Body

Doc990 மற்றும் Lassana Health இணைந்து வழங்கும் தடையற்ற மருந்து ஆர்டர் மற்றும் விநியோக சேவை

2026 செப்டம்பர் 20         Colombo

 

இசிர பெரேரா, குழு பணிப்பாளர்/தலைமை உத்தி மற்றும் வளர்ச்சி அதிகாரி, Lassana Group of Companies; டாக்டர் லசந்த மலவிகே, ஸ்தாபகர்/தலைவர், Lassana.com (Pvt) Ltd; ஜனித் பீரிஸ், தலைமை நிர்வாக அதிகாரி, Digital Health Pvt Ltd; தீக்ஷண ஏகநாயக்க, வணிக வளர்ச்சிப் பிரிவுத் தலைவர், Digital Health Pvt Ltd; கசுன் ரணசிங்க, தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர், Digital Health Pvt Ltd.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் ஒரு அங்கமான Digital Health (Pvt) Ltd மூலம் இயக்கப்படும் Doc990, இலங்கையின் முன்னணி டிஜிட்டல் சுகாதார தீர்வுகள் வழங்குனர் என்ற தனது நிலையினை மேலும் பலப்படுத்தியுள்ளது. தனது டிஜிட்டல் சுகாதார அமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், Lassana Health நிறுவனத்துடன் கைகோர்த்து மருந்தக வலையமைப்பை வலுப்படுத்தியுள்ளது. இதன் மூலம் Lassana Health Pharmacy தளம் தற்போது Doc990 மொபைல் App மற்றும் இணையதளத்தில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வீட்டிலிருந்தபடியே பாதுகாப்பாகவும் எளிதாகவும் ஆர்டர் செய்ய முடியும் என்பதால், மருந்தகங்களுக்கு நேரில் செல்வதையும் நேர விரயத்தையும் தவிர்க்க முடிகிறது.

இச்சேவை தற்போது மேல் மாகாணம் (Western Province) முழுவதும் கிடைக்கப் பெறுவதுடன், நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்கிறது. வாடிக்கையாளர் ஒரு ஆர்டரைப் பதிவுசெய்ததும், அதற்கான தயாரிப்பு முதல் விநியோகம் வரையிலான முழுச் செயற்பாட்டையும் Lassana Health குழு பொறுப்பேற்று நடத்துகிறது. இதனால் மருந்துச் சீட்டைப் பதிவேற்றுவது முதல் வீட்டின் வாசலுக்கே மருந்துகள் வந்து சேருவது வரை தடையற்ற, நம்பகமான சேவை உறுதிசெய்யப்படுகிறது.

இந்த புதிய அறிமுகம் குறித்து Doc990 நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜனித் பீரிஸ் கருத்து தெரிவிக்கையில், “இந்த கூட்டாண்மை வெறும் மருந்து விநியோகத்துடன் மட்டும் முடிந்துவிடவில்லை; நோயாளிகள் சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் முறையிலேயே ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவருகிறது. Lassana Health இன் வலுவான விநியோகக் கட்டமைப்பு Doc990 உடன் இணைக்கப்படுவதன் மூலம், அத்தியாவசிய மருந்துகளை சிரமமின்றிப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நம்பகமான தளத்தை உருவாக்கியுள்ளோம். ஒவ்வொரு இலங்கையருக்கும் 'Health at Your Fingertips' (உங்கள் விரல் நுனியில் ஆரோக்கியம்) என்ற எங்களது வாக்குறுதியை மெய்ப்பிக்கும் அதேவேளை, வாடிக்கையாளர்களுக்கு மேலதிக வசதியையும் நிம்மதியையும் வழங்குகிறோம்,” எனக் குறிப்பிட்டார்.

இக்கூட்டாண்மை குறித்து Lassana.com (Pvt) Ltd நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான டாக்டர் லசந்த மலவிகே கருத்து தெரிவிக்கையில், "Doc990 உடனான இந்த இணைப்பின் மூலம், Lassana Health Pharmacy வழங்கும் அத்தியாவசிய மருந்துகளை மேல் மாகாணம் முழுவதும் உள்ள நோயாளிகள் மிகவும் எளிதாகவும் வேகமாகவும் பெறக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சுகாதார சேவைகளை உரிய நேரத்தில், அதிக அக்கறையுடனும் வசதியாகவும் கொண்டு சேர்ப்பதே எமது முக்கிய நோக்கமாகும். வரும் நாட்களில் எமது விநியோகச் சேவையை மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தி, அதிகமான மக்களுக்குத் தரமான மருந்தக சேவைகளை வழங்க எதிர்பார்க்கிறோம்,” என்றார்.

Lassana Health Pharmacy உடனான இந்த ஒருங்கிணைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் சுகாதாரச் சேவைகளை எளிதில் பெற வைப்பதற்கான Doc990 இன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. அத்துடன் நோயாளிகளை மையமாகக் கொண்ட ஒரு விரிவான டிஜிட்டல் சுகாதார அமைப்பை உருவாக்கும் அதன் தொலைநோக்குப் பார்வையின் அடுத்தகட்ட நகர்வாகவும் இது அமைகிறது. நாட்டின் முதன்மைச் சுகாதார சேவை வழங்குநர்களை ஒரே தளத்தின் கீழ் கொண்டுவருவதன் மூலம், இலங்கை முழுவதும் உள்ள மக்களின் சுகாதாரத் தேவைகளை Doc990 தொடர்ந்து எளிமைப்படுத்தி வருகிறது.

பயனாளர்கள் https://www.doc.lk/ என்ற இணையதளத்திற்குச் சென்றோ அல்லது Apple Store / Google Play Store இலிருந்து Doc990 மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்தோ இச்சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.