிறுவப்படும்வரை மேற்படி 'மனிதநேய ஒன்றிணைவு' நிவாரண வேலைத்திட்டமானது தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

'மனிதநேய ஒன்றிணைவு' நடவடிக்கையில் தமது நிறுவனம் பங்கேற்பது குறித்து கருத்து தெரிவித்த லண்டன் பங்குச் சந்தையின் இலங்கை குழுமத்தின் மனிதவளத் தலைவர் புலஸ்திக வீரசிங்க அவர்கள் "இலங்கையின் தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவன கூட்டுறவாளர்கள் இலங்கையை தற்போதைய பொருளாதார நிலையலிருந்து மீட்டெடுக்க முன்வருவதைப் பார்க்கையில் அது நம்மிலும் ஓர் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, லண்டன் பங்குச் சந்தையானது நமது சமூகத்திற்கு ஏதாவது ஒன்றை மாற்றீடாக செய்ய வேண்டும் என்று உறுதியாக நம்புகிறது. அதன்படி,எமது நாட்டுக்கு மிகவும் இன்றியமையாத தருணத்தில் எமது சொந்த மக்களுக்கான கடமையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை வழங்கிய 'மனிதநேய ஒன்றிணைவு' குழுவினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வரம்பற்ற சகிப்புத்தன்மையுடன் பரிபூரணமான ஆளுமை மற்றும் எந்தவொரு துன்பங்களுக்கும் முகங்கொடுக்கும் வகையில் மீண்டும் எழுச்சி பெறக்கூடிய ஒரு ஆளுமையுடன் எமது கூட்டுப்பணியானது இலங்கைக்கு பெரும் ஆதரவாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்" என்றார்.

புதிய கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம நிதி அதிகாரி ஹொங் சூ வொங் அவர்கள் "இலங்கையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக டயலொக் மற்றும் பல தனியார்துறை நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த கடுமையான பொருளாதார நிலையில் மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்கும் பொருட்டு 'மனிதநேய ஒன்றிணைவு' நிவாரணப் பணிகளை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கின. மனிதநேய ஒன்றிணைவு பணியுடன் தொடர்புடைய நிறுவனங்களும் பெருநிறுவன கூட்டுறவாளர் நிறுவனங்களும் நிதியுதவி ரீதியாக நன்கொடைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக தங்கள் வளங்களையும் நிபுணத்துவத்தையும் அர்ப்பணித்துள்ளனர். இந்தச் செயல்பாட்டில் எங்களுடன் இணைந்த லண்டன் பங்குச் சந்தைக்கு 'மனிதநேய ஒன்றிணைவு' பணிக் குழுவின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற 'மனிதநேய ஒன்றிணைவு' திட்டத்தின் ஊடாக, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 115,000 ற்கும் மேற்பட்ட ஆதரவற்ற குடும்பங்களுக்கு உதவிகளை வழங்க முடிந்துள்ளதுடன், 200,000 ற்கும் அதிகமான குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதே எமது இலக்காக இருந்தாலும், இது ஆரம்பம் மட்டுமே என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். எங்கள் பணியை மேலும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு, சமூக நலனை நோக்கமாகக் கொண்ட ஏனைய நிறுவனங்களும் இந்த கூட்டு முயற்சியில் கைகோர்க்க முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்தார்.

நாடு முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கான கூட்டு முயற்சியில் பங்களிக்குமாறு ' ஏனைய அனைத்து குடிமக்களையும் நிறுவனங்களையும் 'மனிதநேய ஒன்றிணைவு' அழைக்கிறது. எந்தவொரு நபரும் https://dlg.lk/donate/ என்ற இணையத்தளத்தைப் பார்வையிடலாம் மற்றும் அவர்கள் தமது கிரெடிட்/டெபிட் கார்ட்களை பயன்படுத்தி அல்லது வங்கிப் பரிமாற்றம், Star Points, eZCash, genie, வங்கி வைப்பிலிடல் அல்லது 077 642 1421 என்ற எண்ணுக்கு ரீலோட் செய்தல் என பல வழிமுறைகளில் பணம் செலுத்தலாம். அத்துடன் www.karuna.lk Crowdfunding தளம் வழியாகவும் வசதியாக நன்கொடைகளை அளிக்கவும் முடியும்.

'மனிதநேய ஒன்றிணைவு' பற்றிய மேலதிக விபரங்களுக்கு dlg.dialog.lk/manudam-mehewara. க்கு செல்லுங்கள்.