டயலொக் முழுமையாக AI-தொழிநுட்பத்தினூடாக உருவாக்கப்பட்ட தொலைக்காட்சி விளம்பரத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் இலங்கையில் AI-உந்துதல் முயற்சிக்கான புதிய தரவரிசையை அமைக்கிறது.
2024 நவம்பர் 29 கொழும்பு
இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி,முழுமையாக AI மூலமாக உருவாக்கப்பட்ட தொலைக்காட்சி விளம்பரத்தை அறிமுகப்படுத்தியது. இதனூடாக நாட்டின் விளம்பர துறையில் புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. புதிய Home broadband ரூ.999 ரீலோட் திட்டத்தை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த விளம்பரமானது டயலொக் நிறுவனத்திற்கு முக்கியமான மைல்கல்லாகும். இந்த அதிநவீன AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி யதார்த்தத்துடன் கூடிய உயிரோட்டமான அனிமேஷன் காட்சிகளை உருவாக்க முடியும்.
Triad Pvt Ltd உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த தொலைக்காட்சி விளம்பரமானது AI அறிவை விளம்பரத்துடன் ஒருங்கினைப்பதனூடாக ஒரு முன்னோடி அணுகுமுறையாகவும் காணப்படுகின்றது. மேலும் இலங்கையை முன்னோக்கி சிந்திக்கச் செய்வதில் நிறுவனத்தின் பரந்த அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிக்கிறது.இந்த விளம்பரமானது Chatgpt,Midjourney,runway மற்றும் flux போன்ற மேம்பட்ட AI தொழிநுட்ப கருவிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்ட்டது. AI தொழில்நுட்பம் மூலம் பிராண்ட் செய்தியை பயனாளர்களுக்கு துல்லியமாகவும் புதுமையாகவும் எடுத்து செல்லும் விதம் இந்த விளம்பரத்தின் மூலம் வெளிப்படுகிறது. இது இந்த தொழிநுட்பத்தின் திறனை மேலும் நிரூபிக்கிறது.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழும பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி லசந்த தெவெரப்பெரும, "டயலாக் நிறுவனத்தில் எதிர்காலத்தை ஏற்கும்; உறுதிப்பாட்டில் நாங்கள் செயல்படுகிறோம், மேலும் எங்கள் சந்தைப்படுத்தல் மற்றும் கலைப்பணிகளில் AI –யை ஒருங்கிணைப்பது ஒரு முக்கிய முன்னேற்றமாகும். AI திறன்களைப் பயன்படுத்துவதன் மூலம் எங்கள் படைப்பாற்றல் செயல்முறையை மேம்படுத்தி புதுமையான மற்றும் முன்னோக்கிய முயற்சிகளை வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம்" என தெரிவித்துள்ளார்.
டயலொக்கின் இந்த முயற்சிக்கான படைப்பாற்றல் கொண்ட பங்குதாரரான Traid Pvt Ltd இந்த இலட்சியத் திட்டத்தை உயிர்ப்பிப்பதில் முக்கிய பங்காற்றியது. ஆக்கப்பூர்வமான AI - யை ஒருங்கிணைக்கும் சவாலையும் ஏற்றுக்கொண்டது. இதன் விளைவாக தொழில் துறையில் புதிய தரங்களை அமைக்கும் முயற்சியும் ஏற்பட்டது.
இந்த முன்னோடியான AI வழிநடத்தப்பட்ட முயற்சியில் டயலொக் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது பெருமையானதும் மகிழ்ச்சியானதுமான பயணமாக உள்ளது" என Traid Pvt Ltd நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் இயக்குனருமான ஷேன் வில்சன் கூறினார். மேலும் "இந்த திட்டம் AI எவ்வாறு தத்துவார்த்தத்திலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது என்பதனை நிரூபிக்கிறது. இந்த தொழிநுட்பத்தின் பயன்பாடு வணிகத்தை பார்வையிடும் விதத்தை நிரந்தரமாக மாற்றி புதிய மாற்றங்களை உருவாக்கும். அத்துடன் நிறுவனம் கதைக்களம் அமைக்கும் போது உள்ள நடைமுறை, பயனர்கள் படைப்புடன் ஈடுபடுவது எப்படி, நிறுவன சந்தை மற்றும் நிறுவன உள்ளடக்கங்கள் ஆகியவை நிறுவன சூழலியல் அமைப்பை மாற்றும் முக்கிய பகுதிகளாக இருக்கும். இது மாறி வரும் விளம்பர துறையின் ஆரம்பம் மட்டுமே." என அவர் தெரிவித்துள்ளார்.
டயலொக் நிறுவனத்தின் புதிய முயற்சியானது,புதுமைக்கான எல்லைகளைத் தாண்டி செயல்படும் அதன் அர்ப்பணிப்பையும், இலங்கையில் விளம்பரத்தின் எதிர்காலத்தை உருவாக்கும் அதன் நோக்கையும் உறுதிபடுத்துகிறது. AI -யின் சக்தியை பயன்படுத்தி நிறுவனம் தொழில் துறையில் புதிய அளவுகோல்களை அமைத்து நவீன சேவைகளையும் முன்னோக்கிய சந்தைப்படுத்தல் முயற்சிகளையும் வழங்கும் பாதையில் தைரியமான முன்னேற்றங்களை மேற்கொள்கிறது.