Body

Apple சாதனங்களின் iPhone 18 Pro தொடர் மற்றும் iPhone Duo ஆகியவற்றை இலங்கையில் வாடிக்கையாளர்களுக்கு டயலொக் அறிமுகப்படுத்துகிறது

2026 நவம்பர் 03         கொழும்பு

 

இடமிருந்து வலமாக: ஷிரோமி அலி, தலைவர் - நிறுவன திட்டமிடல், மூலோபாயம் மற்றும் வளர்ச்சி, குழும நிறுவன திட்டமிடல் மற்றும் மூலோபாயம், குழும வணிக செயல்பாடுகள், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; வினோஜ் குணசேகரன், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்; லசந்த தெவரப்பெரும, குழுமத் தலைமைச் சந்தைப்படுத்தல் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; தேஷான் விஜேவீர, தலைவர் - சாதன வணிகம், வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள், குழும வணிக செயல்பாடுகள், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி.

இலங்கையின் முதன்மை இணைப்புச் சேவை வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (Dialog Axiata PLC), Apple நிறுவனத்துடனான தனது கூட்டுப் பங்களிப்பின் மூலம் iPhone 18 Pro, iPhone 18 Pro Max மற்றும் iPhone Duo ஆகிய சாதனங்களை இலங்கையில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இச்சாதனங்கள் 5G மற்றும் eSIM தொழில்நுட்ப வசதிகளை ஆதரிப்பதுடன், 25 மாவட்டங்களிலும் 1,000 க்கும் மேற்பட்ட 5G தளங்களுடன் (5G sites) இயங்கும் இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் 5G கட்டமைப்பான 'Dialog 5G Ultra' ஊடாக வாடிக்கையாளர்கள் புதிய iPhone தொடரை அனுபவிக்க வழிவகை செய்கின்றன. உலகளாவிய அறிமுகத்திற்குப் பின்னர் இலங்கையில் வழக்கமாக நிகழும் 5-6 வார கால இடைவெளியின்றி, Apple நிறுவனத்தின் இந்த புதிய iPhone Duo சாதனத்தின் உலகளாவிய அறிமுகத்துடன் ஒரே நேரத்தில் இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட்டமையினால் டயலொக் வாடிக்கையாளர்கள் Apple இன் புதிய சாதனங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடிந்தது.

iPhone 18 Pro சாதனம் 6.3 அங்குலத் திரையையும் (Display), iPhone 18 Pro Max சாதனம் 6.9 அங்குலத் திரையையும் கொண்டுள்ளன. இவ்விரு சாதனங்களும் 256GB முதல் 2TB வரையிலான Storage வசதிகளுடன் கிடைக்கின்றன. iPhone Duo சாதனம் Apple இன் மிகப்பெரிய iPhone திரையைக் கொண்டுள்ளதுடன் 256GB முதல் 2TB வரையிலான Storage தெரிவுகளிலும் கிடைக்கிறது.

iPhone Duo என்பது Apple நிறுவனத்தின் மடிக்கக்கூடிய (Foldable, Book-shaped) முதலாவது iPhone சாதனமாகும். இதில் Apple இன் மிகப்பெரிய iPhone திரை, Matte Inner Display, Side Touch ID, Apple Pencil ஆதரவு மற்றும் பல App-களை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வசதி (Multi-app Multitasking) ஆகியவை உள்ளடங்கியுள்ளன. இச்சாதனங்கள் Deep Black, Silver, Glacier மற்றும் Burgundy ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன.

டயலொக் மூலம் iPhone 18 Pro தொடர் அல்லது iPhone Duo சாதனங்களை முன்பதிவு (Pre-order) செய்து, அக்டோபர் 23, 2026 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட 3 நாட்களுக்குள் கொள்வனவு செய்து Activate செய்த வாடிக்கையாளர்களுக்குப் பல சலுகைகள் வழங்கப்பட்டன. இதில் iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max உடன் AirPods 5, Apple 20W Charging Adapter, நான்கு மாதங்களுக்கு 2TB டயலொக் டேட்டா (Dialog Data), தகுதியுடைய கடன் அட்டைகள் (Credit Cards) மூலமான கொடுப்பனவுகளுக்கு இருவருக்கான உணவக வவுச்சர் (Dining Voucher), மேலதிக ஒரு வருட நீடிக்கப்பட்ட உத்தரவாதத்துடன் (Extended Warranty) ஒரு வருட வழக்கமான உத்தரவாதம், மற்றும் இரண்டு வருடங்களுக்குள் இரண்டு முறை முன்பக்கத் திரை மற்றும் பின்புறக் கண்ணாடி மாற்றுவதற்கான (Front Screen and Back Glass Replacement) வசதிகள் ஆகியவை அடங்கும். மேலும், ஏற்கனவே உள்ள ஸ்மார்ட்போனை Trade-in செய்து iPhone 18 Pro Series அல்லது iPhone Duo சாதனத்தைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 24,000 கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

iPhone 18 Pro சாதனத்தின் விலை ரூ. 626,000 முதலும், iPhone 18 Pro Max சாதனத்தின் விலை ரூ. 676,000 முதலும், iPhone Duo சாதனத்தின் விலை ரூ. 1,037,000 முதலும் ஆரம்பமாகின்றன. இச்சாதனங்கள் நாடு முழுவதிலும் உள்ள 120க்கும் மேற்பட்ட டயலொக் விற்பனை நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் ஊடாகக் கிடைப்பதுடன், தெரிவுசெய்யப்பட்ட கடன் அட்டைகள் மூலம் 60 மாதங்கள் வரையிலான இலகு தவணை முறையிலும் பெற்றுக்கொள்ள முடியும். மேலதிக தயாரிப்பு விவரங்கள் மற்றும் கொள்வனவு தகவல்களுக்கு https://dialog.lk/shop/phones என்ற இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.