அறிவித்தல்
2026 செப்டம்பர் 21
அன்புள்ள வாடிக்கையாளரே,
2026
செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி
வரையிலான காலப்பகுதியில், 'செயற்கைக்கோள்
சூரியக் குறுக்கீடு' (Satellite Sun
Interference / Sun Outage) எனப்படும் இயற்கை
நிகழ்வின் காரணமாக, செயற்கைக்கோள் அலைவரிசை
வரவேற்பு தற்காலிகமாகப் பாதிக்கப்படலாம்.
இக்காலப்பகுதியில், Dialog Television வாடிக்கையாளர்களுக்குக் காட்சி உறைதல் (Video Freezing), படத் தெளிவின்மை (Pixelation), திரை இருளாதல் (Blackouts) அல்லது “No Signal” அறிவிப்புத் தோன்றுதல் மூலம் ஒலி மற்றும் காட்சித் தொடர்புகள் துண்டிக்கப்படும் தற்காலிகச் சேவைத் தடங்கல்கள் 10 நிமிடங்கள் வரை ஏற்படக்கூடும்.
இத்தடங்கல்கள் தற்காலிகமானவை என்பதோடு, சூரியக் குறுக்கீட்டுக் காலம் முடிந்ததும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். நாங்கள் இச்சூழ்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதுடன், எமது சேவைகளில் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
இதனால் உங்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துகிறோம் என்பதுடன், உங்களது புரிதலுக்கு எமது நன்றிகள்.
2026 ஆகஸ்ட் 31
செயல்பாடுகளை நிறுத்துதல் – Karuna.lk
டயலொக் அறக்கட்டளையின் (Dialog Foundation) அறங்காவலர் சபை, Karuna.lk நிதி திரட்டும் தளத்தின் செயல்பாடுகளை 2026 ஆகஸ்ட் 31 முதல் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, இத்தினத்திலிருந்து புதிய திட்டங்களோ அல்லது தற்போதுள்ள திட்டங்களுக்கான நன்கொடைகளோ இத்தளத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
பல வருடங்களாக Karuna.lk தளம் மூலமாகவும், அதன் மூலம் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அர்த்தமுள்ள நல்நோக்கங்களுக்கும் ஆதரவளித்த அனைத்து நன்கொடையாளர்கள், பிரச்சார ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப் பயணத்தை நிறைவு செய்யும் இந்த வேளையில், சீரான மாற்றத்தை உறுதிசெய்யும் வகையில், செயல்பாடுகள் நிறுத்தப்படும் திகதி வரை பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் நிலுவையில் உள்ள பிரச்சாரங்களை முறையாக நிர்வகிப்பதில் நாங்கள் உறுதியுடன் செயல்படுவோம்.
2026 ஜூலை 01
அறிவித்தல்
அன்பான வாடிக்கையாளரே, 2481/22 ஆம் இலக்க
அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் அண்மைக்கால
அறிவுறுத்தல்களுக்கு அமைய, எதிர்வரும் 2026 ஜூலை
1 ஆம் திகதி முதல் புதிய கட்டணப்பட்டியல் (Bill)
வடிவத்தை டயலொக் அறிமுகப்படுத்தவுள்ளது.