eZ Reload
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (டயலொக்), நாடளாவிய ரீதியில் உள்ள விற்பனையாளர்களிடமிருந்தும் MyDialog App மூலமும் கிடைக்கும் ஒரு புரட்சிகர புதிய ரீலோட் முறையான Dialog eZ Reload இனை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையில் முதன்முறையாக, வாடிக்கையாளர்கள் SMS ஊடாக ரீலோட் PIN இலக்கத்தினை சமீபத்திய eZ Reload வசதியுடன் பெற்றுக்கொள்வதற்கான தனித்துவமான வாய்ப்பினை வழங்கியுள்ளது.
வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய எந்தவொரு நேரத்திலும் ரீலோட் PIN இலக்கத்தினை டயல் செய்வதன் மூலம் ரீலோடினை செயல்படுத்திக்கொள்ளக்கூடியதுடன் eZ Reload PIN இலக்கத்தினை கொண்ட SMS இனை யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பி ரீலோடினை மிகவும் இலகுவாக transfer செய்வதற்கான வாய்ப்பினையும் வழங்குகின்றது.
தற்போது காணப்படும் எந்தவொரு ரீசார்ஜ் அட்டைக்கும் பதிலாக eZ Reload இனை கொள்வனவு செய்துக்கொள்ளக்கூடியதுடன் இதன் மூலம் ரீசார்ஜ் அட்டை தொலைந்து போதல் மற்றும் PIN இலக்கம் சேதமடைதல் போன்றவற்றால் ஏற்படும் சிரமத்தையும் தவிர்த்திடலாம்.
வாடிக்கையாளர்கள் 2 முறையிகளில் eZ Reload ஐ கொள்வனவு செய்யலாம்
விற்பனையாளர் ஊடாக eZ Reload ஐ எவ்வாறு கொள்வனவு செய்வது மற்றும் உங்கள் மொபைலில் எவ்வாறு செயல்படுத்துவது
வாடிக்கையாளர்கள் விற்பனையாளர் நிலையத்திற்கு சென்று ஒரு Dialog eZ Reload ஐ கோர வேண்டும் (அவர்/ அவள் வழக்கமாக சுரண்டும் அட்டையினை கொள்வனவு செய்தல் அல்லது ரீலோட் செய்வதை போலவே). ரீசார்ஜ் கார்ட் PIN இலக்கம் விற்பனையாளரால் SMS ஊடாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும்.
இதற்குப் பிறகு ரீசார்ஜ் கார்டை செயற்படுத்த வாடிக்கையாளர் கீழே உள்ள படிகளைப் பின்பற்ற வேண்டும்;
ஸ்மார்ட்போனுக்கு
- “eZ Reload” மூலமாக அனுப்பப்பட்ட ரீசார்ஜ் கார்டின் PIN இலக்க SMS ஐ Open செய்யவும்
- “222 ஐ எனும் இலக்கத்தை டச் செய்து அழைக்கவும்
- உங்கள் ரீசார்ஜ் கார்ட் உடனடியாக செயற்படுத்தப்படும்
ஸ்மார்ட்போன் அல்லாதவர்கள் (சாதாரண அம்ச தொலைபேசி)
- “eZ Reload” மூலமாக அனுப்பப்பட்ட ரீசார்ஜ் கார்டின் PIN இலக்க SMS ஐ Open செய்யவும்
- SMS திரையில் இருந்து “Options” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
- 222 இலிருந்து இலக்கத்தை அழைக்கவும்
- உங்கள் ரீசார்ஜ் கார்டு உடனடியாக செயற்படுத்தப்படும்
உங்கள் Dialog மொபைலில் இருந்து #356*4# டயல் செய்து, உங்கள் பணப்பையில் பெற்றுக்கொள்ளக்கூடிய eZ Reload ஐ எளிதாக சரிபார்க்கலாம்.
