Body

Dialog Pay வர்த்தக அமைப்பில் PickMe இணைகிறது

2026 ஜூலை 28         கொழும்பு

 

இடமிருந்து வலமாக: நவீன் பீரிஸ், குழும தலைமை அதிகாரி - Dialog Enterprise; ஆகிப் ரியால், பிராண்ட்ஸ் தலைவர் - Strategy, Services & Masterbrand, Group Marketing, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; கயான் களுகமகே, சிரேஷ்ட மேலாளர் - Fintech, PickMe; ஜப்ரி சுல்பர், முதன்மை நிர்வாக அதிகாரி / நிறுவனர் - PickMe.

இலங்கையின் முதன்மைத் தொடர்புச் சேவை வழங்கி நிறுவனமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, PickMe நிறுவனத்துடனான புதிய கூட்டாண்மை மூலம் தனது டிஜிட்டல் கட்டணச் சேவை அமைப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இதன்பாற்பட்டு, பயனர் Dialog Pay ஊடாக LankaQR ஐப் பயன்படுத்தித் தங்களது பயணங்கள் மற்றும் விநியோக சேவைகளுக்கான கட்டணங்களைப் பாதுகாப்பாகச் செலுத்த முடியும். இலங்கையின் முன்னணி போக்குவரத்து மற்றும் விநியோகத் தொழில்நுட்பத் தளங்களில் ஒன்றான PickMe உடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இக்கூட்டாண்மையானது, மாதந்தோறும் 5,000 க்கும் மேற்பட்ட வர்த்தகச் சம்பாத்தியக்காரர்கள் மற்றும் 165,000 க்கும் மேற்பட்ட சாரதிகள் மற்றும் விநியோகச் சம்பாத்தியக்காரர்களைக் கொண்ட நெட்வொர்க் மூலம் 1.9 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோருக்குச் சேவையாற்றி வரும் நிலையில், அவர்களுக்கு டிஜிட்டல் கட்டண வசதியை மேலும் விரிவாக்குகிறது. அத்துடன், தகுதியான LankaQR பரிவர்த்தனைகளுக்கு இலவச Dialog டேட்டாவையும் வழங்கிப் பயனர்களை ஊக்கப்படுத்துகிறது.

பயனர்கள் இப்போது PickMe தளத்தின் Rides, Flash Delivery மற்றும் Trucks சேவைகளுக்கு Dialog Pay ஐப் பயன்படுத்த முடியும். அதேநேரம் Food மற்றும் Market சேவைகளுக்கு ரூ. 2,500 வரையிலான ஆர்டர்களுக்கு QR கட்டண வசதியைப் பெற முடியும். இக்கூட்டாண்மையானது, ஒற்றைத் டிஜிட்டல் கட்டணத் தீர்வு மூலம் அன்றாட சேவைகளுக்கான கட்டணங்களைப் பாதுகாப்பாகவும் வசதியாகவும் செலுத்துவதற்கான வாய்ப்பைப் பயனர்களுக்கு வழங்குகிறது.

இக்கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த PickMe நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜப்ரி சுல்பர், "டிஜிட்டல் தளங்களின் எதிர்காலமானது தனித்தனி சேவைகளாக அல்லாமல், ஒன்றிணைக்கப்பட்ட சேவை அமைப்புகளிலேயே (Connected Ecosystems) தங்கியுள்ளது. Dialog Pay உடனான இந்த இணைப்பு, வாடிக்கையாளர்களுக்கு மேலதிக வசதியை உருவாக்குவதுடன், இலங்கையின் டிஜிட்டல் வர்த்தகக் கட்டமைப்பையும் வலுப்படுத்துகிறது. PickMe இன் வர்த்தகத் தளத்தையும் Dialog இன் டிஜிட்டல் கட்டணச் சேவை அமைப்பையும் ஒன்றிணைப்பதன் மூலம், அன்றாடப் பரிவர்த்தனைகளை மேலும் தடையற்றதாக மாற்றுவதுடன், அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறோம்," எனக் குறிப்பிட்டார்.

Dialog Pay App மற்றும் MyDialog App ஆகியவற்றின் மூலம் கிடைக்கப்பெறும் Dialog Pay, தொடர்புச் சேவை, டிஜிட்டல் கட்டணங்கள் மற்றும் நிதிச் சேவைகளை ஒரே சேவை அமைப்பின்கீழ் கொண்டுவருகிறது. இது ஒவ்வொரு இலங்கையருக்கும் டிஜிட்டல் கட்டணங்களை எளிமையானதாகவும், இலகுவாக அணுகக்கூடியதாகவும், அதிக நன்மைகளைத் தருவதாகவும் மாற்றும் Dialog இன் தொலைநோக்குப் பார்வைக்கு ஆதரவளிக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களது eZ Cash கணக்கைப் பயன்படுத்தி அல்லது தங்களுக்கு விருப்பமான வங்கிக் கணக்கை இணைப்பதன் மூலம் Dialog Pay ஐ எளிதாகச் செயல்படுத்த முடியும். இதன் மூலம் பாதுகாப்பான LankaQR கட்டணங்களைச் செலுத்தவும், பணப் பரிமாற்றம் செய்யவும், Digital wallet ஐ அணுகவும், சேமிப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புகளைத் திறக்கவும், Dialog Finance மூலம் கடன்களுக்கு விண்ணப்பிக்கவும் முடியும்.

நாடு முழுவதும் 100,000 க்கும் அதிகமான சில்லறை விற்பனை நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் Dialog Pay, தகுதியான QR பரிவர்த்தனைகளுக்கு இலவச Dialog டேட்டாவை வழங்கிப் பயனர்களை ஊக்கப்படுத்துகிறது. இது அன்றாட வாழ்வில் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிப்பதுடன், ரொக்கப் பயன்பாடு குறைந்த, டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்ட பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கும் ஆதரவளிக்கிறது. கூடுதல் தகவல்களுக்கு https://dialog.lk/dialog-pay என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.