1996 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை மீண்டும் சேனல் ஐ மூலம் ஒளிபரப்புவதற்கான ஆதரவை டயலொக் வழங்குகின்றது
மார்ச் 18, 2021 கொழும்பு

1996 இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் அர்ஜுனா ரனதுங்க, கிரிக்கெட் உலகக் கோப்பையுடன்.
1996 இல் அனைத்து இலங்கையர்களும் ஒருவராக இணைந்து மகிழ்ச்சியடைந்த அந்த வெற்றிகளிப்பான தருணத்தை சாட்சியளிக்கும், 1996 பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைப்பெற்ற உலகக் கோப்பை சாம்பியன்ஸ் சிறப்பு நாளை நினைவுபடுத்துங்கள், எங்களுடைய சிறந்த கேப்டன் கூல் என்றழைக்கப்படும் அர்ஜுன ரனதுங்க அப்போதைய பாகிஸ்தான் பிரதமர், மறைந்த பெனாசிர் பூட்டோவிடம் இருந்து சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்பு லாகூரில் நடைபெற்ற “வில்ஸ்”உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் அதி உயர்ந்த கௌரவம் வழங்கப்பட்டு முடிசூட்டப்பட்டார். இது 18ஆம் திகதி மாலை 4.30 மணி முதல் சேனல் ஐ ஊடாக ஒளிபரப்பப்படும்.
1996 கிரிக்கெட் அணி சில நட்சத்திரங்களுடன் ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களில் ஒரு அணியின் முதல் முறையாக, போட்டியின் மறக்க முடியாத தருணங்களை பந்துக்கு பந்து எடுத்துச் செல்லும் ஒரு பிரத்யேக ஸ்டுடியோ பிரிவையும் இணைத்து இலங்கையின் முதன்மை இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி ஆல் அனுசரணை வழங்கப்படும் மறு ஒளிபரப்பினை 18ஆம் திகதி மாலை 3.00 முதல் 4.30 மணி வரை பார்வையிடலாம்.