டயலொக், MAS, Hemas மற்றும் CBL ஆகியவற்றால் முன்னெடுக்கப்டும் 'மனிதநேய ஒன்றிணைவு' அவசரகால நிவாரண செயற்றிட்டத்துடன் சிட்டி பேங்க் இணைகின்றது.
அதிகம் பாதிக்கப்பட்ட 200,000 குடும்பங்களுக்கு சர்வோதய உடன் இணைந்து அவசர நிவாரணம்
மே 23, 2022 கொழும்பு
படத்தில் இடமிருந்து வலம்: சிட்டி பேங்க் இன் நிறுவன விவகாரங்களின் தலைவர் ஷனகா வடுகே, சிட்டி பேங்க் இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் இலங்கை நாட்டுக்கான பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரவின் பஸ்நாயக்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழும தலைமை நிதி அதிகாரி Hong Zhou Wong, சர்வோதய சிரமதான சங்கத்தின் திட்ட முகாமை பிரிவு இயக்குனர் முகமது நிஸ்வி
தற்போது பொருளாதார நெருக்கடியால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்கு அவசரகால நிவாரணங்களை வழங்குவதை நோக்கமாக கொண்டு டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, MAS Holdings, Hemas Holdings PLC, CBL குழுமம், சர்வோதய சிரமதான சங்கம் மற்றும் PwC ஸ்ரீலங்கா ஆகியவற்றால் முன்னெடுக்கப்படுகின்ற 'மனிதநேய ஒன்றிணைவு' திட்டத்துடன் சிட்டி பேங்க் சமீபத்தில் இணைந்து கொண்டது.
நிறைவேற்றும் பங்குதாரர் சர்வோதய மற்றும் பொறுப்புக்கூறல் பங்குதாரர் PwC ஸ்ரீலங்கா உள்ளிட்ட ஒத்த எண்ணம் கொண்ட பங்காளிகளுடன் கைகோர்த்து, டயலொக், MAS, Hemas, CBL மற்றும் சிட்டி பேங்க் மூலம் நிதியளிக்கப்படும் 'மனதநேய ஒன்றிணைவு' முயற்சியானது, 200,000 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 25 மாவட்டங்களிலும் 10,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்றுவரை அவசரகால நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். மேலும், பனுள்ள பொருளாதார முன்மாதிரி திட்டத்தினூடாக நிலையான நலன் பரிமாற்ற முறையொன்று நாட்டில் நிறுவப்படும்வரை 60-90 நாட்களுக்கு இந்த “மனிதநேய ஒன்றிணைவு” நிவாரண வேலைத்திட்டமானது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்
சிட்டி பேங்க் இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் இலங்கை நாட்டுக்கான பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. ரவின் பஸ்நாயக்க கருத்து தெரிவிக்கையில், தற்போதைய நிதி நெருக்கடியின் தாக்கம் நாடு முழுவதும் கடுமையாக உணரப்பட்டுள்ள நிலையில் போராட்டங்கள் முன்னெப்போதையும் விட அதிகமாககியுள்ள நிலையில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உதவி என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. இதன் காரணமாகவே சிட்டி வங்கி மனிதாபிமான முயற்சியான ‘மனிதநேய ஒன்றிணைவு’ உடன் இணைந்து கொள்வதற்கு முடிவு செய்தது. நாங்கள் எங்கள் பொறுப்பை உணர்ந்து, நமது மக்களின் சுமையை குறைக்க ஒத்த எண்ணம் கொண்ட பெரு நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது என்று நம்புகிறோம். இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு, மிகவும் தேவையான மற்றும் சரியான நேரத்தில் முன்முயற்சியின் ஒரு பகுதியாக எங்களை அனுமதித்ததற்கும் எங்கள் பெரு நிறுவன பங்காளிகள் மற்றும் சர்வோதயாவுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய கூட்டாண்மை குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்திய டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழும தலைமை நிதி அதிகாரி Hong Zhou Wong "இந்த மனிதாபிமான முயற்சியில் எங்களுடன் இணைந்ததற்கு அனைத்து பங்குதாரர்களின் சார்பாக நான் சிட்டி பேங்க் க்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். தற்போதைய நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள 10,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இன்றுவரை நாங்கள் அவசரகால நிவாரணங்களை வழங்கியுள்ளோம். நாங்கள் 200,000 குடும்பங்களுக்கு நிவாரங்களை வழங்குவதற்கான இலக்கிளை கொண்டுள்ளோம். இந்த நோக்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எங்களுடன் இணைந்துக்கொள்ளுமாறு ஒத்த எண்ணம் கொண்ட பெரு நிறுவனங்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். 17 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட இலங்கையின் பரந்த வலையமைப்பாக எமது மக்களின் மன அழுத்தத்தை தணிக்க உதவுவதற்கு நாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும், இந்த தேவையின் போது இலங்கை முழுவதிலும் உள்ள குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் பொறுப்பை நாங்கள் மேற்கொள்கின்றோம்.
அவசரகால நிவாரண விநியோக நடவடிக்கைகளை விரிவுபடுத்த "மனிதநேய ஒன்றிணைவு" அனைத்து பெரு நிறுவனங்களை இந்த முயற்சியில் இணைந்துக்கொள்ளுமாறு அழைக்கின்றது.