Body

Singer Sri Lanka நாடு தழுவிய ரீதியில் தனது 420+ ஷோரூம்களில் Dialog Pay டிஜிட்டல் கட்டண கட்டமைப்போடு இணைகிறது

2026 ஜூலை 22         கொழும்பு

 

இடமிருந்து வலமாக: லசந்த தெவரப்பெரும - குழுமத் தலைமைச் சந்தைப்படுத்தல் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; நவின் பீரிஸ் - குழுமத் தலைமை அதிகாரி,Dialog Enterprise; ஜன்மேஷ் அந்தோனி - சந்தைப்படுத்தல் பணிப்பாளர், inger Sri Lanka PLC; மகேஷ் விஜேவர்தன - முதன்மை நிறைவேற்று அதிகாரி (CEO), inger Sri Lanka PLC.

இலங்கையின் முதற்தர இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பில்சி, Singer Sri Lanka PLC நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கூட்டாண்மை மூலமாக வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் உள்ள 420 க்கும் மேற்பட்ட Singer ஷோரூம்களில் Dialog Pay ஐப் பயன்படுத்தி பாதுகாப்பான மற்றும் வசதியான டிஜிட்டல் கட்டணங்களைச் செலுத்த முடியும். இலங்கையின் நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்களின் முன்னணி சில்லறை விற்பனையாளர்களில் ஒருவரான சிங்கர் நிறுவனம் நுகர்வோர் மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், தளபாடங்கள், டிஜிட்டல் தயாரிப்புகள், சமையலறை உபகரணங்கள் மற்றும் விவசாய இயந்திரங்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான தயாரிப்புகளை வழங்குகிறது. Singer நிறுவனத்தின் கட்டணச் செலுத்தும் கவுண்டர்களில் Dialog Pay ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதன் மூலம், வாடிக்கையாளர்கள் Dialog Pay app அல்லது MyDialog App ஐப் பயன்படுத்தி LankaQR குறியீட்டை ஸ்கேன் செய்து தங்களது பணப்பரிவர்த்தனைகளை எளிதாக முடிக்க முடியும். இது நாட்டின் மிகப்பெரிய சில்லறை விற்பனை வலையமைப்புகளில் ஒன்றான சிங்கர் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு விரைவான, பாதுகாப்பான மற்றும் தடையற்ற கட்டணச் செலுத்தல் அனுபவத்தை உறுதி செய்கிறது. அத்துடன், ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்யும் Singer நிறுவனத்தின் 145 ஆண்டுகளுக்கும் மேலான நம்பகமான பாரம்பரியமும் இதற்கு பலம் சேர்க்கிறது.

இந்த கூட்டாண்மை குறித்து Singer குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் மகேஷ் விஜேவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “Singer நிறுவனத்தில், வாடிக்கையாளர்களின் வசதியும் புத்தாக்கமுமே நாங்கள் செய்யும் எல்லாவற்றின் மையப்புள்ளியாக விளங்குகின்றன. Dialog Pay உடனான எங்கள் கூட்டாண்மை, எங்களது நாடு தழுவிய சில்லறை விற்பனை வலையமைப்பு முழுவதும் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பான, தடையற்ற மற்றும் பலனளிக்கும் கட்டணச் செலுத்தல் அனுபவங்களை வழங்குவதற்கான எங்களது அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. டிஜிட்டல் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் அதேவேளை, அன்றாட ஷாப்பிங்கை எளிதாக்குவதில் டயலொக் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

Dialog Pay app மற்றும் MyDialog App மூலம் கிடைக்கப்பெறும் Dialog Pay சேவையானது, இணைப்புத்திறன், டிஜிட்டல் கட்டணங்கள் மற்றும் நிதிச் சேவைகளை ஒரே கட்டமைப்பிற்குள் கொண்டு வருகிறது. இது ஒவ்வொரு இலங்கை குடிமகனுக்கும் டிஜிட்டல் கட்டணங்களை எளிமையானதாகவும், எளிதில் அணுகக்கூடியதாகவும் மற்றும் அதிக பலனளிக்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கான டயலொக் நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களது eZ Cash கணக்கைப் பயன்படுத்தி அல்லது தங்களுக்கு விருப்பமான வங்கிக் கணக்கை இணைப்பதன் மூலம் Dialog Pay சேவையை வசதியாகச் செயல்படுத்திக்கொள்ள முடியும். இதன் மூலம் அவர்கள் பாதுகாப்பான LankaQR கட்டணங்களைச் செலுத்தவும், பணத்தை மாற்றவும் (Fund Transfer), digital wallet ஐ அணுகவும், சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புகளை ஆரம்பிக்கவும் முடியும். அத்துடன் Dialog Finance மூலம் கடன்களுக்கும் விண்ணப்பிக்கலாம். நாடு தழுவிய ரீதியில் 100,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் Dialog Pay, தகுதியான QR கட்டணங்களுக்கு இலவச டயலொக் டேட்டாவை வெகுமதியாக வழங்குகிறது. இது அன்றாட டிஜிட்டல் பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன், இலங்கை டிஜிட்டல் மயமாகவும் பணப்பரிவர்த்தனையற்ற பொருளாதாரத்தை நோக்கியும் தொடர்ந்து நகர்வதற்கு உறுதுணையாக அமைகிறது. மேலதிக விபரங்களுக்கு https://dialog.lk/dialog-pay இணையதளத்தைப் பார்வையிடவும்.