பணமில்லா நிறுவன பயணங்களை மேம்படுத்த Dialog Touch மற்றும் HelaGo இணைந்து புதிய நடவடிக்கை
2026 அக்டோபர் 20 கொழும்பு
இடமிருந்து வலமாக: கரீந்திர மலவிபத்திரண (முதுநிலை நிறைவேற்று அதிகாரி, Corporate Digital Solutions); சிவாந்தி பெரேரா (முதுநிலை மேலாளர், Corporate Digital Solutions, Dialog Finance PLC); சச்சினி டி சில்வா (முதன்மை வணிக அதிகாரி, Dialog Finance PLC); ரேணுகா பெர்னாண்டோ (குழுமத் தலைமை டிஜிட்டல் சேவைகள் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி); தனிக பெரேரா (நிறுவுநர் & முதன்மைச் செயல் அதிகாரி, HelaGo); சனோஜ் சிரிவர்தன (இயக்குநர் & முதன்மைச் செயற்பாட்டு அதிகாரி, HelaGo); கார்வின் மெண்டிஸ் (இயக்குநர் & முதன்மைத் தொழில்நுட்ப அதிகாரி, HelaGo); சந்திம பஸ்நாயக்க (மேலாளர், Payment Services Operations, HelaGo).
இலங்கையின் மிகவும் மேம்பட்ட நிறுவன எரிபொருள் நிர்வாகத் தீர்வான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் Touch Card, ஊழியர்களின் போக்குவரத்து மற்றும் பயணம் சார்ந்த கட்டணங்களை எளிதாகவும், பாதுகாப்பாகவும், பணமில்லா முறையிலும் மேற்கொள்வதற்காக HelaGo உடன் இணைந்துள்ளது.
இக்கூட்டாண்மை குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பும் ஒப்பந்தக் கையெழுத்திடும் நிகழ்வும் 2026 செப்டம்பர் 23 அன்று டயலொக் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் HelaGo நிறுவனத்தின் ஸ்தாபகர் தனிக பெரேரா மற்றும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இன் குழுமத் தலைமை டிஜிட்டல் சேவைகள் அதிகாரி ரேணுகா பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர். இது இலங்கை நிறுவனங்களுக்கான பயண நிர்வாகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் ஒரு முக்கிய நகர்வாகும்.
இக்கூட்டாண்மையின் மூலம், நிறுவன வாடிக்கையாளர்கள் HelaGo வாகன முன்பதிவுகளுக்கு Dialog Touch சேவையை எளிதாகப் பயன்படுத்த முடியும். இது நிறுவனங்கள் தங்களின் போக்குவரத்துச் செலவுகளைச் திறம்பட நிர்வகிக்க உதவுவதுடன், செலவினங்கள் மீதான முழுமையான கட்டுப்பாட்டையும் வழங்குகிறது. மேலும், இது நிறுவனங்களின் செயற்பாட்டுத் திறனை அதிகரிப்பதுடன், ஊழியர்களுக்கு வசதியான பணமில்லா சவாரி அனுபவத்தையும் உறுதிசெய்கிறது.
"நிறுவனப் போக்குவரத்துத் துறை வேகமாக மாற்றமடைந்து வரும் நிலையில், ஊழியர்களின் பயணங்களுக்கு ஸ்மார்ட்டான, வசதியான மற்றும் பாதுகாப்பான தீர்வுகள் இன்றியமையாதவை. HelaGo உடனான எங்களது இந்தத் தொழினுட்பக் கூட்டாண்மை, டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் மூலம் நிறுவனங்களின் பயண நிர்வாகத்தை எளிதாக்குவதுடன், அதிக வெளிப்படைத்தன்மையையும் சிறந்த கட்டுப்பாட்டையும் வழங்குவதில் Dialog Touch கொண்டுள்ள அர்ப்பணிப்பை உறுதிசெய்கிறது," — ரேணுகா பெர்னாண்டோ, குழுமத் தலைமை டிஜிட்டல் சேவைகள் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி.
"Dialog Touch உடனான இந்த இணைப்பு, இலங்கை நிறுவனங்களுக்கு நம்பிக்கையான மற்றும் தடையற்ற பயண அனுபவத்தை வழங்குவதற்கான HelaGo இன் சேவையை மேலும் வலுப்படுத்துகிறது. இலகுவான பயணச் சேவையையும் பாதுகாப்பான டிஜிட்டல் கட்டண முறையையும் ஒன்றுசேர்ப்பதன் மூலம், ஊழியர்களின் போக்குவரத்தை மிகவும் எளிமையாகவும், நவீனமாகவும், திறமையாகவும் மாற்றுவதே எமது நோக்கமாகும்," — தனிக பெரேரா, ஸ்தாபகர், HelaGo.
இலங்கையில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் மூலம் திறம்பட்ட போக்குவரத்துத் தீர்வுகளை உருவாக்கி, பணமில்லா பயண முறையை விரைவுபடுத்துவதில் டயலொக்கின் அர்ப்பணிப்பை இந்த மைல்கல் வெளிப்படுத்துகிறது.Dialog Touch சேவையானது, நிறுவனங்களின் எரிபொருள், மின்சார வாகனக் கட்டணம் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் மீது சிறந்த கட்டுப்பாட்டையும் தெளிவான கண்காணிப்பையும் வழங்குகிறது. இதன் விரிவான சேவை அமைப்பானது, உடனுக்குடனான பரிவர்த்தனைகளைக் கண்காணித்தல், தேவைக்கேற்ற எரிபொருள் மற்றும் சக்தி ஒதுக்கீடுகள் மற்றும் நாடளாவிய ரீதியில் 600க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அணுகும் வசதியையும் அளிக்கிறது. GreenEV, Recharge.lk மற்றும் chargeNET ஆகியவற்றினூடாக டிஜிட்டல் Wallet Top-up வசதி மூலம் நாடு தழுவிய மின்சார வாகனச் சார்ஜிங் நிலையங்களையும், Kangaroo Cabs, PickMe மற்றும் HelaGo ஆகியவற்றினூடாக நிறுவனப் பயணச் சேவைகளையும் உள்ளடக்கி, Dialog Touch ஒரு முழுமையான பயணத் தீர்வாகத் தன் நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.