Body

நாற்திசையும் டயலொக் ’ செயற்திட்டத்தின் கீழ் அம்பகஹபெலஸ்ஸ வில் டயலொக் புதிய கோபுரத்தை நிறுவுகிறது.

அதன் முன்முயற்சியின் மூலம் 2021 இல் 1028 கிராமங்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களுக்கான இணைப்பை மேம்படுத்துகிறது

மே 30, 2022         கொழும்பு

 

Dialog Commissions New Tower in Ambagahapelessa

இலங்கை முழுவதிலும் உள்ள கிராமப்புற சமூகங்களுடனான தொடர்பை விரிவுபடுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டிற்கு அமைய இலங்கையின் பரந்த வலையமைப்பான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, நாற்திசையும் டயலொக் முயற்சியின் கீழ், கண்டி அம்பகஹபெலஸ்ஸ கிராமத்தில் ஒரு கோபுரத்தை அண்மையில் நிறுவியது.

அம்பகஹபெலஸ்ஸ பிரதேசத்திலுள்ள சமூகங்களின் கல்வி மற்றும் வேலை அபிலாஷைகளை மேம்படுத்துவதில் நம்பகமான இணைப்புக்கான அணுகலை வழங்குவதற்காக இந்த வலையமைப்பு தளம் நிறுவப்பட்டது. 2021 இல் ‘நாற்திசையும் டயலொக்’ செயல்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கையின் முd;dzp இணைப்பு வழங்குdர், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் தொடர்பாடல் சேவையை வலுப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான தனது முயற்சிகளின் ஒரு பகுதியாக 1028 கிராமங்கள் மற்றும் தொலைதூர கிராமப்புற சமூகங்களுக்கான இணைப்பை மேம்படுத்தியுள்ளது. கண்டி மாவட்டத்தில் அம்பகஹபெலஸ்ஸ கோபுரத்துடன் சேர்த்து உல்பத்கமவிலும் தொடர்பாடல் கோபுரம் நிறுவப்பட்டது. மேலும், மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல, புலனவெவ மற்றும் கனிமயாய ஆகிய இடங்களிலும் களுத்துறை மாவட்டத்தில் மொரப்பிட்டிய, அத்வெல்தொட்ட, வலகெதர மற்றும் கித்துல்கொட ஆகிய பிரதேசங்களிலும் புதிய சேவை கோபிரங்கள் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த நெருக்கடியான காலங்களில் தொலைத்தொடர்பு வசதியை விரிவுபடுத்துவதற்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிப்பதற்குமான தனது தொடர் முயற்சிகளின் அங்கமாக, டயலொக் 3,000 க்கும் மேற்பட்ட தளங்களை தரமுயர்த்தியுள்ளதுடன் 453 புதிய டவர்களை 2021 இல் உருவாக்கியது, அதன் நெட்வொர்க்கில் தற்போது 4,380 மொபைல் 4G தளங்கள் காணப்படுகிறது, இது இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட கோபுரங்களின் அதிகூடிய எண்ணிக்கையாகும். டயலொக் கிரீன் ஃபீல்ட் கோபுரங்களில் தனது சேவைக் கிடைப்பதை விரைவாக விரிவடையச் செய்துஇ தொலைதூர கிராமப்புற சமூகங்களைச் சென்றடையவும், மக்கள் அடர்த்தியான பகுதிகளில் அவசரத் திறன் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் Lamp Pole தீர்வுபாயங்களை பயன்படுத்தவும் செய்தது. 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 95% க்கும் அதிகமான மக்கள் தொகையை இலக்காகக் கொண்டு டயலொக் தொடர்ந்து இலங்கை முழுவதும் கவரேஜை மேம்படுத்தும்.