Frequently asked questions
கிரெடிட்/ டெபிட் கார்ட்கள், Genie, eZ Cash அல்லது Star Points போன்ற MyDialog App இல் கிடைக்கக்கூடிய எந்தவொரு கொள்வனவு முறைகளையும் பயன்படுத்தி நீங்கள் eZ Reloads ஐ கொள்வனவு செய்யலாம். நீங்கள் கொள்வனவு செய்த அனைத்து eZ Reload களும் உங்கள் eZ Reload பணப்பையில் சேமிக்கப்படும். நீங்கள் புதிய மின் அட்டைகளை கொள்வனவு செய்யலாம். முன்பு கொள்வனவு செய்த மின் அட்டைகளை அல்லது பரிசு eZ Reloads களை இங்கிருந்து செயற்படுத்தலாம்.
கொள்வனவு செய்த eZ Reload ஐ கொடுக்கப்பட்டுள்ள “Activate” பட்டனை கிளிக் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் நேரடியாக MyDialog app வழியாக செயற்படுத்திக்கொள்ளலாம். நீங்கள் eZ Reload ஐ செயற்படுத்தியதும், அதன் பெறுமதி உங்கள் மொபைலுக்கு ரீசார்ஜ் ஆக மாற்றப்படும்.
eZ Reload SMS ஐ பயன்படுத்தி எனது HBB/DTV யில் eZ Reload ஐ எப்படி ரீசார்ஜ் செய்வது/ செயற்படுத்துவது
ஏற்கனவே உள்ள நிலையான முறைகளைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்ய வாடிக்கையாளர் SMS இல் கொடுக்கப்பட்ட PIN இலக்கத்தை பயன்படுத்தலாம்.
ஏற்கனவே உள்ள நிலையான முறைகளைப் பயன்படுத்தி ரீசார்ஜ் செய்ய வாடிக்கையாளர் SMS இல் கொடுக்கப்பட்ட PIN இலக்கத்தை பயன்படுத்தலாம்.
கொள்வனவு செய்த eZ Reload ஐ கொடுக்கப்பட்டுள்ள “Activate” பட்டனை கிளிக் செய்வதன் மூலம் HBB / DTV இலக்கத்தை செயல்படுத்தும் எண்ணாகக் கொடுப்பதன் மூலமும் வாடிக்கையாளர்கள் My Dialog app மூலம் நேரடியாக eZ Reload ஐ செயல்படுத்தலாம். நீங்கள் eZ Reload ஐ செயற்படுத்தியதும், அதன் பெறுமதி உங்கள் மொபைலுக்கு ரீசார்ஜ் ஆக மாற்றப்படும்.
SMS அனுப்பல்
பெறப்பட்ட eZ Reload SMS ஐ வேறு ஒருவருக்கு அனுப்பலாம், இதன் மூலம் அவர்கள் eZ Reload ஐ செயற்படுத்த முடியும்.
USSD Option
உங்கள் Dialog மொபைலில் இருந்து #356*4# டயல் செய்து, உங்கள் பணப்பையில் பெற்றுக்கொள்ளக்கூடிய eZ Reload இனையும் உங்களுடைய அன்புக்குரியவருக்கு பரிசளிக்கக்கூடிய eZ Reload இனையும் சரிபாருங்கள்
நேரடியாக கொள்வனவு செய்தல்
விற்பனையாளரிடமிருந்து கொள்வனவு செய்யும் போது நீங்கள் தேவையான மொபைல் இலக்கத்தை வழங்கலாம் மற்றும் கொடுக்கப்பட்ட இலக்கத்திற்கு SMS அனுப்பப்படும்.
Dialog App ஊடாக பரிசளித்தல்
MyDialog App இல் கொடுக்கப்பட்டுள்ள “Gift” எனும் விருப்பத்தைப் பயன்படுத்தி eZ Reload இனை பரிசளிக்கலாம். நீங்கள் ஒரு eZ Reloadஐ பரிசளித்த பிறகு அது தானாகவே உங்கள் eZ Reload பணப்பையிலிருந்து அகற்றப்பட்டு, பெறுனரின் eZ Reload பணப்பையில் பிரதிபலிக்கிறது. பெறுனர் MyDialog app இல் இருந்து அறிவிப்பை பெறுவார்.
MyDialog App ஊடாக நேரடியாக செயற்படுத்தவும்
ஏற்கனவே கொள்வனவு செய்த மின் அட்டையை ஐ செயற்படுத்தும் இடத்தில் தேவையான மொபைல் இலக்கத்தை நேரடியாக உள்ளிடலாம்