Twin SIM
Twin SIM என்பது, வாடிக்கையாளர்கள் ஒரே இலக்கத்துடன், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை இணைப்புகள் என (இரண்டு வெவ்வேறு இணைப்புகளை) பயன்படுத்தும் வசதியை அளிக்கின்றது நீங்கள் இரண்டாம் நிலையிலிருந்து அழைப்பினை மேற்கொள்ளும் போது, SMS அல்லது MMS இனை அனுப்பும் போது, பெறுநருக்கு இரண்டாம் நிலை இணைப்பின் இலக்கத்திற்கு மாறாக முதன்மை இணைப்பின் இலக்கமே காட்சிப்படுத்தப்படும்
How to use
உங்கள் இணைப்புகள் முதன்மை மற்றும் துணை இணைப்புகளாக குறிக்கப்பட்டதும், உங்கள் முதன்மை இணைப்பு அணைத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையிலும், உங்களுக்கு வரும் அழைப்புகள் துணை இணைப்புக்கு forward செய்யப்படும். துணை இணைப்பின் ஊடாக நீங்கள் அழைப்புகளை பெற்றுக்கொள்ளவோ மேற்கொள்ளவோ முடியும் .
எனினும் துணை இணைப்பு அணைத்து வைக்கப்பட்டிருந்தால், தானியங்கி முறையில் அதற்கு வரும் அழைப்புகள் முதன்மை இணைப்பிற்கு forward செய்யப்படமாட்டாது. இரு இணைப்புகளுக்கிடையிலும் forward செய்யப்படும் அழைப்புகள் இலவசம்.
முதன்மை மற்றும் துணை இணைப்புகளிலிருந்து மேற்கொள்ளப்படும் அழைப்புகள் தனித்தனியாக தனி இணைப்புகளை ஒத்த வகையில் ஒவ்வொரு இணைப்பின் பக்கேஜுக்கும் இணங்க பில்கட்டணமிடப்படும்.
கட்டண முறைமை
நியம வாடகைக் கட்டணங்களுக்கு மேலதிகமான, மாதாந்தம் உங்களிடமிருந்து ரூ. 100 + வரிகள் கட்டணமாக அறவிடப்படும்.
துணை இணைப்பிற்கு நியமக் கட்டணம் மாத்திரமே அறவிடப்படுவதுடன், மேலதிக வாடகை அறவிடப்படமாட்டாது.
குறிப்புகள்
பின்வரும் தெரிவுகளை இரட்டை SIM இனால் செயற்படுத்த முடியாது
Conditions apply: Please visit the closest Dialog Customer Care Centre for further information.
-
முதன்மை இணைப்பானது ஒன்றுக்கு மேற்பட்ட துணை இணைப்புகளைக் கொண்டிருத்தல்.
-
துணை இணைப்பானது ஒன்றுக்கு மேற்பட்ட முதன்மை இணைப்புகளைக் கொண்டிருத்தல்.
-
முதன்மை இணைப்பானது பிறிதொரு இணைப்பிற்கு துணை இணைப்பாக விளங்குதல்r.
-
துணை இணைப்பானது பிறிதொரு இணைப்பிற்கு முதன்மை இணைப்பாக விளங்குதல்.