டயலொக் ஆசிஆட்டா, ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) மேற்கொண்ட கூட்டுத்தாபன அறிக்கையிடல் மதிப்பீட்டில் முதலிடம் பிடித்தது
2024 மார்ச் 21 கொழும்பு
இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நடாத்திய 2023ம் ஆண்டின் கூட்டுத்தாபன அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மைக்கான மதிப்பீட்டில் (TRAC) முதலிடத்தை பிடித்துள்ளது. தன் நாணயத்தை விட்டுக்கொடுக்காமல் அபரிமிதமான செயற்திறனை வெளிப்படுத்த நிறுவனம் காட்டும் அர்ப்பணிப்பிற்கு இது சான்றாகும்.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் இன் நியம TRAC ஆய்வு நெறிமுறைகளுக்கமைய, இலங்கையில் முன்னணி வகிக்கும் 125 வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பனிகளின் வெளிப்படுத்தல் (disclosure) முறைகளை இந்த சுயாதீன மதிப்பீடு மதிப்பாய்வு செய்தது. தனது நன்னெறி நடத்தை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆகியவற்றில் டயலொக் கொண்டிருந்த வைராக்கியமே இந்த உச்ச நிலையை அடைய முக்கிய காரணியாக அமைந்தது என்றால் மிகையில்லை.
ஒரு பொறுப்புள்ள கூட்டுத்தாபன நிறுவனம் என்ற வகையில், டயலொக் தனது லஞ்ச எதிர்ப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு (Anti-Bribery and Anti-Corruption - ABAC) கொள்கை ஊடாக கூட்டுத்தாபன பரிபாலனம் மற்றும் நெறிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கி வெகுமதி மறுப்பு (no-gift) கொள்கையை கடுமையாக செயற்படுத்தியுள்ளதுடன் பரிபாலனம், வெளிப்படுத்தல், மற்றும் வெளிப்படைத்தன்மை ஆணைக்குழுவையும் (Governance, Disclosure, and Transparency Committee - GDSC) தாபித்துள்ளது. நிறுவனத்தின் செயற்பாடுகள் ஊழல் எதிர்ப்பு சட்டங்களுக்கு இணங்குவதை ABAC உறுதி செய்வதுடன் நிதியியல் வெளிப்படைத்தன்மையை GDSC ஊக்குவிக்கின்றது. மேலும், இடர் மற்றும் இணக்கப்பாட்டு முகாமைத்துவ ஆணைக்குழு (RCMC) மற்றும் குழும இடர் மற்றும் இணக்கப்பாடு ஆணைக்குழு (BRCC) ஆகியன வினைத்திறன்மிக்க இடர் முகாமைத்துவம் மற்றும் இணக்கப்பாட்டுக்காக இணைந்து செயலாற்றுகின்றன. டயலொக்கின் ‘TRUST’ சட்டகத்திற்கு கீழான பாரியளவிலான பதிவுகளின் முகாமைத்துவம் மற்றும் அம்பலப்படுத்தும் பொறிமுறை ஆகியன வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துகின்றன. மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு சட்டம் 17A இற்கிணங்கும் வகையில் பல்வகைமை, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்வாங்குவதற்கான சட்டகம் ஆகியனவும் வெளிப்படைத்தன்மையை மேலும் ஊக்குவிக்குன்றன. குறிப்பிட்ட கால இடைவேளைகளில் நடைபெறும் சுயாதீன மதிப்பீடுகளுடன் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாணயம் மற்றும் கூட்டுத்தாபன பரிபாலானத்தின் உயர் தரநிலைகளை தொடர்ந்து பேணுவதற்காக பக்குவத்தோடும் நல்ல முன்யோசனையோடும் நிறுவனம் இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்காவின் கூட்டுத்தாபன அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மைக்கான மதிப்பீட்டில் பெருமதிப்பிற்குரிய முதலிடத்தை பிடித்தமையானது எதற்கும் அசைந்திடாத டயலொக்கின் நாணயத்திற்கு சான்று. எமது நன்னெறி நடத்தை, வெளிப்படத்தன்மை மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நாணயம் மற்றும் கூட்டுத்தாபன பரிபாலானத்தின் உயர் தரநிலைகளை பேணுவதற்காக டயலொக் காட்டும் அர்ப்பணிப்பிற்கு சான்று பகர்கின்றன. இந்த அங்கீகாரம் டயலொக்கை ஒரு பொறுப்புள்ள கூட்டுத்தாபன நிறுவனம் என்ற வகையில் நம்பகத்தன்மை, வெளிப்படத்தன்மை, மற்றும் முன்னேற்பாடான இடர் முகாமைத்துவ கொள்கைகளில் உறுதியுடன் நிலைத்திருக்க வேண்டும் எனும் எண்ணத்தை மேலும் வலுப்படுத்துகிறது” என்றார்.
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) ஒரு சுயாதீனமான, அரச சார்பற்ற, இலாப நோக்கற்ற மற்றும் கட்சி சார்பற்ற அமைப்பாகும். இது இலங்கையில் அரசாங்கம், அரசியல், வணிக, சிவில் சமூகம் மற்றும் பிரஜைகளின் நாளாந்த வாழ்வில் ஊழலை இல்லாதொழிக்கும் நோக்கத்தை கொண்டு இயங்கிவருகிறது. பெர்லினை தலைமையகமாக கொண்ட ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனலின் (TI) அங்கீகாரம் பெற்ற இலங்கைக்கான அலகாக TISL, அதன் உலகளாவிய அலகுகளுடன் ஒன்று சேர்ந்து பணியாற்றுகிறது.