Body

Genie Business, Kangaroo Cabs உடன் இணைந்து இலங்கையின் முதல் Tap to Pay taxi சேவையை அறிமுகப்படுத்துகிறது

2025 மார்ச் 5         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

புகைப்படம் விளக்கம், இடமிருந்து வலமாக: திரு. அமில சுபசிங்க (IT மேலாளர், Kangaroo Cabs), திரு. துஷார பொன்சேகா (செயல்பாட்டு இயக்குநர், Kangaroo Cabs), திரு. குசல் பொன்சேகா (நிதி இயக்குநர், Kangaroo Cabs), திரு. நசீம் முகமது (தலைமை நிர்வாக அதிகாரி/இயக்குநர், Dialog Finance PLC), திருமதி. சச்சினி டி சில்வா (வணிக வணிகத் தலைவர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி) மற்றும் திருமதி. கங்கி பெரேரா (மூலோபாய வணிக மேம்பாட்டு மேலாளர் ,Dialog Finance PLC).

Dialog Finance PLC வழங்கும் Genie Business மற்றும் Kangaroo Cabs இணைந்து, இலங்கையின் முதல் ‘Tap to Pay’ taxi சேவையை அறிமுகப்படுத்தி, taxi- யில் பணம் செலுத்தும் முறையை மாற்றியமைத்துள்ளது. பயணிகள் தங்களது Visa அல்லது Mastercard கார்டை taxi ஓட்டுனர் பயன்படுத்தும் NFC-இயங்கும் smartphone இல் ‘Tap’ செய்யலாம், இதனால் பணப் பரிவர்த்தனை எளிதாகி, POS டெர்மினல் தேவையற்றதாகிறது.

இது தனிப்பயனாக்கப்பட்ட taxi துறைக்கு வடிவமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதல் Tap to Pay தீர்வு ஆகும் . Kangaroo Cabs ஓட்டுனர்கள் இப்போது smartphones மூலம் நேரடியாக card payments ஏற்க முடியும், இது பரிவர்த்தனைகளுக்கு எளிதான மற்றும் தொல்லையற்ற அனுபவத்தை உருவாக்குகிறது, ஓட்டுனர்கள் மற்றும் பயணிகளுக்கு. Genie Business-இன் தனிப்பயனாக்கப்பட்ட ஒருங்கிணைப்புடன், ஓட்டுனர்கள் பயணக் கட்டணங்களை கையேடு முறையில் பதிவேற்ற வேண்டியதில்லை—கணினி அமைப்பு தானாகவே கட்டணத்தை மீட்டெடுத்து, சரியான தன்மையை உறுதி செய்து, கட்டண செயல்முறையை விரைவாக மாற்றுகிறது.

35 ஆண்டுகளாக இலங்கையின் முன்னணி தனியார் போக்குவரத்து நிறுவனமாக விளங்கும் Kangaroo Cabs, பாதுகாப்பு, வசதிகள், மற்றும் வாடிக்கையாளர் திருப்தியில் தனி முத்திரை பதித்துள்ளது. Genie Business வழங்கும் ‘Tap to Pay’ தீர்வு மூலம், இந்நிறுவனம் பணம் மற்றும் App-அடிப்படையிலான கட்டண முறைகளைத் தாண்டி புதிய கட்டணத் தேர்வுகளை அறிமுகப்படுத்துகிறது, இது பயணிகள் வசதியையும் பரிவர்த்தனை பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது.

Dialog Finance PLC இன் CEO நசீம் முகமது கூறுகையில், "இலங்கையின் முதல் Tap to Pay செயல்படுத்தப்பட்ட taxi சேவையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். Genie Business என்பது வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் மற்றும் வணிகங்களுக்கு சக்தியூட்டும் புதுமையான நவீன நிதி தொழில்நுட்ப (FinTech) தீர்வுகளை வழங்க உறுதியாகப் பணியாற்றுகிறது." என தெரிவித்துள்ளார்.

Kangaroo Cabs நிறுவனத்தின் நிதி இயக்குநர் குசல் பொன்சேகா தெரிவித்ததாவது,“இந்த கூட்டணி Kangaroo Cabs நிறுவனத்திற்கான ஒரு புதிய முயற்சியாகும். ‘Tap to Pay’ சேவையை வழங்குவதன் மூலம், நாங்கள் புதுநிலை கட்டண தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதோடு, எங்கள் ஓட்டுனர்களுக்கான செயல்திறனை மேம்படுத்த உதவுகின்றோம். இந்த தீர்வு, பயணக் கட்டண வசூலை எளிதாக்கி, கட்டண விவாதங்களை குறைத்து, எங்கள் வாடிக்கையாளர் சேவை மற்றும் புதுமையை முன்னிலைப்படுத்த உதவுகிறது

Genie Business, Dialog Finance PLC உடன் இணைந்து இலங்கையின் MSME (சிறிய, நடுத்தர வணிகங்கள்) மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு முன்னோடி டிஜிட்டல் கட்டணத் தீர்வுகளை வழங்கி வருகிறது. இது Tap to Pay, Internet Payment Gateway (IPG), Multi-Currency Pricing, Payment Links, E-Store, மற்றும் QR payments போன்ற பல்வேறு தீர்வுகளை வழங்குகிறது. மேலும், Genie Business இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்க, வணிக வளர்ச்சிக்கான டிஜிட்டல் கடனுதவிகளையும் (Digital Lending) வழங்கி வருகிறது .” மேலும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு சக்தியூட்டுகிறது.