Body

டயலொக் எண்டர்பிரைஸ் ஸ்மார்ட் ஒத்துழைப்பு கருவிகளுடன் வணிகங்களை மேம்படுத்த Zoho உடன் கூட்டிணைந்துள்ளது.

ஜனவரி 05, 2021         கொழும்பு

 

news-1

இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் corporate solutions பிரிவான டயலொக் எண்டர்பிரைஸ், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான Zoho உடன் அதன் மூலோபாய பங்காளித்துவத்தை அறிவித்தது. இந்த கூட்டாண்மை டயலொக்கின் பிரத்தியேக கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு Zoho Workplace அணுகலை வழங்கும். இது ஒரு கிளவுட் அடிப்படையிலான நிறுவன ஒத்துழைப்பாதலால் பொதுவான தேடல் மற்றும் AI மூலம் ஒன்றிணைக்கப்பட்டு, வணிக சிக்கல்களை விரைவாகவும் ஒத்துழைப்புடனும் தீர்க்க நிறுவனங்களுக்கு உதவியளிக்கின்றது.

டயலொக் எண்டர்பிரைஸ் ஆனது வணிக நிறுவனங்களின் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் உருமாற்றத்திற்கு தொடர்ச்சியாக பங்களிப்பை வழங்கி வருவதுடன் மென்மையான இடம்பெயர்வினையும் உறுதிப்படுத்துவதனால் நிறுவனங்கள் தங்கள் வணிக மதிப்பை உயர்த்திக்கொள்ளலாம். Zoho உடனான கூட்டாண்மை மற்றும் Zoho application செயற்படுத்தல் அணிகளிடையே ஸ்மார்ட் சூழ்நிலையை ஏற்படுத்துவதையும் எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. Zoho Workplace suite பின்வருவனவற்றை உள்ளடங்குகின்றன; Zoho Writer, Zoho Sheet, Zoho Show, Zoho Workdrive, Zoho Showtime, Zoho Meeting, Zoho Cliq, Zoho Mail மற்றும் Zoho Connect. மேலும் சேவைகளை https://www.zoho.com/workplace வழியாக ஆன்லைனில் காணலாம்.

முன்பே கட்டமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புகளைத் தவிர, Workplace apps ஒவ்வொரு நிறுவனத்தின் தனிப்பட்ட தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையாக தனிப்பயனாக்கப்பட்டுள்ளது. தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்த நிர்வாகக் கட்டுப்பாடுகள் அவற்றில் உள்ளடங்குவதுடன் அவை பல்வேறு சர்வதேச மொழிகளிலும் கிடைக்கின்றன. தற்போது, core Zoho Mail app சிங்கள மற்றும் தமிழ் மொழிகளையும் கொண்டுள்ளது. Zoho இன் தனியுரிமைக் கொள்கைகள் மற்றும் பாதுகாப்புத் கொள்கைகள் வாடிக்கையாளர்களின் செயற்பா டுகளையோஅல்லது எந்தவொரு மூன்றாம் தரப்பு trackers கள் கண்காணிக்க அனுமதிக்காது. Zoho ஒருபோதும் விளம்பர அடிப்படையிலான நிறுவனங்களுக்கு தரவை விற்காததோடு வாடிக்கையாளர் ரகசியத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. Zoho பணியிடங்கள் இப்போது டயலொக்கின் இணையதளத்தில் மாதாந்தம் ரூ. 199/- க்கு கிடைக்கின்றது. Zoho இயங்குதளத்தை பயன்படுத்தும் போது டயலொக் எண்டர்பிரைஸ் வாடிக்கையாளர்களும் ஏராளமான நன்மைகளை அனுபவிக்கிறார்கள். வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களின் App களை பயன்படுத்தினாலும் Zoho applications இல் நெகிழ்வு தன்மை அவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளது.

மேலதிக விபரங்களுக்குhttps://business.dialog.lk/products-services/cloud-co-location/zoho-mail/ க்கு செல்லுங்கள்