Body

2026 தேசிய வெசாக் வலயத்தின் உத்தியோகபூர்வ டிஜிட்டல் பங்காளராக டயலொக் ஆதரவளிப்பு

தேசிய AI வெசாக் அட்டைப் போட்டி மற்றும் மெய்நிகர் VR அனுபவங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கிறது

28 May, 2026         Colombo

 

Dialog Powers National Vesak Zone 2026 as Official Digital Partner

 

இலங்கையின் முதற்தர இணைப்பு வழங்குநரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, மாத்தறையில் நடைபெறவுள்ள 'தேசிய வெசாக் வலயம் 2026' இன் (National Vesak Zone 2026) உத்தியோகபூர்வ டிஜிட்டல் பங்காளராகப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பங்களிப்பின் ஒரு பகுதியாக, Dialog 5G Ultra இன் அனுசரணையுடன், "தேசிய AI வெசாக் வாழ்த்து அட்டைப் போட்டி 2026" ஐ (National AI Vesak Greeting Card Competition 2026) டயலொக் அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள மக்கள், அடுத்த தலைமுறைக்கான இணைப்பு மற்றும் AI தொழில்நுட்பத்தின் ஊடாக வெசாக் பண்டிகையை ஆக்கப்பூர்வமாகக் கொண்டாட வழிவகுக்கிறது.

இப்போட்டியில் பங்கேற்பாளர்கள், Dialog AI அல்லது வேறு ஏதேனும் AI தொழில்நுட்பத் தளங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட AI வெசாக் வாழ்த்து அட்டைகளை 2026 மே 21 முதல் ஜூன் 1 வரை சமர்ப்பிக்க முடியும். இதில் தெரிவுசெய்யப்படும் 10 வெற்றியாளர்களுக்கு Dialog A76 5G ஸ்மார்ட்போன்கள் பரிசாக வழங்கப்படவுள்ளதால், இது அனைத்து வயதினரிடையேயும் டிஜிட்டல் ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.இறுதிப் பட்டியலுக்குத் தெரிவுசெய்யப்படும் AI வெசாக் வாழ்த்து அட்டைகள் 'மாத்தறை வெசாக் வலயத்தில்' (Matara Vesak Zone) காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன், அங்கு வருகை தருவோர் QR கோட்களை (QR codes) ஸ்கேன் செய்வதன் மூலம் அந்த அட்டைகளை எளிதாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த முன்முயற்சியின் மூலம், மேம்பட்ட இணைய இணைப்பானது AI கருவிகளை தடையின்றி அணுகவும், உடனுக்குடன் உள்ளடக்கங்களை உருவாக்கவும் (real-time content creation) எவ்வாறு உதவுகிறது என்பதை Dialog 5G Ultra வெளிப்படுத்துகிறது. அத்துடன், இலங்கையின் மிக முக்கியமான கலாசார மற்றும் சமய வழிபாட்டு நிகழ்வின் போது, பாரம்பரியத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைக்கும் ஒரு பாலமாகவும் இது திகழ்கிறது.

மேலும், 'தேசிய வெசாக் வலயத்தில்' சமய பாரம்பரியத்தை தொழில்நுட்பத்துடன் இணைக்கும் வகையில், Dialog 5G இன் ஆற்றலுடன் கூடிய அதிநவீன VR (Immersive VR experience) தொழில்நுட்ப வசதியையும் டயலொக் வழங்கவுள்ளது. இதன் மூலம் வருகை தருவோர் அனுராதபுரத்திலுள்ள ஜய ஸ்ரீ மகா போதி (Jaya Sri Maha Bodhi) மற்றும் அட்டமஸ்தான (Atamasthana - எட்டு புனித பௌத்த தலங்கள்) ஆகிய இடங்களை மெய்நிகராகப் (virtual tour) பார்வையிட முடியும். இவற்றுக்கு மேலதிகமாக, டயலொக்கின் முன்னோடி QR ரீலோட் தளத்தின் (QR reload platform) மூலமாகச் செயற்படும் 'டயலொக்கின் டேட்டா தன்சல' (Dialog’s Data Dansala) ஊடாக, மாத்தறை தேசிய வெசாக் வலயத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு இலவச மொபைல் டேட்டா (free mobile data) வழங்கப்படவுள்ளதுடன், இந்த நற்காரிய முன்முயற்சியானது பௌத்தாலோக வெசாக் வலயம் (Bauddhaloka Vesak Zone) மற்றும் கங்காராமய வெசாக் வலயங்களுக்கும் (Gangaramaya Vesak Zone) விரிவுபடுத்தப்படவுள்ளது.

இந்தக் கூட்டாண்மை குறித்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ கலாநிதி ஹினிதும சுனில் செனவி கருத்துத் தெரிவிக்கையில், “சமய பாரம்பரியம், ஆக்கத்திறன் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் இத்தகைய முன்முயற்சிகளுக்காக தேசிய வெசாக் வலயம் 2026 இன் கீழ் டயலொக் நிறுவனத்துடன் கைகோர்ப்பதில் அமைச்சு மகிழ்ச்சியடைகிறது. AI மூலமான ஆக்கப்பூர்வமான பங்களிப்பு மற்றும் புனிதமான பௌத்த தலங்களுடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் அனுபவங்கள் (immersive digital experiences) மூலமாக, மக்கள் வெசாக் பண்டிகையின் முக்கியத்துவத்தோடு ஒன்றிணைவதற்கு இந்த பங்களிப்பு புதிய வழிகளை அமைத்துக் கொடுக்கிறது” என்றார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும முதன்மை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்க தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கையில், “கலாசாரம், ஆக்கத்திறன் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை அர்த்தமுள்ள ஒரு புள்ளியில் ஒன்றிணைக்கும் இந்த தேசிய அளவிலான முன்முயற்சிக்காக டயலொக் நிறுவனத்துடன் கைகோர்த்த இலங்கை அரசாங்கத்திற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். வெசாக் என்பது இலங்கையின் மிக முக்கியமான சமய வழிபாடுகளில் ஒன்றாகும். இந்த போட்டியின் ஊடாக, டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை (digital innovation) நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு இன்னும் எளிதாக அணுகக்கூடியதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், பொருத்தமானதாகவும் மாற்றுவதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும், இலங்கையர்கள் AI மற்றும் 5G இன் சாத்தியக்கூறுகளை சுவாரசியமான வழிகளில் அனுபவிக்க வழிவகுப்பதன் மூலம், டயலொக் நிறுவனத்தின் வர்த்தகநாம வாக்குறுதியான 'The Future. Today.' என்பதை நிஜமாக்குவதற்கான எங்களது அர்ப்பணிப்பையும் இந்த முன்முயற்சி பிரதிபலிக்கிறது” என்றார்.

பங்கேற்பாளர்கள் தங்களது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வெசாக் வாழ்த்து அட்டைகளை 2026 மே 21 முதல் ஜூன் 1 வரை https://dakshinaprabha.com/ என்ற இணையத்தளம் ஊடாகச் சமர்ப்பிக்கலாம். இவ்வாறான முன்முயற்சிகளின் மூலம், கலாசாரத்தைக் கொண்டாடும், ஆக்கத்திறனை ஊக்குவிக்கும் மற்றும் AI மற்றும் 5G தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை அன்றாட வாழ்க்கைக்கு நெருக்கமாகக் கொண்டுவரும் புதுமையான டிஜிட்டல் அனுபவங்களுடன் இலங்கையர்களை வலுவூட்டுவதில் டயலொக் என்றும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.