Body

டயலொக் ஆசிஆட்டாவின் Genie மற்றும் Dialog Finance ஆகிய சேவைகள் 'LankaPay Technnovation விருதுகள் 2024' இல் அங்கீகரித்து கெளரவிக்கப்பட்டன

March 26th, 2024         Colombo

 

Dr. Hans Wijayasuriya Receives GSMA Chairman's Award

டயலொக் ஆசிஆட்டாவின் genie மற்றும் Dialog Finance PLC ஆகிய சேவைகள் LankaPay Technnovation Awards 2024 விருது விழாவில் டிஜிட்டல் நிதிச் சேவைகளுக்கான பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது. புதுமையான மற்றும் உள்ளடக்கிய நிதித் தீர்வுகளுடன் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் டயலொக் முன்னெடுத்து வரும் முயற்சிகளின் பிரதிபலிப்பாகவே இந்த அங்கீகாரம் கருதப்படுகின்றது.

Genie இரண்டு தங்க விருதுகளை வென்றுள்ளது: இதில் முதலாவது விருதானது, 'மிகவும் பிரபலமான டிஜிட்டல் கொடுப்பனவு தயாரிப்பு - Fintech பிரிவு' க்கு இலங்கை நுகர்வோரால் வாக்களிக்கப்பட்டு வெல்லப்பட்டுள்ளது. இரண்டாவது விருதானது, 'Lanka QR - Fintech பிரிவு மூலம் சில்லறை விற்பனையாளர் கொடுப்பனவுகளுக்கான சிறந்த மொபைல் Application' என வெல்லப்பட்டுள்ளது. இவ்வாறு Genie இரண்டு விருதுகளை வென்றமையானது, இலங்கையில் விருப்பமான டிஜிட்டல் கட்டண தளமாக genie அங்கீகாரத்தை பெற்றுள்ளதை குறிக்கின்றது எனலாம்.

மேலும், Dialog Finance PLC ஆனது, 'சிறந்த டிஜிட்டல் கொடுப்பனவு மூலோபாயத்திற்கான ஆண்டின் நிதி நிறுவனத்திற்கான' தங்க விருதையும், 'சிறந்த டிஜிட்டல் கொடுப்பனவுகள்' மற்றும் 'வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பிரிவில் சிறந்த வாடிக்கையாளர் வசதி' ஆகியனவற்றிற்கு வெள்ளி விருதுகளையும், மேலும் சிறந்த 'நிதி உள்ளிணைக்கை' என்பதற்கான தகுதி விருதையும் பெற்று சிறப்பை சேர்த்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம டிஜிட்டல் சேவைகள் அதிகாரியும் மற்றும் Dialog Finance இன் தலைவியுமான ரேணுகா பெர்னாண்டோ அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “நமது குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் புத்தாக்க உணர்வைப் பிரதிபலிக்கும் விதமாக LankaPay Technnovation விருதுகளில் நமக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இந்த அங்கீகாரமானது, நிதிச் சேவைகளை அனைவருக்கும் அணுகக்கூடிய வகையிலும், வசதியானதாகவும் மாற்றும் நோக்கிலான இலங்கையின் டிஜிட்டல் நிதித்துறையை விரிவுபடுத்துதல் மற்றும் செழுமைப்படுத்துதல் ஆகிய எங்களது பணியைத் தொடர ஊக்குவிக்கின்றது என கூறமுடியும்" என்றார்.

LankaPay Technnovation Awards 2024 இன் இந்த அங்கீகாரங்கள், பயனுள்ள டிஜிட்டல் கட்டணத் தீர்வுகளை வழங்குவதில் genie மற்றும் Dialog Finance இன் முயற்சிகளுக்கு மதிப்பளிப்பது மட்டுமன்றி, டயலொக் ஆசிஆட்டாவின் நிதி உள்ளிணைக்கை மற்றும் புதுமைக்கான அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றமை ஓர் சிறப்பம்சமாகும். இலங்கையர்களின் வாழ்க்கையையும் நிறுவனங்களையும் வலுப்படுத்துதல் மற்றும் வளப்படுத்துதல் என்ற டயலொக் நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, டிஜிட்டல் மற்றும் நிதி ரீதியில் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்லும் டயலொக்கின் முயற்சிகளுக்கு இந்த பாராட்டுக்கள் சான்றாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.