Body

டயலொக் மற்றும் MAS ஆகியன ஒன்றிணைந்து Enabler செயற்றிட்டம் 2024 ஊடாக வேலைத்தளத்தை வளப்படுத்தவுள்ளன

23 ஆகஸ்ட் 2024         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

தனுஜா ஜெயவர்தன, பொது முகாமையாளர் - மகளிர் சுயமேம்பாடு, பரப்புரை மற்றும் ஒழுங்கு விதிகள், MAS Holdings; அசங்க பிரியதர்ஷன, நிலைபேறாண்மை பிரிவின் தலைவர் மற்றும் குழுமத்தின் பிரதம இடர் மற்றும் இணக்கப்பாடு அதிகாரி; நெமந்தி கூரகமகே, பணிப்பாளர் - குழுமத்தின் நிலைபேறான வணிகம், MAS Holdings; லி சான் லிம், குழுமத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; தேசமான்ய மகேஷ் அமலீன், இணை நிறுவுனர் மற்றும் தலைவர், MAS Holdings; சுபுன் வீரசிங்க, பணிப்பாளர்/ குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; சாண்ட்ரா டீ சொய்ஸா, குழுமத்தின பிரதம வாடிக்கையாளர் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; அமந்தி பெரேரா, பொது முகாமையாளர் - சமூக நிலைபேறாண்மை, MAS Holdings; சலனி மாரசிங்க, உதவி முகாமையாளர் - நிலைபேறான வணிகம், MAS Holdings; தருஷ வணிகசேகர, பிரிவு முகாமையாளர் - டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் உள்ளிணைக்கை, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; செனுதி மகாதேவன் - உள்ளகப் பயிலுநர், குழுமத்தின் நிலைபேறாண்மை, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; இவர்களுடன் Enabler செயற்றிட்டத்தின் பங்கேற்பாளர்கள்

இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மற்றும் ஆடை உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப பன்கூட்டு நிறுவனமான MAS Holdings உடன் இணைந்து Dialog MAS Enabler செயற்றிட்டம் 2024 இனை வெற்றிகரமாக நிறைவு செய்தன. இது மாற்றுத்திறனாளிகளுக்கு வலுவூட்டி அவர்களின் உள்ளிணைக்கையை (inclusive) வளமூட்டுகிறது. இச்செயற்றிட்டம் முதலில் 2023 இல் முன்னெடுக்கப்பட்டது. செயற்றிட்டத்தின் இரண்டாம் அத்தியாயம் 2024 ஜூலை 15ஆம் திகதி நடாத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புகளை கணிசமாக உயர்த்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு பணியிடத்தின் நேரடி அனுபவத்தை அளித்தல் மற்றும் தகவுள்ள வேலை வாய்ப்பளிப்போருக்கு தமது பணியாட்களில் மாற்றுத்திறனாளிகளை பணிக்கமர்த்துவதால் விளையும் நன்மைகள் குறித்து அறிவூட்டல் ஆகியன இதன்போது நிகழ்ந்தன.

பதினான்கு பல்கலைக்கழக மாணவர்கள், பட்டதாரிகள், தொழில்முறை மற்றும் வாழ்க்கைத்தொழில்சார் தேர்ச்சிகளுக்காக பயிலும் மாணவர்களுக்கு ஒரு விரிவான கூட்டுத்தாபன உள்வாங்கல் செயற்றிட்டத்தினூடாக பணியிட கலாச்சாரம் குறித்த அறிமுகத்தை நேரடியாக பெற்றனர். கற்றலுக்கும் கற்றதை பிரயோகிப்பதற்கும் இடையிலான இடைவெளிக்கு இச்செயற்றிட்டம் ஒரு வழிவகையாய் அமைந்தது. மேலும் செயற்றிட்டத்தின் மூலம் தகவுள்ள பணிக்கமர்த்துவோருக்கு இயலாமையுடையோரை பணிக்கமர்த்துவதால் விளையும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. பொதுப்படையான கருத்துக்களை சவாலுக்குட்படுத்தி பணிக்கமர்த்தல் நடைமுறைகளில் உள்ளிணைக்கை (inclusivity) ஊக்குவிக்கப்பட்டது.

