Body

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பெருமை சேர்க்க இலக்கு வைத்துள்ள இலங்கையின் பாரா விளையாட்டு வீரர்களுக்கு டயலொக் தொடர்ந்து ஆதரவு

2026 அக்டோபர் 07         கொழும்பு

 

5ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றும் இலங்கை பாரா-விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிப்பதற்கான டயலொக் ஆசிஆட்டாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைக் குறிக்கும் வகையில், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமைச் சந்தைப்படுத்தல் அதிகாரி திரு. லசந்த தெவரப்பெரும (இடமிருந்து 4ஆவது) அனுசரணைக்கான காசோலையை தேசிய பாராலிம்பிக் குழுவின் தலைவரும் குழுவின் பிரதானியுமான பிரிகேடியர் தனஞ்சய அலுதெனியவிடம் (இடமிருந்து 5ஆவது) வழங்குகிறார்.
இந்நிகழ்வில் (இடமிருந்து): திரு. சுதர்ஷன முத்துதந்திரி – பிராண்ட் முகாமையாளர் (விளையாட்டுச் சந்தைப்படுத்தல், பிராண்ட் மற்றும் ஊடகம்), டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; திரு. ரியாஸ் ஹனிபா – சந்தைப்படுத்தல் செயற்பாடுகளின் தலைவர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; திரு. ஹர்ஷ சமரநாயக்க – துணைத் தலைவர் (குழுமச் சந்தைப்படுத்தல்), டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; திரு. லசந்த தெவரப்பெரும – குழும தலைமைச் சந்தைப்படுத்தல் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; பிரிகேடியர் தனஞ்சய அலுதெனிய – தலைவர் (தேசிய பாராலிம்பிக் குழு) மற்றும் குழுவின் பிரதானி; திருமதி திலினி வாரியபொல – பொருளாளர் (தேசிய பாராலிம்பிக் குழு); செல்வி கலினா பஸ்நாயக்க – விளையாட்டு வீராங்கனை; மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இலங்கை அணியின் அணித்தலைவர் திரு. சமித்த துலான் ஆகியோர் உடனிருந்தனர்.

இலங்கையின் முதன்மைத் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் மற்றும் விளையாட்டுத்துறையின் தீவிர ஆதரவாளருமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (Dialog Axiata PLC), ஜப்பானின் அச்சி நகோயாவில் (Achi Nagoya) நடைபெறவுள்ள 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் (2026 Asian Para Games) பங்கேற்கும் இலங்கை தேசிய அணியினருக்கு தனது அனுசரணையை பெருமையுடன் வழங்கி வருகிறது. இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சர்வதேச விளையாட்டு அரங்கின் மிகயுயர் மட்டத்தில் அவர்கள் போட்டியிடுவதற்கு உதவுவதற்குமான தனது நீண்டகால அர்ப்பணிப்பை டயலொக் இதன் மூலம் தொடர்கிறது.

அணியின் அனுசரணையாளராக (Team sponsor), மன உறுதி, ஒழுக்கம் மற்றும் சர்வதேச அரங்கில் தமது தாய்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பலமான விருப்பம் ஆகியவற்றால் வழிநடத்தப்படும் 21 விளையாட்டு வீரர்களைக் கொண்ட குழுவிற்கு டயலொக் ஆதரவளிக்கிறது. எனினும், டயலொக்கைப் பொறுத்தவரையில், இந்த அணியின் பெறுமதி என்பது பதக்கப் பட்டியலைத் தாண்டியது. ஒவ்வொரு வீரரும் உயர்மட்ட விளையாட்டுத்துறைக்கு வித்தியாசமான பாதைகளினூடாகவே வருகை தந்துள்ளனர். அவர்களின் உடற்தகுதிகள் மற்றும் தனிப்பட்ட கதைகள், சவால்கள் மற்றும் இலக்குகள் மாறுபடலாம்; ஆனால், பயிற்சிகளை மேற்கொள்வதற்கும், போட்டியிடுவதற்கும், தங்கள் இலக்குகளை அடைவதற்காகத் தொடர்ந்து தங்களைத் தயார்படுத்துவதற்கும் தேவையான அர்ப்பணிப்பும் மன உறுதியும் அவர்களிடம் ஒன்றாகவே காணப்படுகின்றது.

