இலங்கை FinTech விருதுகள் 2026 இல் 'சிறந்த டிஜிட்டல் கொடுப்பனவுப் புத்தாக்கத்திற்கான' (Best Digital Payments Innovation) தங்க விருதை வென்றது Dialog Pay
05 November 2026 Colombo
இடமிருந்து வலமாக: துவான் பி. ஷிராஸ், சிரேஷ்ட தரவு பகுப்பாய்வாளர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; மதவிகா முனசிங்க, தரவு பகுப்பாய்வாளர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; தரிந்து கருணாரத்ன, சிரேஷ்ட பிராண்ட் மேலாளர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; கித்மா குரே, பிராண்ட் மேலாளர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; ஆகிப் ரியால், தலைவர் - பிராண்ட்ஸ், மூலோபாயம், சேவைகள் மற்றும் மாஸ்டர்பிராண்ட், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; சாந்த பெர்னாண்டோ, தலைவர் - சந்தைப்படுத்தல் மற்றும் வணிகச் தொழிற்பாடு, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; லசந்த தெவரப்பெரும, குழுமத் தலைமைச் சந்தைப்படுத்தல் அதிகாரி, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; தாரக மதுசங்க, சிரேஷ்ட தயாரிப்பு மேலாளர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; முதித பிரேமரத்ன, துணைத் தலைவர் - டிஜிட்டல் தளங்கள் மற்றும் பங்கான்மைகள், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; சுரேஷ் துமிந்துவர்தன, துணைத் தலைவர் - டிஜிட்டல் தொழில்நுட்பம், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; நதீ தென்னகோன், விநியோகச் சிறப்பு மேலாளர், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; நதீஷ் நாணயக்கார, தலைவர் - சூப்பர் அப் செயல்பாடுகள், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி; ஜது சிவபாதசுந்தரம், தலைவர் டிஜிட்டல் சந்தைப்படுத்தல், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி.
இலங்கையின் முதன்மை இணைப்புச் சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கை FinTech விருதுகள் 2026 இல் 'சிறந்த டிஜிட்டல் கொடுப்பனவுப் புத்தாக்கத்திற்கான' தங்க விருதை வென்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்குப் பாதுகாப்பான, வசதியான மற்றும் இலகுவாக அணுகக்கூடிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளை வழங்கியதன் மூலம், இலங்கையின் தேசிய டிஜிட்டல் கொடுப்பனவுச் சூழமைப்பை வலுப்படுத்துவதில் Dialog Pay ஆற்றிய முக்கிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Dialog Pay, MyDialog தளம் மற்றும் பிரத்யேக Dialog Pay App ஆகியவற்றின் மூலம் அன்றாட நிதிப் பரிவர்த்தனைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கிறது. வாடிக்கையாளர்கள் ஒரே டிஜிட்டல் தளத்தின் வாயிலாக QR கொடுப்பனவுகள், கட்டணக் கொடுப்பனவுகள், பணப் பரிமாற்றங்கள், வங்கிக் கணக்குகளை இணைத்தல், GovPay சேவைகள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட நிதிச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அறிமுகமான குறுகிய காலத்திற்குள், இலங்கையிலுள்ள 100,000 க்கும் அதிகமான விற்பனை நிலையங்களில் தனது QR கொடுப்பனவு ஏற்றுக்கொள்ளும் கட்டமைப்பை Dialog Pay விரிவுபடுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்குத் தடையற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளை உறுதிசெய்வதுடன், நாட்டின் வளர்ந்துவரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் வணிகர்கள் இன்னும் தீவிரமாகப் பங்கெடுக்கவும் உதவுகிறது.
இந்த அங்கீகாரம் குறித்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி சுபுன் வீரசிங்க கருத்துத் தெரிவிக்கையில், "இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில், மக்களையும் வணிகங்களையும் சேவைகளையும் இணைப்பதில் நம்பிக்கையான மற்றும் எளிதில் அணுகக்கூடிய டிஜிட்டல் கொடுப்பனவுத் தீர்வுகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. மக்களின் அன்றாட வாழ்க்கையை இலகுவாக்கும் அதேவேளையில், பரந்த பொருளாதாரப் பங்களிப்பையும் வளர்ச்சியையும் ஆதரிக்கும் டிஜிட்டல் தளங்களை உருவாக்குவதில் டயலொக் கொண்டுள்ள அர்ப்பணிப்பையே இந்த அங்கீகாரம் பிரதிபலிக்கிறது," எனக் குறிப்பிட்டார்.
இலங்கை நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு அன்றாடப் பரிவர்த்தனைகளை மேலும் எளிமையாகவும் வசதியாகவும் மாற்றும் டிஜிட்டல் தீர்வுகளை முன்னெடுப்பதில் டயலொக் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இவ்விருது மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பயனர்கள் MyDialog தளம், Dialog Pay App மற்றும் dialog.lk/dialog-pay ஆகியவற்றின் ஊடாக Dialog Pay இன் சிறப்பம்சங்களை அறிந்துகொள்ள முடியும்.