Body

டயலொக் தொடர்ந்து 5வது ஆண்டாக 86வது ‘Battle of the Saints’ க்கு அனுசரணை வழங்குகின்றது

2020 பொப்ரவரி 11         கொழும்பு

 

news-1

இடமிருந்து வலம்) புனித பீட்டஸ் கல்லூரியின் கூட்டு அமைப்புக் குழு உறுப்பினர் மைக்கேல் எலியாஸ், புனித பீட்டஸ் கல்லூரியின் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் வணக்கத்துக்குரிய மிலன் பெர்னார்ட், புனித ஜோசப் கல்லூரியின் ரெக்டர் வணக்கத்துக்குரிய ரஞ்சித் அண்ட்ராடி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும சட்டம் மற்றும் ஒழுங்கு முறை பிரிவு பிரதான சட்ட ஆலோசகர்/ பிரதித் தலைவர் றினேஷ் பெர்னான்டோ, புனித பீட்டஸ் கல்லூரியின் ரெக்டர் வணக்கத்துக்குரிய தந்தை ரோஹித ரோட்றிகோ, புனித ஜோசப் கல்லூரியின் ரெக்டர் வணக்கத்துக்குரிய பிரியன் திசெர, புனித ஜோசப் கல்லூரியின் அணித்தலைவர் ஜோஹான் டீ சில்வா, மற்றும் கூட்டு அமைப்பு குழு அங்கத்தவர் டெரன்ஸ் பெர்னாண்டோ.

இலங்கையின் முன்னணி கத்தோலிக்க பாடசாலைகளான கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் கொழும்பு புனித பீட்டஸ் கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையே 86வது வருடாந்த கிரிக்கெட் போட்டியில் இரு அணியினரும் மீண்டும் சந்தித்துக்கொள்வதோடு புனிதர்கள் மற்றுமொரு உற்சாகம் மற்றும் விருவிருப்பு மிக்க போட்டியினை விளையாடுவதற்காக தயாராகின்றாகள். இந்த போட்டிகள் வணக்கத்துக்குரிய போதகர் மயூரிஸ் ஜே.லீ ஜோக் கிண்ணத்துக்காக 2020 மார்ச் மாதம் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் கொழும்பு பி.சாரா ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

‘Battle of Saints’ எனும் உற்சாகம் மற்றும் விறுவிறுப்பு மிக்க இந்த கிரிக்கெட் போட்டி மட்டுமே முதல் இன்னிங்ஸில் 60 ஓவர்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக இரண்டு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. 2020ஆம் ஆண்டு புனித ஜோசப் கல்லூரியினை, சகல துறை வீரர் ஜோஹான் டி ஜில்வா வழிநடத்தவுள்ளதுடன், புதிய பீட்டஸ் கல்லூரியினை விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ஷேனன் பெர்னாண்டோ அவர்களும் வழிநடத்தவுள்ளார்கள்.

86வது ‘Battle of the Saints’ ஊடக மாநாட்டின் போது உரையாற்றிய கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் வணக்கத்துக்குரிய ரஞ்சித் அன்றாடி அவர்கள், இலங்கையின் இரண்டு முன்னணி பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெரும், வணக்கத்துக்குரிய போதகர் மயூரிஸ் ஜே.லீ கோக் கிண்ணத்துக்கான போட்டிகள் இலங்கையின் விளையாட்டு நாட்காட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக திகழ்வதுடன் இது இளைஞர்களையும் முதியவர்களையும் ஈர்க்கின்ற போட்டியாகவும் காணப்படுகின்றது எனவும் இரண்டு அணிகளுக்கும் எனது மனமார்ந்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

கொழும்பு புனித பீட்டஸ் கல்லூரியின் அதிபர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை ரோஹித ரோட்றிகோ கருத்து தெரிவிக்கையில், கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் கொழும்பு புனித பீட்டஸ் கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான “Battle of the Saints’ வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் எட்டு தசாப்தங்களுக்கு மேலாக பராம்பரிய வரலாற்றினையும் தோழமையினையும் கொண்டுள்ளது. “Battle of the Saints’ விளையாட்டு போட்டிகள்ää விளையாட்டை மிக உயர்ந்த மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய பல வீரர்களை உருவாக்கியுள்ளதுடன் இலங்கை தாய் நாட்டிற்கு மிகுந்த மரியாதையும் பெற்றுத்தந்துள்ளது. எங்களுடைய இரண்டு பள்ளிகளுக்கிடையிலான ‘Big Match’ இலங்கை பாடசாலை கிரிக்கெட் நாட்காட்டியில் மிகவும் எதிர்பாக்கப்பட்ட போட்டியாகும். இந்த ஆணடும் விதிவிலக்கல்ல. 2 நாட்கள் விறுவிறுப்பாக இடம்பெறவுள்ள இந்த போட்டிகளில் கலந்துக்கொள்ளும் இரண்டு அணி வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என தெரிவித்தார். வருடாந்த ‘Battle of the Saints’ 86வது போட்டிக்க நிதியுதவி வழங்கிய டயலொக் ஆசிஆட்டா நிறுவனத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்” என்பது இரு அருட்தந்தைகளிடமும் எதிரொலித்த வார்த்தைகள்.

