Body

இலங்கை SOS சிறுவர் கிராமம் ஆனது டயலொக் அறக்கட்டளையின் மூலம் இயக்கப்படுகின்ற “karuna.lk” உடன் கைகோர்க்கின்றது.

நவம்பர் 29, 2022         கொழும்பு

 

SOS Children’s Villages Sri Lanka Joins Karuna.lk

படத்தில் இடமிருந்து வலமாக : டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் ஐடியாமார்ட் பிரிவின் சிரேஷ்ட Biz Lead பசிந்து டி சில்வா, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும நிறுவன திட்டமிடல் மற்றும் உத்திகள் பிரிவு ஆலோசகர் இஸ்வரி கலப்பட்டி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் இடர் மற்றும் இணக்க பிரிவு குழும தலைவர் அசங்க பிரியதர்ஷன, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் பணிப்பாளர்/குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ, இலங்கை SOS சிறுவர் கிராமத்தின் தேசிய இயக்குனர் திரு திவாகர் இரட்ணதுரை, இலங்கை SOS சிறுவர் கிராமத்தின் கூட்டாண்மை பங்காளித்துவ உதவிப் பணிப்பாளர் நிபுனிகா ருஹுனகே, இலங்கை SOS சிறுவர் கிராமத்தின் டிஜிட்டல் நிதி அபிவிருத்தி மற்றும் தொடர்பாடல் பிரிவு உதவி முகாமையாளர் சச்சிதா ரோசைரோ

உலகின் மிகப் பெரிய இலாபநோக்கற்ற நிறுவனமான SOS சிறுவர் கிராமமானது பெற்றோரின் கவனிப்பற்ற மற்றும் ஏனைய காரணங்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. டயலொக் அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட இலங்கையின் முதல் காரண சரிபார்க்கப்பட்ட நிதி திரள் திட்டத்தளமான karuna.lk மற்றும் முதன்மை மதிப்பீட்டாளர் சர்வோதய ஷிரமதான சங்கம் மற்றும் சுயாதீன கணக்காய்வாளர் PwC இலங்கை ஆகிய நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. பெற்றோர் கவனிப்பு இல்லாத இலங்கை SOS குழந்தைகளுக்கு நன்கொடையாளர்கள் தங்கள் தாராள மனப்பாங்குடன் அளிக்கும் நன்கொடை மூலம் சத்தான உணவு மற்றும் பிற ஒத்த முயற்சிகளை எடுப்பதற்கு உறுதுணையாக அமையும்.

பொருளாதார நெருக்கடியின் பின்னணியின் நடவடிக்கை எடுக்க விரும்பும் சக இலங்கையருக்கு உதவ ஒத்த எண்ணம் கொண்டவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் karuna.lk இன் நோக்கமாக இலங்கையரது வாழ்வை வலுப்படுத்தவும் வளப்படுத்தவும் நிர்வாகத்தின் உயர்ந்த மட்டத்தில் செயல்படும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான நிதி திரட்டல் சமூக பொறுப்பு மூலம் ஆதரிக்கப்படுகின்றது.

தனிநபர்கள், இலாப நோக்கு அற்ற நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் Karuna.lk இல் தங்கள் காரணத்தை/தொண்டுகளை வசதியாக பதிவு செய்யலாம். மற்றும் டெபிட் கார்ட்/ கிரடிட் கார்ட் (மாஸ்ரர், வீசா ) ) eZ Cash, Dialog Add-to-bill, Star Points அல்லது Online வங்கி பரிமாற்றங்கள் உட்பட பல்வேறு வழிகளில் தளத்தில் பட்டியல் இடப்பட்டு உள்ள பல தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை தடை இன்றி வழங்கிடலாம்.

முதற்தர தொண்டு நிறுவனங்களில் ஒன்றாக பதிவு செய்யப்பட்ட இலங்கை SOS சிறுவர் கிராமத்தின் தேசிய இயக்குனர் திரு திவாகர் இரட்ணதுரை அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் தற்போது நிகழும் பொருளாதார நெருக்கடியில் அதிகமான பிள்ளைகள் பெற்றோர் பாதுகாப்பை இழந்தவர்களாகவும் தமக்கு தேவையான போசாக்கினை பெற்றுக் கொள்ள இயலாத அபாய நிலை காணப்படுகின்றது. அவ்வாறு காணப்படும் குழந்தைகளுக்கு தேவையான உணவு மற்றும் தங்குமிட மனிதாபிமான உதவிகளை செய்து வருவதோடு இன்னும் பலவற்றை செய்வதற்கான முயற்சிகளையும் மேற்கொள்கின்றோம். Karuna.lk இயக்கு தளத்தை ஆரம்பித்ததற்காகவும் எந்த ஒரு குழந்தையும் பின் தங்கி இருக்க கூடாது என்பதற்காக இந்த தேசிய நெருக்கடியில் தொடர்ச்சியாக பல முயற்சிகளை கவனத்திற் கொண்டு வந்ததற்காகவும் டயலொக் நிறுவனத்திற்கு நாங்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாக இருக்கின்றோம்.”

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில்” இலங்கை SOS சிறுவர் கிராமம் ஆனது karuna.lk தளத்தில் இணைவதில் நாங்கள் பெருமகிழ்வு அடைகின்றோம். ஒரு உணர்வுள்ள பெரு நிறுவன பிரஜையாகவும் 17 மில்லியனுக்கு அதிகமான இலங்கையர்களின் நம்பகமான டிஜிட்டல் துறையாகவும் விளங்கும் டயலொக் நிறுவனமானது இலங்கையரின் வாழ்க்கையை வலுவூட்டுவதற்கும் வளப்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக எமது சேவைகளை வழங்க அர்ப்பணித்துள்ளது. SOS சிறுவர் கிராமம் போன்ற புகழ் பெற்ற இலாப நோக்கற்ற நிறுவனங்களுடன் கைகோர்த்து தேவையான உதவிகளை மிகவும் தேவைப்படுபவர்களுக்கு என்றும் வழங்குவோம் என்று உறுதியாக நம்புகின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு: https://dlg.lk/karunalk_sos க்கு செல்லுங்கள்.