இலங்கையர்களால் டயலொக் ஆண்டின் தொலைத்தொடர்பு வர்த்தக நாமம் மற்றும் சேவை வர்த்தக நாமம் ஆகியவற்றுக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது.
2022 மார்ச் 25 (கொழும்பு)



புகழ்பெற்ற SLIM-KANTAR பீப்பிள்ஸ் விருதுகள் 2022 இல் இலங்கை வாடிக்கையாளர்கள் ‘ஆண்டின் தொலைத்தொடர்பு வர்த்தக நாமமாக தொடர்ந்து சாதணைக்குரிய பதினொன்றாவது ஆண்டாகவும்’ ‘ஆண்டின் சிறந்த சேவை வர்த்தக நாமமாக தொடர்ந்து மூன்றாவது வருடமாகவும் டயலொக் இற்கு வாக்களித்துள்ளனர். இலங்கை பொது மக்களின் மனதில் ஆழமான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ள வர்த்தக நாமங்களை தெரிவு செய்வதற்காக பொதுமக்களினால் வாக்களிக்கப்படும் மக்கள் விருதுகள் டயலொக் வர்த்த நாமத்திற்கு மகுடம் சூட்டப்பட்டுள்ளது.
டயலொக் பல கண்டுபிடிப்புகளில் முன்னணியில் திகழ்கின்றமையும் அதே வேளையில், இலங்கை நாட்டினையும் மற்றும் பிராந்தியத்தினையும் டிஜிட்டல் தேசமாக மாற்றுவதற்கான அதன் அர்ப்பணிப்பையும் அங்கீகரித்து, பதினொன்றாவது வருடமாக 'ஆண்டின் சிறந்த தொலைத்தொடர்பு வர்த்தக நாமம்' எனும் விருது வழங்கப்பட்டது.
இலங்கையரின் வாழ்க்கையையும் நிறுவனங்களையும் வலுப்படுத்துதல் மற்றும் வளப்படுத்துதல் என்ற நோக்கத்துடன் சேவைத் துறைகளில் சிறந்த சேவை வழங்குனரை அங்கீகரிக்கும் 'ஆண்டின் சிறந்த சேவை வர்த்தக நாமம்' விருது 'எதிர்காலத்தை இன்றே வழங்குவதற்கு தொழில்நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான டயலொக் இன் முயற்சிகளுக்கான சான்றாகும். இலங்கை மக்களால் வாக்களிக்கப்பட்ட SLIM-KANTAR மக்கள் விருதுகளில் வழங்கப்பட்ட இரண்டு விருதுகளும், Brand Finance நிறுவனத்தால் 'இலங்கையின் மிகவும் பெறுமதிமிக்க நுகர்வோர் வர்த்தக நாமம்' என்ற அங்கீகாரத்துடன் இணைந்த எதிர்காலத்தை இன்றே வழங்குவதன் மூலம் ஒவ்வொரு இலங்கையருக்கும் எதிர்காலத்தை தொடர்ந்து செயல்படுத்தும் வர்த்தக நாமத்தின் நற்பண்புகளை உள்ளடக்கியது.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ கருத்து தெரிவிக்கையில் 11ஆவது வருடமாக 'ஆண்டின் சிறந்த தொலைத்தொடர்பு வர்த்தக நாமமாகவும்' தொடர்ந்து 3வது வருடமாக சேவை வர்த்தக நாமத்திற்காகவும் இலங்கையர்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளமையினையிட்டு நாங்கள் நன்றியுள்ளவர்களாகவும் பணிவானவர்களாகவும் திகழ்வோம். இலங்கையின் இதயங்களையும் மனதையும் உண்மையிலேயே குறிப்பிடத்தக்க வழிகளில் மாற்றியமைத்த ஒரு வர்த்தக நாமமாக நாங்கள் அங்கீகரிக்கப்பட்டதில் பெருமைப்படுகிறோம். மேலும் இலங்கையர் வாழ்வுகளையும் நிறுவனங்களையும் அர்த்தமுள்ள மற்றும் புரட்சிகர கண்டுபிடிப்புகளின் மூலம் வளப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் என்ற எங்கள் பார்வையை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.”
இந்த ஆண்டு SLIM-KANTAR - மக்கள் விருதுகளின் தொடர்ச்சியான பதினாறாவது ஆண்டாகும். இலங்கையில் சந்தைப்படுத்துவதற்கான தேசிய அமைப்பான இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம், இது இலங்கையில் சந்தைப்படுத்துவதற்கான தேசிய அமைப்பான இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றான நீல்சன் கம்பெனி லங்காவுடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது. கட்டமைக்கப்பட்ட கேள்வித்தாளைப் பயன்படுத்தி ஐந்து மாத காலப்பகுதியில், 15 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்களையும் பெண்களையும் உள்ளடக்கி நாடு தழுவிய அளவிலான நேருக்கு நேர் ஆராய்ச்சி மூலம் நீல்சன் நிறுவனம் இலங்கையில் நடாத்திய பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகள் மட்டுமே மக்கள் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த விருதுகள் இலங்கை மக்களின் மனதை தனிப்பட்ட முறையில் ஈர்க்கும் வர்த்தக நாமம் மற்றும் ஆளுமைகளை அங்கீகரிக்கின்றன.