Body

எதிர்கால 5G தொழில்நுட்பத்தின் கல்வி கண்காட்சி அடுத்து மார்ச் 6ஆம் 7ஆம் திகதிகளில் மினுவாங்கொடை நாளாந்த ஆண்கள் மத்திய பாடசாலையில்

2020 மார்ச் 5        கொழும்பு

 

news-1

படத்தில் இடமிருந்து வலம்: டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவு தலைவர் ஷமில் பிஸ்ரி அவர்களையும் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை தொழில்நுட்ப அதிகாரி பிரதீப் டீ அல்மேதா அவர்களையும் கேகாலை மகளீர் வித்தியாலயத்தின் மாணவிகள் புதிய 5G தொழில்நுட்பத்தின் அனுபவத்தினை பெற்றுக்கொள்வதையும் காணலாம்.

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மூலம் எதிர்கால 5G தொழில்நுட்பத்தினை நேரடியாக அனுபவிப்பதற்கு இலங்கையர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. இதன் முதற்கட்டமாக கேகாலை மகளீர் வித்தியாலயத்தில் உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் 5G திறன்களை காட்சிப்படுத்தியது.

இலங்கையின் முதற்தர வலையமைப்பான டயலொக், 5G இன் ஆற்றலையும் திறன்களையும் காட்சிப்படுத்தியது. மேலும் இந்த சுற்றுப்பயணத்தின் ஊடாக 5G மூலம் மேற்கொள்ளக்கூடியவற்றை பாடசாலை மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் தொழில்துறை சார்ந்தவர்களுக்கும் விளக்கம் அளித்தது. இந்த காட்சிப்படுத்தலின் ஊடாக 360ᴼ வீடியோ அழைப்பு, 4K வீடியோ ஸ்ட்றீமிங், ட்ரோன் ஊடாக அதி உயர் வரையறை நேரடி வீடியோ ஸ்ட்ரீமிங், VR கேமிங், Holographic வீடியோ அழைப்பு, AI Powered Digital Twins, Robotic Arm - இவை அனைத்தும் High Bandwidth, Ultra Low Latency மற்றும் தரமான இணைப்பை கொண்ட 5G wireless வலையமைப்பு மூலம் நிகழ் நேரத்தில் காட்சிப்படுத்தியது.

5G இன் அறிமுகமானது மக்கள் மாத்திரம் இணையத்தை பயன்படுத்துவதை தாண்டி கணினிகளும் ஒன்றுக்கொன்று இணைந்து தொடர்புகொண்டு இயந்திர வழி Machine Learning) > Internet of Things (IoT), Artificial Intelligence (AI), Machine Learning (ML), Mixed/Virtual Reality and Robotics fuelling ஆகிய 4 ஆம் தொழில் துறை புரட்ச்சிக்கான திறனை வழங்குகின்றது.

எதிர்காலத்தினை இன்றே வழங்குவதற்கான தொடர்ச்சியான வாக்குறுதியுடன் வணிக ரீதியான 5G இனை நோக்கிய ஒவ்வொரு பயணத்திலும் டயலொக், தெற்காசியாவில் முதன்மையாக திகழ்கின்றது. 2018இல் முழுமையாக செயற்படக்கூடிய மற்றும் நிலையான 5G டிரான்ஸ்மி~னினை வெற்றிகரமாக நடாத்தியது. 2019 இல் 5G காட்சிப்படுத்தலின் போது 1.4 Giga bits per second க்கு மேல் மொபைல் வேகத்தினை நிரூபித்திருந்தமை ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் டயலொக் 5G தொழில்நுட்பம் மற்றும் கல்வி கண்காட்சி அடுத்து மினுவாங்கொடை நாளந்த ஆண்கள் மத்திய பாடசாலையில் மார்ச் மாதம் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதுடன் கண்காட்சி அடுத்து எங்கு இடம்பெறுகின்றது என்பது பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள https://www.dialog.lk/dialog-takes-5g-technology-closer-to-every-sri-lankan க்கு செல்லுங்கள்