செயற்றிட்டத்தின் முழுக் காலப்பகுதியில், பங்கேற்பாளர்கள் ஒரு வாரம் டயலொக்கிலும் மற்றொரு வாரம் MAS இலும் பணியாற்றினர் , கூட்டுத்தாபன அலுவலகங்கள், உற்பத்தி அலகுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் நிலையங்களில் பங்கேற்று, நிறுவன இயக்கத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய முக்கியமான தகவல்களைப் பெற்றனர். நிறுவன சூழலுக்கு மாறுதல் அடைவதை எளிதாக்குவதற்காக, பங்கேற்பாளர்களுக்கு நிறுவன கலாச்சாரம் குறித்த கருத்துரைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு அமர்வும் கோட்பாட்டுப் பயிற்சிகளும், நடைமுறை அனுபவங்களும் கலந்தே நிகழ்ந்தது, இதன் மூலம் பங்கேற்பாளர்கள் நிறுவன இயக்கத்தின் மாறுபாடுகளைப் புரிந்து கொண்டு, தொழில்முறை வளர்ச்சிக்கு தேவையான திறன்களைப் பெற முடிந்தது. நிகழ்ச்சி, பங்கேற்பாளர்கள் தங்கள் கற்றல்களை மற்றும் பரிந்துரைகளை டயலொக் மற்றும் MAS நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்ட தொகுப்புகளுடன் நிறைவடைந்தது, இது வேலைத்தளத்தில் இணக்கத்தை மேம்படுத்துவதற்கான மேலதிக உந்துதலை வழங்குகிறது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் நிலைபேற்றுத்தன்மைப் பிரிவு தலைவர் மற்றும் குழும இடர் மற்றும் இணக்கப்பாடு பிரதானி அசங்க பிரியதர்ஷன அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “MAS உடன் உள்நாட்டு வேலைத்தளத்தில் ஒட்டுமொத்தமாகவும், வெளிப்படையான தீர்வுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு அளித்த மதிப்புமிக்க ஒத்துழைப்பிற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம். இந்த முன்னெடுப்பு, பன்முகத்தன்மையிலும், இணக்கத்தின் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியில் நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலியுறுத்துகிறது. இதன் மூலம் பொதுப்படை கருத்துக்களை சவால்களுக்கு உட்படுத்தி, நிறுவன அமைப்பில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும் வழிகளை அமைக்க முடிகிறது. குறைந்தபட்ச இயலாமை உடையவர்களுக்கு வலுவூட்டுவதனுடன், அனைத்து மக்களிடத்திலும் பன்முகத்தன்மை என்பது நிறுவன சிறப்பிற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் ஒரு அடிப்படை கொள்கை என்பதை கற்றுக்கொடுத்து, ஊக்குவிக்கும் முயற்சிகளில் முன்னோடியாக இருப்பதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்றார்.

MAS Holdings குழுமத்தின் நிலைபேறான வணிக பணிப்பாளர் நெமந்தி கூரகமகே அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “கடந்த 35 ஆண்டுகளாக MAS ஆனது எமது பல்வகைமைமிக்க பணியாட்களுக்கு ஏற்ற உள்ளிணைக்கைமிகு பணியிடங்களை (inclusive work places) உருவாக்கும் நோக்குடன் இயங்கிவருகிறது. இந்த விடயம் தொடர்பாக துறையில் உள்ள சிறந்த நடைமுறைகளைக் கொண்டு ஆட்சேர்ப்பு, ஆற்றலளிப்பு, ஈடுபாடு, அதிகாரமளிப்பு ஆகிய நால்வகை பகுதிகளில் கவனத்தை செலுத்துவதன் மூலம் மாற்றுத்திறன் கொண்ட சக ஊழியர்களை வலுப்பெறச்செய்வது எமது பணியாகும். நாம் Dialog MAS Enabler செயற்றிட்டத்தின் முதல் வருடம் கற்றுக்கொண்ட பாடங்களை மனமாற ஏற்றுக்கொண்டு இவ்வாண்டு வரும் மாணவர்களுக்கு மேம்பட்ட விடயங்களை அளிப்பதோடு, எதிர்காலத்தில் வளர்ந்துவரும் பணியாட்களுக்கு ஏற்புடையனவற்றை அளிக்கும் வகையில் எம்மை தயார்செய்து வருகிறோம்” என்றார்.