Call Hold and Call Waiting
Call Hold மற்றும் Call Waiting ஆகியன அநேகமாக அனைத்து தொலைபேசிகளிலும் முன்னதாகவே செயற்படுத்தப்பட்டிருக்கும் சக்திமிக்க அடிப்படை அம்சமாகும். இந்த வசதியானது (வேறொரு அழைப்பில் இருந்தாலும்) உங்களுக்கு அழைப்பினை மேற்கொள்பவர் யார் என அறியத்தருவதுடன், அழைப்புகளை Hold நிலையில் வைத்திருக்க வழியமைக்கின்றது.
Activation
அநேகமான சேவைகள் ஏற்கனவே முன்னிருப்பாக செயற்படுத்தப்படும். கோல் ஹோல்ட் மற்றும் கோல் வெயிட்டிங் சேவைகள் செயற்படுத்தப்படவேண்டியிருக்கும். செயற்படுத்த பின்வரும் குறியீட்டினை பின்தொடருங்கள் .
சரிபார்ப்பதற்கென குறியீடுகள் சில பட்டியலிடப்பட்டுள்ளன.
கோல் ஹோல்ட் மற்றும் கோல் வெயிட்டிங்
கோல் ஹோல்ட்டிங் இனை SMS ஊடாக செயற்படுத்த VAS CH என டைப்செய்து 678ற்கு SMS செய்யுங்கள்.
இரண்டு சேவைகளையும் பின்வரும் குறியீட்டினை பயன்படுத்தி செயற்படுத்திக்கொள்ளலாம்:
Activation : *43# மற்றும் SEND/OK
Deactivation : #43#மற்றும் SEND/OK
குறித்த சேவைகள் செயற்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை சரிபார்த்துக் கொள்ள: *#43# மற்றும் SEND/OK
How to use Call Hold and Call Waiting?
கோல் ஹோல்ட்: இந்த சேவையானது, அழைப்பினை முடிவுறுத்தாமல் குறித்த நபரின் அழைப்பினை இடைநிறுத்தி ஹோல் நிலையில் வைக்க அனுமதிக்கின்றது
கோல் வெயிட்டிங் :நீங்கள் அழைப்பொன்றில் இருக்கும் வேளையில் மற்றுமொருவர் உங்களுக்கு அழைப்பினை மேற்கொண்டால் இந்த சேவை புதிய அழைப்பு குறித்து சமிக்ஞையிடும். புதிய அழைப்பினை உடனடியாக ஏற்றுக்கொள்வதா அல்லது ஏற்கனவேயுள்ள அழைப்பை ஹோல்ட் நிலையில் வைத்து புதிய அழைப்பினை எடுப்பதா என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். அல்லது அனைத்து அழைப்புகளையும் ஒன்றிணைத்து கொன்ஃப்ரன்ஸ் கோல் ஆகவும் மாற்றலாம்.
கட்டண முறைமை
இந்த சேவைகள் அனைத்தும் இலவசம். மேலதிக வாடகைக் கட்டணங்கள் தேவையில்லை.