டயலொக் ஆசிஆட்டாவின் எயார்டெல் லங்காவுடனான ஒன்றிணைதல் பூர்த்தி விரிவாக்கப்பட்ட டயலொக் வலையமைப்பு தற்போது 20 மில்லியன் இலங்கையர்களுக்கு சேவையாற்றுகிறது
2024 ஆகஸ்ட் 30 கொழும்பு
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (‘டயலொக்’) ஆனது வரையறுக்கப்பட்ட (தனியார்) பார்த்தி எயார்டெல் லங்காவுடன் (‘எயார்டெல் லங்கா’) கம்பனிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் வெற்றிகரமாக ஒன்றிணைந்துள்ளது. இதன்படி ஒன்றிணைந்த நிறுவனம் டயலொக்கின் பெயரால் தொடரும். இதன்படி 2024 ஆகஸ்ட் 30 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எயார்டெல்லின் செயற்பாட்டு செயற்திறன் டயலொக்கின் நிதிக்கக்கூற்றுகளுக்குள் முழுமையாக அடக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படும். இது ஒரு கூட்டுத்தாபன நிறுவனமாக எயார்டெல் லங்காவின் உத்தியோகபூர்வ நிறுத்தத்தை பதிவு செய்கிறது.
இந்த மூலோபாய ரீதியான மைல்கல் இலங்கையின் டிஜிட்டல் உட்கட்டமைப்பில் பாரியதொரு முன்னேற்றகரமான படியை பிரதிபலிக்கிறது. நாடு முழுவதும் காத்திரமான டிஜிட்டல் சேவைகளையும் மேம்பட்ட இணைப்பையும் வழங்க ஆசிஆட்டா மற்றும் பார்த்தி குழுமங்களின் கூட்டு பலம் மற்றும் அர்ப்பணிப்பை இது எடுத்துக்காட்டுகிறது. இரு அமைப்புகளுக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பானது அவர்களது ஒட்டுமொத்த நிபுணத்துவம், வளங்கள், புத்தாக்க தகவுகள் அனைத்தும் இலங்கையின் டிஜிட்டல் உருமாற்றத்தில் டயலொக்கை முன்னிலை வகிக்கும் வகையில் நிலைநிறுத்தும்.
இந்த ஒருங்கிணைப்பை தொடர்ந்து, டயலொக்கின் சந்தாதாரர் தளம் 20 மில்லியனை கடந்தது. தேசத்தின் முதற்தர தொலைத்தொடர்பு சேவை வழங்குனராக அதன் இடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இவ்வலையமைப்பு ஒன்றிணைவு எதிர்வரும் மாதங்களில் முன்னேற்றங்களை காண்கையில் டயலொக் மற்றும் எயார்டெல் வாடிக்கையாளர்கள் இணைப்பையும் கடந்த விஸ்தீரணமான சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவம், புத்தாக்கம், டிஜிட்டல் சேவைகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் முதலியவற்றை எதிர்பார்க்கலாம். புதிய கட்டமைப்பினுள்ளான எயார்டெல் வர்த்தக நாமத்தின் தொடர்ச்சி, வாடிக்கையாளர்களுக்கு எயார்டெல் மீது கொண்டிருந்த மதிப்பு மற்றும் நம்பிக்கையை தொடரவைக்கும். இது டயலொக்கின் பரந்த சலுகைகளை அனுபவிப்பதற்கான சந்தர்ப்பத்தையும் அளிக்கும்.
இந்த ஒன்றிணைவு டயலொக் நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு காட்டும் அயராத அர்ப்பணிப்பையும், பொருளாதார அபிவித்திக்கு அளிக்கும் பங்களிப்பையும், தொலைத்தொடர்பு கைத்தொழிற்துறையில் வகுக்கும் புதிய அடைவுமட்டங்களையும் பிரதிபலிக்கிறது. இந்த ஒருங்கிணைவு மூலம் உருவாக்கப்படும் ஒருங்கியக்கங்களை கையாள்வதன் ஊடாக வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் தனிநபர்களும் வணிகங்களும் தொடர்ந்து முன்னேற அவர்களுக்கு உந்துசக்தியாய் திகழ டயலொக் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது.