வாடிக்கையாளர் உரிமையை உறுதி செய்தல்
வாடிக்கையாளர் உரிமையை உறுதி செய்தல் தனிப்பட்ட மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்ட ரீதியான தேவையாகும். உரிமையை சரிபார்க்க #132# ஐ டயல் செய்யுங்கள்.
வாடிக்கையாளர் உரிமையை உறுதி செய்தல் தனிப்பட்ட மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்ட ரீதியான தேவையாகும். இணைப்பின் தற்போதைய உரிமை பற்றிய விபரங்களை #132# ஐ டயல் செய்து அறியலாம். உங்கள் அடையாளம் பெயர் மற்றும் முகவரி என்பன சரி எனின் சரி என உறுதி செய்யுங்கள். விபரங்கள் தவறு எனின் தவறு என உறுதி செய்வதுடன் உங்கள் உரிமை விபரங்களை புதுப்பிக்க Dialog காட்சியறை ஒன்றுக்கு விஜயம் செய்யுங்கள். கீழுள்ள அடிக்கடி வினவப்படும் வினாக்கள் உங்கள் உரிமை விபரங்களைப் புதுப்பித்தல் தொடர்பான மேலதிக விபரங்களை வழங்கும்.
மேலதிக விபரங்களுக்கு TRCSL விளம்பரத்திற்கு செல்க.
எனது கையடக்க தொலைபேசியின் உரிமையினை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வது ?
SIM உரிமைத்துவம் பெறுவதற்கு உங்கள் மொபைலில் #132# ஐ டயல் செய்யுங்கள்.
உங்கள் முகவரியை உறுதி செய்வதற்கு Option 3 ஐ தெரிவு செய்க
உரிமைத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு கீழ் குறிப்பிடப்படும் வழிமுறைகளை பின்பற்றுக
தனிப்பட்ட/தனிநபர் இணைப்பு
பெருநிறுவன/அலுவலக இணைப்பு
உரிமைத்துவத்தை திருத்துவதற்கு தேவையான பத்திரங்கள்
- SIM
- தேசிய அடையாள அட்டை/ ஓட்டுனர் உரிமம்/ பாஸ்போர்ட்
- முகவரி உறுதிப்படுத்தல்
இணைப்பு உங்கள் அன்பானவர்கள் அல்லது நன்கு தெரிந்த நபர் பாவிக்கின்றார் ஆனால் உரிமைத்துவத்தை நீங்கள் வைத்திருக்க விரும்பினால் பாவனையாளரின் விபரங்களை Dialog வாடிக்கையாளர் சேவை நிலையங்களுக்கு விஜயம் செய்து Update செய்யலாம் எனினும் இணைப்பின் பொறுப்பு உங்களிடமே இருக்கும்.
Frequently asked questions
உங்கள் அடையாள அட்டை இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இணைப்புகள் தொடர்பான விபரங்கள்
- #132# ஐ அழைத்து 4வது தீர்வை தெரிவு செய்வதன் மூலம் உங்கள் அடையாளத்தின் கீழுள்ள அனைத்து mobile இணைப்புகள் குறித்த விபரங்களையும் அறியலாம்
- உங்கள் அடையாளத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள உங்களால் அங்கீகரிக்கப்படாத இணைப்புகள் ஏதேனும் இருப்பின் அவற்றை துண்டிக்க முடியும்
- குறித்த பாவனையாளர்கள் அவ் இலக்கங்களை அவர்களது பெயரின் கீழ் பதிவு செய்தால் மாத்திரமே இணைப்புகள் மீண்டும் புதுப்பிக்கப்படும்
- குறித்த இணைப்புகளைத் துண்டிப்பதற்கு வாடிக்கையாளர் நேரடியாக சேவை நிலையமொன்றுக்கு சென்று அல்லது பெக்ஸ், மெயில் மற்றும் கடிதம் என்பவை மூலமாக வேண்டுகோள் விடுக்கலாம். வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக குறித்த பெக்ஸ், மெயில், கடிதம் என்பன துண்டிக்கப்பட வேண்டிய இலக்கங்கள், வாடிக்கையாளரின் கையொப்பம், தேசிய அடையாள அட்டையின் பிரதி என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும்
உரிமை முற்றிலும் வேறுபட்டதாயின்
- நீங்கள் வாடிக்கையாளர் சேவை நிலையங்களுக்கு விஜயம் செய்தல் வேண்டும்.
- உரிமைத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு கீழ்வரும் விபரங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்
- SIM
- SIM இல்லாவிடில் பில் ரசீது/ இணைப்புக்குப் பாவித்த ரீசார்ஜ் காட் அவசியம்
- தேஅஅ/ ஓட்டுனர் உரிமம்/ பாஸ்போர்ட் (மேற்குறிப்பிட்டள்ளவாறு)
- முகவரி உறுதிப்படுத்தல்
- இணைப்பின் பதிவு யார் என்றும் தொடர்பு கொள்ளக்கூடியதாகவும் இருப்பின்
- உரிமை மாற்றப்படுவதற்கு விருப்பம் தெரிவித்த கடிதத்துடன் அந்நபரின் அடையாள அட்டையின் பிரதி ஒன்றை சமர்ப்பிக்கவும்
எனது முகவரி மட்டும் பிழையாயின்
- வாடிக்கையாளர் சேவை நிலையமொன்றிற்கு விஜயம் செய்து Update செய்க.
- உரிமைத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு கீழ்வரும் விபரங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
- தேஅஅ/ ஓட்டுனர் உரிமம்/ பாஸ்போர்ட் (மேற்குறிப்பிட்டள்ளவாறு)
- முகவரி உறுதிப்படுத்தல்
எனது விபரங்கள் சரியானவை ஆனால் சில எழுத்துப் பிழைகள் உள்ளன.
- உங்கள விபரங்களை சரி செய்து கொள்ள 1777க்கு அழையுங்கள்
- அல்லது கீழ்காணும் பத்திரங்களுடன் Dialog வாடிக்கையாளர் சேவை நிலையங்களுக்கு விஜயம் செய்யுங்கள்
- தேஅஅ/ ஓட்டுனர் உரிமம்/ பாஸ்போர்ட் (மேற்குறிப்பிட்டள்ளவாறு)
- முகவரி உறுதிப்படுத்தல்
- தேஅஅ பிழையாக திருத்தப்பட்டிருப்பின் Dialog வாடிக்கையாளர் சேவை நிலையங்களுக்கு விஜயம் செய்யுங்கள்