டயலொக்கின் இந்த ஆதரவானது, இலங்கையர்கள் தமது இலட்சியங்களை தொடர்வதற்கும் நாட்டின் பெருமையை உயர்த்திப் பிடிப்பதற்குமான வாய்ப்புகளை உருவாக்குவதில் கொண்டுள்ள பரந்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. கடந்த 26 வருடங்களாக, இலங்கையில் பாராலிம்பிக் விளையாட்டுத்துறைக்கு ஆதரவளித்து வரும் டயலொக், விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போட்டியிட உதவி வழங்கி வருகின்றது. ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் குழுவிற்கான இத்தொடர்ச்சியான ஆதரவானது, விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் விளையாட்டுத் திறமைகளை அங்கீகரிப்பதற்குமான நீண்டகால அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும்.

"ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை அணி தனது பயணத்தைத் தொடங்கும் வேளையில், அவர்களின் மன உறுதி, மீண்டெழும் திறன் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் நாட்டிற்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் இந்த விதிவிலக்கான விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இலங்கை அணி சாதனைகளைப் படைத்து, நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதற்கான முயற்சிகளுக்கு டயலொக் பக்கபலமாக நிற்பதில் பெருமிதம் கொள்கிறது," என டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி (Group Chief Marketing Officer) லசந்த தெவரப்பெரும தெரிவித்தார்.

இலங்கைக் குழுவில் Para athletics, para badminton, para swimming, para table tennis, wheelchair tennis மற்றும் shooting ஆகிய விளையாட்டுப் பிரிவுகளில் போட்டியிடும் வீரர்கள் அடங்குகின்றனர். இக்குழுவில் பல அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவர்கள் தங்களது முந்தைய சாதனைகளை மேலும் மேம்படுத்தி இப்போட்டித் தொடரில் தங்களது முத்திரையைப் பதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களில், 2022 ஹங்சௌ (Hangzhou) ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் சமித்த துலான் (Samitha Dulan) அடங்குகிறார். தடகள அணியின் மற்றொரு அனுபவமிக்க வீரரான பலித பண்டார (Palitha Bandara), 2018 ஜகார்த்தா மற்றும் 2022 ஹங்சௌ ஆகிய இரண்டு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளிலும் பதக்கங்களை வென்றுள்ளார்.

நுவன் இந்திக (Nuwan Indika), ஹங்சௌவில் நடைபெற்ற போட்டியில் 100 மீட்டரில் தங்கப் பதக்கத்தையும், நீளம்பாய்தலில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்ற சிறந்த சாதனையைத் தக்கவைத்துள்ளார். அதேபோன்று, பிரதீப் சோமசிரி (Pradeep Somasiri) 1,500 மீட்டரில் தங்கப் பதக்கம் வென்று ஆசிய பாரா விளையாட்டுச் சாம்பியனாக மீண்டும் களமிறங்குகிறார்.

தனஞ்சனா விக்ரமசிங்க (Dhananjana Wickramasingha), ஹங்சௌவில் பெண்களுக்கான நீளம்பாய்தலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தனது செயல்திறனை மேலும் உயர்த்த எதிர்பார்ப்பதுடன், 400 மீட்டரில் வெண்கலப் பதக்கம் வென்ற மதுரங்க சுபசிங்கவும் (Madhuranga Subasinghe) மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

இலங்கையின் பதக்க அனுபவம் தடகளப் பிரிவையும் தாண்டி விரிவடைந்துள்ளது. நீச்சல் வீரர் நவீத் ரஷீன் (Naveed Rasheen) ஹங்சௌவில் 400 மீட்டர் சுதந்திர பாணி (freestyle) நீச்சலில் வெண்கலப் பதக்கத்தையும், நதீன் பஸ்நாயக்க (Nadin Basnayake) பெண்களுக்கான பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

மேலும், 2018 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற புத்திக இந்திரபாலவும் (Buddika Indrapala) இக்குழுவில் அடங்குகிறார்.

ஒட்டுமொத்தமாக, இக்குழுவில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஏற்கனவே பதக்கங்களை வென்ற ஒன்பது வீரர்கள் அடங்கியுள்ளமை 2026 போட்டிக்கான சிறந்த அனுபவத்தைக் கொண்டு சேர்க்கிறது.