புனித ஜோசப் கல்லூரி இந்த போட்டி தொடரில் 12 வெற்றிகளை தனதாக்கிக்கொண்டுள்ளது. இவர்களின் இந்த இறுதி வெற்றி 2008ம் ஆண்டு ருவந்த பெர்னாண்டோபுள்ளே அவர்களின் தலைமையில் பெற்றுக்கொள்ளப்பட்டதாகும். அதே நேரத்தில் புனித பீட்டர்ஸ் கல்லூரி வினூ மொஹாட்டி தலைமையில் 2016ம் ஆண்டு தகுதி பெற்ற வெற்றியாளராக இருந்தது. இவர்கள் 10 வெற்றிகளை பெற்றுக்கொண்டதோடு இந்த வெற்றிக் கேடயமானது பாடசாலையில் வைக்கப்படுள்ளது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்து.

1975ஆம் ஆண்டு தொடக்கம் பாடசாலைகளுக்கிடையே முதல் சந்திப்பாக இருந்த Josephian-Peterite வரையறுக்கப்பட்ட 50 ஓவர்களை கொண்ட போட்டி அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாகவும் அதி கூடிய பார்வையாளர்களை ஈர்த்த போட்டியாகவும் காணப்படுகின்றது. இத்தகைய போட்டிகள் இந்த வருடமும் அனைவராலும் எதிர்பார்க்கப்படுவது விதிவிலக்கல்ல. பார்வையாளர்கள் அனைவருக்கும் இது மிகவும் விறுவிறுப்பினை கொண்ட போட்டியாகவும் மறக்முடியாத போட்டியாகவும் அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 1990 க்கு முன்னர் இரண்டு பாடசாலைகளில் இருந்தும் வெளியேறிய மாணவர்கள் போட்டியை பார்வையிடுவதற்கு தனியான இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையானது இந்த ஆண்டின் Battle of the Saints’ இன் ஒரு தனித்துவமான அம்சமாகும்.

Hatton National Bank (HNB), American National College (ANC) Ceylinco Life, Elephant House, Keells Krest, Maggi, Ceylon Biscuits Limited, Jetwing Hotels, daraz, Privilege Fashions மற்றும் SUN FM ஆகியோரும் போட்டிக்கு தங்களின் ஆதரவினை வழங்குகின்றார்கள்.

1981 ஆம் ஆண்டில் ஜோசபியன் லெவன் அணியின் கேப்டன் நிர்மலால் பெரேரா, போட்டியின் முதன்மை விருந்தினராகவும், அதே நேரத்தில் 1994 இல் பீட்டரைட் XI அணி விக்கெட் காப்பாளர் டாமியன் பெரேரா, வரையறுக்கப்பட்ட ஓவர்களை கொண்ட ஆட்டத்த்திற்கு முதன்மை விருந்தினராகவும் கலந்துக்கொள்வார்கள். மேலும், புனித ஜோசப்பின் ஹெக்டர் பெரேரா மற்றும் புனித பீட்டரின் ரோரி இன்மான் தலைமையிலான 1970 அணியின் உறுப்பினர்கள் 86 வது ‘Battle of the Saints’ இன் விருந்தினர்களாக கலந்துக்கொள்வார்கள்.

இலங்கை தேசிய அணியின் வுநளவ போட்டிகளின் தற்போதை அணித்தலைவர் டிமுத் கருணாரத்னää ஏஞ்சலோ மேத்யூஸ், சமிந்த வாஸ், திசர பெரேரா, அஷேல் டீ சில்வா, மைக்கல் வான் டார்ட் ரோஷேன் சில்வா, பிரியாமல் பெரேரா மற்றும் சதீர சமரவீர ஆகியோர் புனித ஜோசப் கல்லூரியினையும், ரோய் டயஸ், ருமேஷ் ரத்னாயக்க, ரஸ்ஸல் ஆனந்த், வினோதன் ஜான், அமல் சில்வா, கவுஷால் லொக்குஆராச்சி, மிலிந்த வர்னபால, மற்றும் ஏஞ்சலோ பெரேரா ஆகியோர் புனித பீட்டர்ஸ் கல்லூரியினையும் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள்