feature-today

டிஜிட்டல் பிரிட்ஜ்

பின்னணி

இலங்கையில், பின்தங்கிய பொருளாதாரம் என்பது, பாரம்பரியமாக விவசாயத்தில் தங்கியுள்ளது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் அதிகளவில் அரசாங்க மானியங்களில் தங்கியுள்ளனர். இந்த நிலைக்கு பிரதான காரணம், கல்வி நிலையில் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையில் காணப்படும் மாறுபட்ட நிலை அமைந்துள்ளது. பின்தங்கிய பகுதிகளில், ஆளுமை பொருந்திய உயர் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பாரியளவில் பற்றாக்குறை நிலவுகிறது. அத்துடன், கல்வி பயிலும் வேகமும் மந்தமாக அமைந்துள்ளது. இலங்கையின் கல்வித் திட்டம் என்பது, ஒவ்வொரு இரு பிள்ளைகளிலும், ஒரு பிள்ளை உயர் கல்வியில் சிறந்த பெறுபேறுகளை பெறுவதாக அமைந்துள்ளதுடன், இந்த மாணவர்கள் பெரும்பாலும் நகரங்களை சேர்ந்த மாணவர்களாக அமையமாட்டார்கள். இதற்கமைய கல்வித் திட்டத்தில் நகரத்தையும் கிராமத்தையும் டிஜிட்டல் நுட்பத்தின் மூலம் இணைக்கும் வகையில், டிஜிட்டல் இணைப்பு தொலைதூர கல்வி பயிலும் திட்டமொன்றை கல்வி அமைச்சுடன் இணைந்து பின்தங்கிய பாடசாலைகளில் டயலொக் அறிமுகம் செய்திருந்தது. இந்த திட்டம் இரண்டு வருட கால பரீட்சார்த்த நிலையை பூர்த்தி செய்திருந்ததுடன், பல தொழில்நுட்ப மற்றும் கல்விசார் மாற்றங்களுடன், அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜப்கச அவர்களின் மூலம் 2009 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 20 ஆம் திகதி இந்த திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தின் நோக்கம்

பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த வசதி குறைந்த மாணவர்களுக்கு, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து, கல்வி பயில்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்திருந்தது.

இந்த திட்டத்தினூடாக 1000 பாடசாலைகளை இணைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. (கிட்டத்தட்ட நாட்டின் மொத்த பாடசாலைகளின் 10 வீதமாகும்) இதற்காக தொலைக்காட்சிகள், டிகோடர் அலகுகள் போன்றன வழங்கப்பட்டிருந்தன். இதன் மூலம் செய்மதி கல்விசார் தொலைக்காட்சி நாளிகையான ”நெனச” (அறிவு நுட்பம்) பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் 500000 பின்தங்கிய மாணவர்களுக்கு உயர் தரம் வாய்ந்த கல்விசார் ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இலங்கையின் கல்வி முறையில் இந்த ”நெனச” திட்டத்தின் மூலம் மாற்றம் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நவீன கல்வி பயிலும் கட்டமைப்பானது, மேலதிக ஒன்லைன் கல்விபயிலும் முகாமைத்துவ கட்டமைப்பின் உதவியுடன் மேலும் உறுதி செய்யப்படவுள்ளது. இதற்காக டயலொக் புரோட்பான்ட் உதவிகளை வழங்கும்.

அறிமுகம்

அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ”நெனச” டிஜிட்டல் செய்மதி தொலைக்காட்சி நாளிகை மூலமாக தொலைதூர கல்வி இணைப்பைஆரம்பித்து வைத்திருந்தார். இந்த கட்டமைப்பு கல்வி அமைச்சு மற்றும் தேசிய கல்வி நிறுவனம் ஆகியவற்றின் மூலம் பராமரிக்கப்படுகின்றன. இந்த அறிமுக நிகழ்வு, ரஞ்சன் விஜேரத்ன வித்தியாலயம், பெல்வத்தை, மொனராகலையில் 2009 ஜுலை மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்றது.

மைல்கற்கள்
  • 2009 பெப்ரவரி – பாடசாலைகளுக்கு தொலைக்காட்சிகள் ஒப்படைப்பு.
  • 2009 ஜுலை – ”நெனச” தொலைக்காட்சி அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களால் அங்குரார்ப்பணம்.