இலங்கையின் தேசிய கிரிக்கெட், வோலிபோல் மற்றும் Esports அணிகளின் பிரதான அனுசரணையாளராக (principal sponsor) டயலொக் விளங்குகின்றது. மேலும், தேசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் போட்டியிடும் இலங்கை அணிகளுக்கு ஆதரவளிப்பதுடன், Sri Lanka Open Golf Championship போட்டியின் பிரதான அனுசரணையாளராகவும் செயற்படுகின்றது. அத்துடன், ஜனாதிபதி தங்கக் கோப்பை வோலிபோல் தொடர் மற்றும் பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி தொடர்களுக்கும் நிறுவனம் ஆதரவளிக்கிறது. தேசிய ஒலிம்பிக் குழுவுடனான (National Olympic Committee) கூட்டுப் பங்களிப்பின் ஊடாக, லொஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான இலங்கையின் ஆயத்தப் பணிகளுக்கு டயலொக் தொடர்ந்து ஆதரவளிக்கும்.

இலங்கை ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2026 குழு (Sri Lanka Asian Para Games 2026 contingent)

விளையாட்டு வீரர்கள் (Athletes): Para Athletics: கே.ஏ. சமித்த துலான் – ஆண்களுக்கான F44 ஈட்டி எறிதல்; எச்.ஜி. பலித பண்டார – ஆண்களுக்கான வட்டெறிதல்/குண்டெறிதல்; சி.என். புத்திக இந்திரபால; எம்.ஜி. நுவன் இந்திக – ஆண்களுக்கான 100 மீ; எஸ்.எம்.ஏ.எஸ். மதுரங்க சுபசிங்க – ஆண்களுக்கான 400 மீ; பி.டபிள்யு. பிரதீப் சோமசிரி; டி.டி.பி. ஹெஷான் பெர்னாண்டோ; எஸ்.எம். தேஷான் சில்வா; ஏ.பி. தீக்ஷன ஜயதிலக்க; எம்.எஸ். மொஹமட் சஃப்ரன்; வை. மொஹமட் சல்மான்; டபிள்யு.ஏ.ஜே. தனஞ்சனா விக்ரமசிங்க – பெண்களுக்கான 100 மீ/நீளம்பாய்தல்; ஜே.எம்.எஸ். ஸ்வர்ணமாலி ஜயசுந்தர. (பாரிஸ் 2024 பாராலிம்பிக்கில் F44 ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற சமித்த துலான் பிரதான பதக்க எதிர்பார்ப்பாளராக உள்ளார். அதேவேளை, தனஞ்சனா 2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான T47 நீளம்பாய்தலில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.)

Para Badminton: எம்.கே. சஞ்சீவ பெரேரா; Para Swimming: வை.ஏ.ஜி.சி. நதீன் பஸ்நாயக்க; ஆர். நவீத் ரஷீன்; Para Table Tennis: பி.டி.எஸ். தினேஷ் தேஷப்பிரிய; வாலிமுனிகே முனிதாஸ; Wheelchair Tennis: டி.எஸ். ரஞ்சன் தர்மசேன; டி.எம். காமினி; Para Shooting: திருமதி நிரஞ்சலா ரணசிங்க

அதிகாரிகள் மற்றும் உதவி ஊழியர்கள் (Officials and support staff): Chef de Mission: பிரிகேடியர் டி.கே. அலுதெனிய (ஓய்வு); Administration: திருமதி எம்.கே.பி. டி சில்வா – நிர்வாக அதிகாரி; Para Athletics: லெப்டினன்ட் கேணல் எல்.ஆர்.டி.டி. ஹேரத் (ஓய்வு) – மேலாளர்; திரு ஏ.பி.பி.என். அப்புஹாமி – பயிற்றுவிப்பாளர்; திரு ஜி.எல்.எஸ். ஜயலால் – பயிற்றுவிப்பாளர்; திரு யு.பி.டி. பெரேரா – பயிற்றுவிப்பாளர்; திரு பி.எம்.எஸ்.என். சேனாரத் – பயிற்றுவிப்பாளர்; Para Badminton: கேணல் எம்.என்.கே. குமார – மேலாளர்; Para Swimming: மேஜர் ஏ.எஸ்.எம்.சி.கே. அர்த்தநாயக்க – மேலாளர்; திரு எம்.டி. அபேசிங்க – பயிற்றுவிப்பாளர்; Para Table Tennis: திருமதி பி.எம்.என்.டி.கே. வாரியப்பொல – மேலாளர்; திரு பி.டி.எஸ். நுவன் சம்பத் – பயிற்றுவிப்பாளர்; Wheelchair Tennis: மேஜர் ஜெனரல் எச்.ஆர். விக்ரமசிங்க (ஓய்வு) – மேலாளர்; Medical: டொக்டர் சி.ஏ. எதிரிசிங்க – தலைமை மருத்துவ அதிகாரி; திரு ருவன் வணிகசேகர – மாஸர் (Masseur); Para Shooting: கேணல் சமந்த குமார – மேலாளர்