Body

Dialog Future Zone எதிர்காலத்தை கண்முன் கொண்டுவரும் VR விளையாட்டு சாகசங்களுடன் Sports Fiesta-வை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது

2024 ஆகஸ்ட் 27         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

மேலுள்ள புகைப்படத்தில்: Sri Lanka Sports Fiesta 2024 இல் அமைந்துள்ள Dialog Future Zone பார்வையாளர்கள் ஊடாடல்மிக்க VR அனுபவங்களை பெற்றுக்கொள்கின்றனர்

இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, புத்தாக்கத்திற்காக தாம் காட்டும் அர்ப்பணிப்பை Sri Lanka Sports Fiesta 2024இல் பெருமிதத்துடன் வெளிப்படுத்தினர். இது ஆகஸ்ட் 16ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை கொழும்பு குதிரைத்திடல் மைதானத்தில் நடைபெற்றது. டயலொக் ஆசிஆட்டாவின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த விழா, நம் நாட்டு திறமைசாலிகளை கொண்டாடி, விளையாட்டுத்துறையின் மேம்பாட்டைக் காட்சிப்படுத்தியது. அதோடு, டயலொக்கின் முன்னேற்றகரமான தொழில்நுட்பத்தை பிரதிபலிக்கும் Future Zone மூலம் நாட்டில் புதுமையான பொழுதுபோக்குக்கு புதிய தரநிலையை நிர்ணயித்தது. இவ்வைபவம், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு ஆகியன இணைந்து நடாத்த, அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் நோக்கில், மூன்று நாட்கள் நடைபெற்றது. ஏழு முக்கியமான விளையாட்டு பிரிவுகளில், 3,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்கு அற்புதமான களத்தை வழங்கியது.

Dialog Future Zone விழாவின் முக்கிய அம்சமாகத் திகழ்ந்தது. இங்கு, பார்வையாளர்களுக்கு இதுவரை கண்டிரா அனுபவத்தை அளிக்கும் வகையில், விசித்திரமான Virtual Reality (VR) அனுபவங்களை அளித்தது. இது, தொழில்நுட்பத்தின் புதிய எல்லைகளை முயன்று பாரத்திட, டயலொக் மேற்கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது. "VR பஞ்சி ஜம்ப்" அனுபவம், பிரசித்திபெற்ற கொழும்பு தாமரைக்கோபுரத்தில் இருந்து குதிப்பது போன்ற உற்சாகமான உணர்வை பங்கேற்பாளர்களுக்கு வழங்கியது. இதில், பாதுகாப்பான மற்றும் கட்டுப்பாடான சூழலில், விமானத்தில் பறப்பது போன்ற உணர்வையும், அழகிய காட்சிகளையும் அனுபவிக்கக் கூடியதாய் இருந்தது. கூடுதலாக, "VR சைக்கிள்" சவாரி அனுபவம், பயணிகளை நுவரெலியா மற்றும் காலி வழியாக மெய்நிகர் சைக்கிள் பயணமாக அழைத்துச் சென்றது. இதன் மூலம், இலங்கையின் அழகான இயற்கைக் காட்சிகள் மற்றும் சத்தங்களை நேரடியாக உணர்வது போன்ற அனுபவத்தை அளித்தது.

Dialog Future Zone-இல் பார்வையாளர்கள் VR வில்வித்தை (Archery) மற்றும் VR கொல்ஃப் (Golf) அனுபவங்களையும் பெற முடிந்தது. இது பல்வேறு திறன்களுக்கான மாறுபட்ட அனுபவங்களின் அளவை மேலும் விரிவாக்கியது. இந்த செயல்பாடுகள், பல்வேறு ஆர்வங்களுக்கு ஏற்ப முழுமையான மற்றும் புதுமையான பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்குவதற்காக டயலொக் காட்டும் அர்ப்பணிப்பை மேலும் வெளிப்படுத்தின.

இந்த புதுமையான VR அனுபவங்கள், தொழில்நுட்பத்தை தழுவி முன்னேற்றுவதற்கு டயலொக் கொண்டுள்ள உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. இது எதிர்காலத்திற்கான தீர்வுகளில் நிறுவனம் தொடர்ந்தும் முதலீடு செய்வதை பிரதிபலிக்கின்றது. Sri Lanka Sports Fiesta 2024 இல் டயலொக் பங்குபற்றியிருப்பது, ஊடாடும் பொழுதுபோக்கு மேம்பாடு மற்றும் உள்ளூர் விளையாட்டு மற்றும் கலாச்சார சூழலுக்காக நிறுவனம் ஆற்றும் பங்களிப்பை வலியுறுத்துகிறது. இந்த உயர்தரமான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், டயலொக் இலங்கையில் பொழுதுபோக்கு மற்றும் இணைப்புத்திறனின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவுகிறது.