Doc990 அனுராதபுரத்தில் உள்ள கனோலா மருத்துவமனையுடன் பங்காளராக இணைகின்றது.
வட மத்திய மாகாணத்தில் உள்ள நோயாளிகளுக்கு வசதியான முன்பதிவு சேனலிங் அனுபவத்தை வழங்குதல்
2022 செப்டெம்பர் 08 கொழும்பு
படத்தில் இடமிருந்து வலமாக:டிஜிட்டல் ஹெல்த் பிரைவேட் லிமிட்டட்டின் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பிரிவு முகாமையாளர் விராஜ் நிஷங்க, டிஜிட்டல் ஹெல்த் பிரைவட் லிமிட்டட்டின் வர்த்தக அபிவிருத்தி பிரிவு சிரேஷ்ட கணக்கு முகாமையாளர் தமரா ராஜவர்தன, டிஜிட்டல் ஹெல்த் பிரைவேட் லிமிட்டட்டின் வர்த்தக அபிவிருத்தி பிரிவு முகாமையாளர் புத்திக விக்கிரமசிங்ஹ, கனோலா தனியார் மருத்துவமனையின் தலைவர்/முகாமைத்துவப் பணிப்பாளர் திலக் விஜேகோன், கனோலா தனியார் மருத்துவமனையின் குழும பொது முகாமையாளர்ஃ வைத்தியசாலை பணிப்பாளர் ஜனக குமாரசிங்ஹ, கனோலா மருத்துவமனையின் முகாமையாளர் - செயற்பாடுகள் எம். பிரேமதிலகே
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மூலம் இயங்கும் இலங்கையின் முன்னணி டிஜிட்டல் ஹெல்த்கேர் தீர்வு வழங்குனரான Doc990, வடமத்திய மாகாணத்தில் உள்ள நோயாளிகளுக்கு வசதியான மருத்துவ சேவை அனுபவத்தை வழங்குவதற்காக அண்மையில் அனுராதபுரம் கனோலா மருத்துவமனையுடன் கைகோர்த்துக்கொண்டது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கனோலா வைத்தியசாலையானது வட மத்திய மாகாணத்தில் உள்ள மிகப் பெரிய தனியார் வைத்தியசாலையாகும். மேலும் சர்வதேச மருத்துவத் தரங்களுக்கு ஏற்ப சிறந்த மருத்துவ சேவைகளை அனைவருக்கும் ஏற்ற விலையில் வழங்கி இந்த நாட்டின் சுகாதாரத் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மருத்துவமனையானது வெளிநோயாளர் சேவைகள், பொது விசாரணைகள், உள்நோயாளிகள் சேர்க்கைகள், அறுவை சிகிச்சை, பற்கள் தொடர்பான சேவைகள் மற்றும் தீவிர சிகிச்சை சேவைகள் ஆகியவற்றையும் வழங்குகிறது. மேலும் உள்நாட்டில் மருந்தக சேவை மற்றும் முழுமையாக பொருத்தப்பட்ட ஆய்வுக்கூடம் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் முழுமையாக செயற்படுகின்றது. இந்த ஒத்துழைப்பின் மூலம், Doc990 சேவையுடன் இணைந்துள்ள வடமத்திய மாகாணத்தின் வாடிக்கையாளர்கள் 990 க்கு அழைப்பினை ஏற்படுத்தி, www.doc.lk க்கு சென்று அல்லது Doc990 மொபைல் App ஊடாகவும் கனோலா மருத்துவமனை வழங்கும் பல சேவைகளில் இருந்து தாங்கள் விரும்பும் சேவை அல்லது சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.
Digital Health Services (Pvt) Ltd ஆல் நிர்வகிக்கப்படும் Doc990, இலங்கையின் முன்னணி டிஜிட்டல் சுகாதார தீர்வு வழங்குனராகும், இந்தச் சேவைக்காக தமது கையடக்கத் தொலைபேசிகள் மூலம் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் சுகாதார சேவைகளை வழங்குகிறது. 2016 இல் நிறுவப்பட்ட டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் துணை நிறுவனமான Doc990, 140 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் 5000 க்கும் மேற்பட்ட மருத்துவர்களுடன் வாடிக்கையாளர்களை இணைக்கிறது. இந்த சேவையினைwww.doc.lk ஊடாகவும் 990 க்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலமும் அல்லது Doc990 Android மற்றும் iOS App ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும். Doc990 ஆனது, நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளினூடாக மருத்துவ ஆலோசனைகள் உட்பட பல்வேறு மருத்துவ சேவைகளை வழங்குகிறது. அதே சமயம் வாடிக்கையாளர்களை தகுதிவாய்ந்த மருத்துவர்கள், தரமான மருந்தகங்கள் மற்றும் ஆய்வகங்களுடன் டிஜிட்டல் சுகாதார தொழில்நுட்பத்தின் மூலம் இணைக்கிறது.