தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடருடன் பாரா விளையாட்டில் 26 ஆண்டுகால டயலொக்கின் ஆதரவு தடம் பதிக்கிறது
2026 ஜூலை 03 கொழும்பு
ரத்மலானை விழிஇழந்தோர் பாடசாலை அணி
பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தளராமல், அயராத முயற்சியுடன் வெற்றிகளை நோக்கி பயணிக்கும் இந்நாட்டு பாரா விளையாட்டுத் துறையின், 2026 தேசிய திறந்த பாரா தடகள ஆண்கள் பிரிவின் சாம்பியன்ஷிப் பட்டத்தை இலங்கை காலாற்படை (Sri Lanka Light Infantry) வென்றெடுத்தது. அதேவேளை, பெண்கள் பிரிவின் இணைச் சாம்பியன்ஷிப் (Joint Championship) பட்டத்தை வன்னி மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு நிறுவனம் (VAROD) மற்றும் ரத்மலானை விழிஇழந்தோர் பாடசாலை ஆகியன வென்றெடுத்தன.
எத்தனையோ கஷ்டங்கள் மற்றும் தடைகள் இருந்தபோதிலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச விளையாட்டு அரங்கில் தொடர்ந்து வெற்றிக்கொடிகளை நாட்டிய சமித்த துலான், F64 பிரிவின் ஈட்டி எறிதல் இப்போட்டியில் 62.46 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து தங்கப் பதக்கம் வென்றதுடன், இத்தொடரின் மிகச்சிறந்த ஆண் விளையாட்டு வீரருக்கான விருதையும் தட்டிச்சென்றார். அதேபோல், T47 பிரிவின் நீளம் பாய்தல் இப்போட்டியில் 5.38 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெற்றி பெற்ற ஜனனி தனஞ்சனா, இத்தொடரின் மிகச்சிறந்த பெண் விளையாட்டு வீராங்கனைக்கான விருதை பெற்றுக்கொண்டார்.
வருகின்ற ஒக்டோபர் மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளுக்கான (Asian Para Games) தகுதிச் சுற்றுப் போட்டியாகவும் அமைந்த இந்நேரத்தில், தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நடைபெற்ற இந்த 2026 தேசிய திறந்த பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில், ஆண்கள் பிரிவில் 10 புதிய சாதனைப் பதிவுகளும், பெண்கள் பிரிவில் 10 புதிய சாதனைப் பதிவுகளும் நிலைநாட்டப்பட்டமை சிறப்பம்சமாகும்.
இலங்கையின் பாரா விளையாட்டு வீரர்களின் இருப்பு, அவர்களின் வளர்ச்சி மற்றும் வெற்றிகளை உருவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் பங்களிப்பு வழங்கி வரும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இந்த சமூகத்தினரை ஒருபோதும் தனித்துவிடவில்லை என்பதைக் காட்டும் வகையில், கடந்த 26 வருடங்களாகத் தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்கி, இந்நாட்டு பாரா விளையாட்டின் பிரதான அனுசரணையாளராக இன்றுவரை நிலைத்து நிற்கிறது.
இது குறித்து இலங்கை பாராலிம்பிக் சங்கத்தின் தலைவர் திரு. தனஞ்சய அலுதெனிய அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்: "இந்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தபோதிலும், அவர்கள் போட்டித்தன்மை வாய்ந்த சமூகத்திற்குள் நுழைவது மிகக் குறைவாகவே உள்ளது. இத்தகையோரை சமூகத்துடன் ஒன்றிணைப்பதற்கான ஒரு வாய்ப்பாகவே இந்த பாரா விளையாட்டுப் போட்டிகளை நாம் நாட்டில் நடத்துகிறோம். இந்த பாரா விளையாட்டிற்காக கடந்த 26 ஆண்டுகாலமாக எங்களது பிரதான அனுசரணையாளராக டயலொக் நிறுவனம் தொடர்ச்சியாக எங்களுடன் பயணித்து வருகின்றது. எங்களது திறமையான விளையாட்டு வீர, வீராங்கனைகள் தேசிய மட்டத்தில் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், சர்வதேச மட்டத்திலான சாதனைகளை நோக்கிய பயணத்திற்கும் டயலொக் வழங்கிய ஆதரவை நாம் மிகவும் நன்றியறிதலுடன் நினைவு கூர்கிறோம்." என்றார்.
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும சந்தைப்படுத்தல் பிரிவின் துணைத் தலைவர் திரு. ஹர்ஷ சமரநாயக்க அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்: "பாரா விளையாட்டு வீர, வீராங்கனைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்குத் தேவையான சூழலை நாம் அவர்களுக்குத் தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். டயலொக் என்பது இந்நாட்டு மக்களை வலுவூட்டி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தனது பெருநிறுவன சமூகப் பொறுப்பை (CSR) தொடர்ச்சியாக நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயல்படும் ஒரு நிறுவனமாகும். அந்தப் பொறுப்பை நிறைவேற்றும்போது, நாட்டின் எந்தவொரு சமூகமும் விடுபடாத வகையில் நாம் செயலாற்றுகிறோம் என்பதற்கு, பாரா விளையாட்டு வீரர்களுக்காக வழங்கப்படும் இந்தத் தொடர்ச்சியான ஆதரவே சிறந்த சான்றாகும். இந்தச் சமூகத்தினர் தங்களது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான மேடையை அமைத்துக் கொடுப்பதில் தேசிய பாராலிம்பிக் குழு ஆற்றும் சேவை மிகவும் உன்னதமானது. அத்துடன் இந்த பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்ற மற்றும் மன உறுதியுடன் போட்டியிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.
நேர்மறையான சமூகத் தாக்கங்களின் மூலம் இலங்கைச் சமூகத்தின் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் பல்வேறு சமூக நலன்புரித் திட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது. அதன் மூலம் பன்முகத்தன்மையை மதிக்கும், சமூகங்களை வலுவூட்டும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதுடன், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும் ஒரு இலங்கையை உருவாக்குவதற்கும் நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.
வன்னி மாற்றுத்திறனாளிகளுக்கான புனர்வாழ்வு நிறுவன அணி
இலங்கை காலாற்படை அணி