Body

டயலொக் ஆசிஆட்டா BOI உடன் அமெரிக்க டாலர் 250 மில்லியன் முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

19 பெப்ரவரி 2020         கொழும்பு

 

news-1

படத்தில் அமர்ந்திருப்ப்வர்கள் இடமிருந்து வலம்: டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் தலைவர் டத்துக் அஸ்ஸத் கமலுடின், இலங்கை முதலீட்டு வாரியத்தின் தலைவர் திரு. சுசந்த ரத்நாயக்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் இயக்குனர்/ குழு தலைமை நிர்வாகி திரு. சுபுன் வீரசிங்க மற்றும் இலங்கை முதலீட்டு வாரியத்தின் பொது இயக்குனர் திருமதி சி. மலல்கொட

படத்தில் நிற்பவர்கள் இடமிருந்து வலம் : இலங்கை மலேசிய உயர் ஸ்தானிகர் மேன்மையான டான் யாங் தாய், ஆசிஆட்டா குழு பெர்ஹாட், நிர்வாக இயக்குனர், துணைக்குழு தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் குழு தலைமை நிர்வாக அதிகாரி – நியமனம், டத்தோ மொஹமட் இசாதீன் இத்ரிஸ், ஆசிஆட்டா குழும பெர்ஹாட், நிர்வாக இயக்குனர்/ தலைவர் மற்றும் குழு தலைமை நிர்வாக அதிகாரி, டான் ஸ்ரீ ஜமாலுதீன் இப்ராஹிம், ஆசிஆட்டா குழும பெர்ஹாட், தலைமை நிர்வாகி - தொலைத்தொடர்பு வணிக மற்றும் நிர்வாக துணைத் தலைவர், கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழு நிறுவன செயலாளர் திருமதி விரந்தி அட்டிகல்லே

இலங்கை முதலீட்டு வாரியத்தின் (BOI) உதவியுடன் செயல்படும் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர் (FDI) டயலொக் ஆசிஆட்டா குழுமம், கூடுதல் தொகையான 254.1 மில்லியன் அமெரிக்க டாலர் (இலங்கை ரூபாய் 46.1 பில்லியன்) முதலீட்டிற்காக BOI உடன் இரண்டு துணை ஒப்பந்தங்களை மேற்கொள்வதாக 2020 பெப்ரவரி 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இந்த முதலீட்டு தொகையானது டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியில் இருந்து 190.7 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் அதன் துணை நிறுவனமான டயலொக் புரோட்பாண்ட் நெட்வொர்க்ஸ்; (பிரைவேட்) லிமிட்டட் நிறுவனத்திலிருந்து 63.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை உள்ளடக்கியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மொபைல் மற்றும் நிலையான 4G-LTE வலையமைப்புகளின் விரிவாக்கம், IP மற்றும் ஃபைபர் வலையமைப்புகளின் பரிணாமம் மற்றும் குழுவின் Wi-Fi மற்றும் புரோட்பாண்ட் வலையமைப்புக்களின் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய டயலொக் ஆசிஆட்டா குழுமத்தின் ICT உள்கட்டமைப்பு மேம்பாட்டின் பரந்த அளவைக் கொண்டுள்ளது. மேலும், இந்த முதலீடு 5G இணைப்பைப் பயன்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மைகளைத் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது, இது இலங்கையை 5G தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடியாக நிலைநிறுத்தும். இது கடலின் அடித்தளத்துடன் இணைந்த கேபிள் மற்றும் தரையிறங்கும் நிலைய மேம்பாட்டுடன் இருக்கும், இது மிகவும் நம்பகமான மற்றும் செலவு குறைந்த இணைய இணைப்பை வழங்கும்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மற்றும் இலங்கை முதலீட்டு வாரியம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் டயலாக் ஆசிஆட்டா பிஎல்சியின் தலைவர் டத்துக் அஸ்ஸத் கமலுடின், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் இயக்குனர்/குழு தலைமை நிர்வாகி திரு. சுபுன் வீரசிங்க மற்றும் வாரியத்தின் தலைவர் திரு. சுசந்த ரத்நாயக்க ஆகியோர் கையெழுத்திட்டனர். இலங்கை முதலீட்டில், டயலொக் புரோட்பாண்ட் நெட்வொர்க்ஸ்; (பிரைவேட்) லிமிட்டட் மற்றும் இலங்கை முதலீட்டு வாரியம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒப்பந்தத்தில் டயலொக் புரோட்பாண்ட் நெட்வொர்க்ஸ்; (பிரைவேட்) லிமிட்டட் இயக்குனர் திரு. சுபுன் வீரசிங்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழு நிறுவன செயலாளர் திருமதி விரந்தி அட்டிகல்லே மற்றும் இலங்கை முதலீட்டு வாரியத்தின் தலைவர் திரு. சுசந்த ரத்நாயக்க ஆகியோர்; கையெழுத்திட்டார்கள்.

