டயலொக், YouTube க்காக வரையறையற்ற டேட்டாவினை 4G Video Blaster உடன் இலங்கையின் வீடியோ புரட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது
2020 ஜனவரி 8 Colombo
இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி YouTube தளத்தை அணுகிட வரையரையற்ற டேட்டாவினை வழங்கும் இலங்கையின் முதல் முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு மொபைல் டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘4G Video Blaster’ மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் டேட்டா பாவனையினை பற்றிய கவலைகள் இன்றி அவர்கள் விரும்பிய வகையில் YouTube இனை அனுபவித்திட முடியும். இந்த திட்டம் குறிப்பாக டயலொக் வாடிக்கையாளர்களின் கவலையின்றிய பொழுதுபோக்கு தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘4G Video Blaster’ திட்டத்தினை ரூ. 249/- க்கு (வரிகள் உள்ளடங்களாக) பெற்றுக்கொள்ள முடியும். 4G ஸ்மார்ட்ஃபோன்களில் SD (Standard Definition) தரத்தை வழங்கும் வரையறையற்ற வீடியோ சேவை 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும், ‘4G Video Blaster’ ஏனைய Apps மற்றும் இன்டர்நெட் பாவனைகளுக்கு 3.5GB டேட்டாவினை இலவசமாக வழங்குகின்றது. அதன்படி anytime, night time மற்றும் 4G போனஸ் டேட்டா ஆகிய அனைத்தையும் இந்த இலவச டேட்டா உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘4G Video Blaster’ இனை செயற்படுத்திக்கொள்ள உங்களுக்கு Dialog 4G SIM அட்டையுடன் (முற்கொடுப்பனவு அல்லது பிற்கொடுப்பனவு) 4G தொலைபேசி அவசியமாவதுடன் இந்த திட்டத்தினை MyDialog App ஊடாகவும் www.dialog.lk/data எனும் இணையத்தளத்திற்கு செல்வதன் மூலமும் #678# டயல் செய்வதன் மூலமும் அல்லது ரூ. 249/- ஐ ரீலோட் (முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள்) செய்வதன் மூலமும் செயற்படுத்திக்கொள்ள முடியும். மேலும் 4G ஸ்மார்ட்ஃபோனில் செயற்படுத்தப்பட்டுள்ள Unlimited Video சேவையினை SD Video தரத்தில் பார்வையிட முடியும்.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி கலாநிதி ரெய்னர் டொட்ஸ்மான் அவர்கள் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில் "2020 ஆம் ஆண்டில் புதிய தசாப்தத்தின் தொடக்கத்தில் இலங்கையின் முதற்தர தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களாகிய நாம் இலங்கையின் வீடியோ வலையமைப்பில் சிறந்த வீடியோ புரட்சியை தொடங்கியுள்ளோம். இதற்கமைய, நமது '4G Video Blaster' ஆனது முதற்தடவையாக நிர்ணயிக்கப்பட்ட - மட்டுப்படுத்தப்பட்ட YouTube கட்டணத்தை அறிமுகப்படுத்துகின்றது. எனவே, எமது வாடிக்கையாளர்கள் தமது டேட்டா மிகுதிபற்றி கவலைகள் இன்றி விரும்பிய வகையில் தமக்கு விருப்பமான வீடியோக்களை பார்வையிட முடியும். எமது சமீபத்திய அறிமுகமான VIU app ஊடாக வரையறையற்ற Live TV மற்றும் Video-on-Demand சேவையினை டயலொக் வலையமைப்பில் கையடக்க தொலைபேசியின் ஊடாக, அன்ரோய்ட் TV இல் உள்ள ViU App ஊடாக டேட்டா கட்டணங்கள் இன்றி பார்வையிடுவதற்கான வாய்ப்பினை இந்த பக்கேஜ் வழங்குகின்றது.
இவை தொடர்பாக மேலதிக விபரங்கள் தேவைப்படின் www.dialog.lk எனும் இணையத்தளத்ததிற்கு செல்லுங்கள்.