Body

டயலொக் மற்றும் ஆசிஆட்டாவின், கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய அவர்களுக்கு GSMA Chairman விருது

March 5th, 2024         Colombo

 

Dr. Hans Wijayasuriya Receives GSMA Chairman's Award

உலகளாவிய அலைபேசி துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பணிக்காக இவ்விருது அவருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது

ஆசிஆட்டா குழுமம் பெர்ஹாட் தொலைத்தொடர்பு வணிகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் குழும நிர்வாக இயக்குனர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய அவர்கள், அண்மையில் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் இடம்பெற்ற உலக அலைபேசி பேராயத்தில் (Mobile World Congress) GSMA Chairman விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். Chairman விருது என்பது GSMAவின் உச்சபட்ச கௌரவத்திற்குரிய விருதாகும். இது உலகளாவிய ரீதியில் அலைபேசி தொடர்பாடலின் மேம்பாட்டுக்கு அரும்பணியாற்றும் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.

கலாநிதி விஜயசூரிய அவர்கள் GSMA சபையில் ஆசிஆட்டா குழுமத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இதுவே உலகளாவிய அலைபேசி துறையை நிர்வகிக்கிறது. ஆசியா முழுவதும் 170 மில்லியன் சந்தாதாரர்களுக்கான சேவையை வழங்கும் தொழிற்பாடுகளுடன் ஆசியாவின் பாரிய தொலைத்தொடர்பாடல் குழுமங்களில் ஒன்றாக ஆசிஆட்டா திகழ்கிறது. கலாநிதி விஜயசூரிய அவர்கள் தொலைத்தொடர்பாடல் வணிகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக தனது தலைமையின் கீழ் மலேசியா, இந்தோனேஷியா, கம்போடியா, மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஆசிஆட்டாவின் டிஜிட்டல் தொடர்பாடல் தொழிற்பாடுகளை கண்காணிக்கிறார். இவரது ஆளுமையின் கீழ் குழுமத்தின் நிறுவனம் மற்றும் சர்வதேச வணிகங்களும் அதேவேளை, ஆசிஆட்டாவின் பன்னாட்டு மென்பொருள் மற்றும் டிஜிட்டல் உருமாற்ற அலகு Axiata Digital Labs (ADL) உம் அடங்கும்.

டயலொக் உட்பட ஆசிஆட்டா குழுமத்தின் கம்பனிகளை தொழிற்படுத்தி வரும் இவர், ஆசியா முழுவதும் அலைபேசி தொடர்பாடலின் அதிநவீன வசதிகளையும் செல்வாக்கையும் மேம்படுத்துவதில் தொடர்ச்சியாக முன்னின்று உழைக்கின்றார். கலாநிதி விஜயசூரிய உடன் குழுமத்திலுள்ள ஆசிஆட்டா அணிகள் எல்லாம் இணைந்து பிராந்திய மற்றும் உலகளாவிய ரீதியில் GSMAவின் பலதரப்பட்ட வியூக முன்னெடுப்புகளில் துடிப்போடு இயங்கிவருகின்றனர். மிக அண்மையில், பிராந்தியத்தில் GSMAவின் Open Gateway முன்னெடுப்பை மேம்படுத்துவதில் ஆசிஆட்டா குழுமம் தலைமைப்பணியை ஆற்றியது.

கலாநிதி விஜயசூரிய அவர்கள் 1997 முதல் 2016 வரையான காலப்பகுதியில் டயலொக்கின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றினார். இக்காலப்பகுதியில் அலைபேசி துறையில் 4வதாக நுழைந்த டயலொக், இலங்கையின் பாரிய தொலைத்தொடர்பு சேவை வழங்குனாராகவும் ஆசியாவின் மிக மேம்பட்ட Quad Play இணைப்பாகவும் உயர்ந்தது. அத்துடன் டயலொக் சேவை வழங்குனர்கள் இலங்கையின் நிதிசார் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சுகாதார துறைகளில் இன்றுவரை தொடர்ந்தும் பெரும் உயரங்களை தொட்டுவருகின்றனர். 2016இல் அவர் டயலொக்கில் பணியாற்றிய காலத்தில் GSMAவானது கலாநிதி விஜயசூரியவுக்கு ஆசிய அலைபேசி துறைக்காற்றிய அளப்பரிய பங்கு (‘Outstanding Contribution to Asian Mobile Industry’) எனும் விருதை வழங்கி கௌரவித்தது. இது ஆசிய அலைபேசி விருதுகளில் உச்சபட்ச கௌரவிப்பு ஆகும். கலாநிதி விஜயசூரிய அவர்கள் GSM Asia Pacific இன் முன்னாள் தலைவர் ஆவார். இது சர்வதேச கட்டமைப்பின் பிராந்திய குழுமம் ஆகும். அத்துடன் இவருக்கு இலங்கையின் முன்னணி வணிக இதழான LMD இனால் 2008ம் ஆண்டு “Sri Lankan of the Year” நாமம் வழங்கப்பட்டது.