மலேசியா, இந்தோனேசியா, பங்களாதே~;,. கம்போடியா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளில் செயல்படும் ஆசியாவின் இரண்டாவது பெரிய டெல்கோவான ஆசிஆட்டா குழும பெர்ஹாட்டின் நிறுவனங்களின் துணைக்குழு டயலொக் ஆசிஆட்டா குழுமமாகும். மேலும் ஆசிஆட்டா 1994 முதல் இலங்கையில் உறுதியான மற்றும் நீண்டகாலமாக செயற்படும் முதலீட்டாளர்களில் ஒருவராகவும் திகழ்கின்றது.

இலங்கையின் மிகப்பெரிய அன்னிய நேரடி முதலீடாக, டயலொக் ஆசிஆட்டா குழுமம் 1994 முதல் இலங்கைக்கு 2.7 பில்லியன் அமெரிக்க டாலரினை (இலங்கை ரூபாய் 320 பில்லியன்) பங்களிப்பாக வழங்கியுள்ளது. இதன் முதலீடு நாட்டின் மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 11% ஆகும். இது சம்பந்தமாக, நாட்டில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்த முதல் நிறுவனமான இந்த நிறுவனமானது BOI ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

"முதலீட்டு வாரியத்துடனான எங்கள் பங்காளித்துவத்தை நாங்கள் மதிக்கிறோம், இன்று இந்த ஒப்பந்தத்தில் கைசாத்திடுவதையிட்டு நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம். 1994 முதல் மிகப்பெரிய அன்னிய நேரடி முதலீட்டாக இங்கு வந்துள்ள இந்த புதிய முதலீடு, நாட்டிற்கும் மக்களுக்கும் ஆசிஆட்டாவின் நீண்டகால உறுதிப்பாட்டினை எடுத்தியம்புகின்றது. மேலும், இலங்கையில் சிறந்த இணைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களை வழங்குவதில் ஆசிஆட்டாவும் டயலாக் நிறுவனமும் உற்சாகமாக செயற்படுகின்றன” என்று ஆசிஆட்டா குழுமத்தின் பெர்ஹாட்டின் நிர்வாக இயக்குனர்/தலைவர் மற்றும் குழு தலைமை நிர்வாக அதிகாரி டான் ஸ்ரீ ஜமாலுதீன் இப்ராஹிம் தெரிவித்தார்.

"உள்@ர் தொலைத் தொடர்புத்துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளதுடன் இது இலங்கையைத் தவிர்த்து, பெரும்பாலும் பிராந்தியத்தை விட முன்னேறியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராக இந்த வளர்ச்சியின் முக்கிய இயக்கி டயலொக் ஆசிஆட்டா, தொழில்நுட்பம் மற்றும் உற்கட்டமைப்பில் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் மற்றொரு விரிவாக்கத்தை மேற்கொள்வதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று இலங்கை முதலீட்டு வாரியத்தின் தலைவர் சுசந்த ரத்நாயக்க தெரிவித்தார்.